தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ந்த மாவட்டங் களாக கிளாஸ் ‘ஏ’யில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களும், வளரும் மாவட்டங்களாக கிளாஸ் ‘பி’யில் கோவை, திருப்பூர் கரூர் போன்ற மாவட்டங்களும், பின்தங்கிய மாவட்டங்களாக கிளாஸ் ‘சி’யில் மதுரை, தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களும் இடம்பெற்றுள் ளன. தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ந்த, வளரும் மாவட்டங்களில் தொழில் தொடங்குவோருக்குப் பதிவுக் கட்டணத்தில் 50 சதவீதம் வரை தள்ளுபடியும், பின்தங்கிய மாவட்டங்களில் 100 சதவீதம் வரை பதிவுக் கட்டணத்தில் தள்ளுபடியும் செய்யப்படுகிறது. இதுதவிர நீண்டகாலக் கடன்களுக்கு வட்டி மானியம், அறிவுசார் சொத்துரிமை பதிவு என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அனைத்துப் பெரிய நிறுவனங்களும் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களையே மையம் கொண் டுள்ளன.
கருத்துகள்
கருத்துரையிடுக