வைகோ மகனுக்கு பொதுக்குழு உறுப்பினர் பதவியே போதுமானது.


வைகோ மகன் வழிநடக்க கிளம்புகிறது எதிர்ப்பு 


''ம.தி.மு.க.,வை உடைக்கும் நோக்கம் எனக்கில்லை,'' என, அக்கட்சியிலிருந்து விலகிய, மாநில இளைஞரணி செயலர் ஈஸ்வரன் கூறினார்.ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ மகன் துரைக்கு, தலைமை நிலைய செயலர் பதவி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, ம.தி.மு.க., இளைஞரணி மாநில செயலர் ஈஸ்வரன்,  அக்கட்சியிலிருந்து விலகினார்.
வாரிசு அரசியலை எதிர்த்து குரல் கொடுத்த வைகோவை, கட்சியிலிருந்து வெளியேற்றிய போது, அவருக்காக நீதி கேட்டு, ம.தி.மு.க.,வில் இணைந்தேன். 
கடந் 28 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்தவர்களில் ஒருவருக்கு கூட, தலைவர் பதவிக்கு தகுதி இல்லையா? கட்சியில் தலைவர் இருக்கும்போது, அடுத்த தலைவராக அவரது மகன் வழிநடத்துவார் என்று முடிவு எடுப்பதை, என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அது ஜனநாயகம் அல்ல என்று கூறினார்.
 வைகோவின் மகன் தலைமைச் செயலாளர்களாக வருவதற்கு கட்சியில் பலத்த எதிர்ப்பு உள்ளது என்னதான் வைகோ 106 பேரில் 104 பேர் வாக்களித்ததாக கூறினாலும் ,கட்சியின் அவைத் தலைவரே இதற்கு ஒத்துக் கொள்ளாமல் கூட்டத்தை புறக்கணித்து இருக்கிறார் .18 முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்து இருக்கிறார்கள். இதன் மூலம் துரை வைகோவுக்கு எந்த அளவு எதிர்ப்பு உள்ளது என்பது புலனாகிறது. வைகோ கூட பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை என்னுடைய மகன் அரசியலுக்கு வரமாட்டான் .நான் என்னுடைய அப்பா சேர்த்து வைத்த  வீட்டில் ஓய்வெடுக்க சென்று விடுவேன் என்று கூறினார்.  தொண்டர்களின் ஆதரவு இருப்பதாக கூறி தன்னுடைய மகனைக் கொண்டு வந்திருக்கிறார். தலைமைக் கழக செயலாளர் பதவி என்பது கிட்டத்தட்ட மூன்றாம் இடத்துக்கான பதவி. திமுகவில் துரைமுருகன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புவரை வகித்து வந்த பதவி .அவர் அந்த பதவியில் வருவதற்கு 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவராக இருந்தார். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாகவே மதிமுகவில் அறியப்பட்ட துரை வைக்கும் இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்தது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வைகோ பொதுக்குழு உறுப்பினர் பதவியை மட்டுமே அவருக்கு கொடுத்திருக்கலாம் .மதிமுகவின் தலைவர் பதவியை எதிர்காலத்தில் தாங்களாகவே கொடுத்திருப்பார்கள் . வைகோவும் இப்படி ஒரு அவப்பெயரை தேடி இருக்க வேண்டிய தேவையில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு