அதிமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
அதிமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும், பிஜேபி தமிழ்நாட்டில் அதிமுகவின் இடத்தை பிடிக்குமா என்றெல்லாம் கேள்விகள் எழுந்து வருகின்றன. பிஜேபி 2014 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நிற்கும் திறன் இல்லாத கட்சியாகவே இதுவரை இருக்கிறது. வேறு மாநிலங்களில் பிஜேபி கூட்டணி வைத்து விட்டு பின்னர் அந்தக் கட்சிகளை கவிழ்த்து ஆட்சியைப் பிடித்ததை சிலர் எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் அந்த மாநிலங்களில் அவர்களுக்கு இருந்த அளவு வாக்குவங்கி தமிழ்நாட்டில் இல்லை. குறிப்பாக பிகாரில் அவர்களுக்கு நல்ல வாக்கு வங்கி இருந்தது.அவர்கள் அங்கு ஜார்ஜ் பெர்னாண்டஸ், ராம்விலாஸ் பஸ்வான் போன்றவர்களுடன் கூட்டணி வைத்து வந்தார்கள் .பின்னர் அந்த கட்சிகள் வலுவிழந்த போது ,லாலு பிரசாத்தின் காட்சி ஊழல் கட்சி என்ற முத்திரை குத்தப்பட்டு மக்களால் ஏற்கனவே புறக்கணிக்கப்பட்டு இருந்ததால், பிஜேபி பீகாரில் ஆட்சியைப் பிடிக்கும் அளவு வலிமை பெற்றது. அதேபோல் மேற்கு வங்கத்தில் 96ம் ஆண்டு தேர்தலில் பிஜேபி 10 சதவீத வாக்குகளைப் பெற்றது. பின்னர் மம்தா உடன் கூட்டணி வைத்தது. .அவர்கள்கூட மம்தா பானர்ஜியின் கட்சியை கவிழ்த்துவிட்டு முன்னுக்கு வர விரும்பவில்லை. மம்தா உடன் கூட்டணி தொடர விரும்பினார்கள். ஆனால் முஸ்லிம்களின் ஓட்டு கிடைக்கும் என்று நினைத்து மம்தா காங்கிரசுடன் கூட்டணி வைத்தார். அதேநேரத்தில் இடதுசாரிகள் அங்கு வீழ்ந்து கொண்டே வந்தார்கள். மேலும் பிஜேபி மத்தியில் ஆளும் கட்சியாக இருந்ததால் பணபலம் மற்றும் அதிகாரத்தின் மூலம் அவர்கள் எதிர்க்கட்சியானார்கள். இந்நேரம் மம்தா பானர்ஜி உடனான கூட்டணி தொடர்ந்திருந்தால் பிஜேபி எதிர்க்கட்சியாக வந்திருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் பிஜேபி அந்த அளவு வலுவான கட்சி கிடையாது. அவர்கள் 1996 தேர்தலிலேயே 10 சதவீத வாக்குகள் பெற்றது கிடையாது. அவர்கள் கடைசியாக தனித்து போட்டியிட்ட தேர்தலில் 2.9% வாக்குகள் மட்டுமே பெற்று இருக்கிறார்கள். அதுவே அவர்களின் பலம் எனவே அவர்களால் ஆட்சியை பிடிப்பது என்பது முடியாத காரியம். அதிமுக பலவீனமடைந்தாலும் 2026 இல் அதுவே எதிர்க்கட்சியாக வரும். அதிமுக உண்மையாகவே வலுவிழந்து கொண்டேசென்றால். 2031இல் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த பத்தாண்டுகளுக்குள் பிஜேபி தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக வருமா? என்றால் அது சாத்தியமில்லை. வாக்கு சதவிகிதத்தை வேகமாக வளர்த்து வரும் நாம் தமிழர் வேண்டுமானால் அடுத்த பத்து ஆண்டுகள் கழித்து எதிர்க்கட்சியாக வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதே உண்மை. இருந்தாலும் பிஜேபி மத்திய ஆளும் கட்சியாக பணபலம் மற்றும் அதிகார பலத்துடன் இருப்பது ,அண்ணாமலை அவர்கள் மாநில அரசுக்கு எதிராக கேள்விக் கணைகளைத் தொடுத்து எதிர்க்கட்சிகளை போன்று செயல்பட முனைவது போன்றவை பிஜேபி தமிழ்நாட்டில் வருங்காலத்தில் திமுகவிற்கு மாற்று சக்தியாக வருவதற்கு வாய்ப்புள்ளதாக நிறைய பேர் கூறுகிறார்கள் ஆனால் அது சாத்தியமில்லை அதற்கு முதலில் அவர்கள் தனித்து நிற்க வேண்டும். தற்போது வரை அதிமுகவே திமுகவிற்கு மாற்று சக்தியாக உள்ளது. இதே போன்றதொரு தோல்வியை 96 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் பின்னர் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெற்றது .ஆனால் அவர்கள் இரண்டு ஆண்டுகள் கழித்து 98ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாமக ,அதிமுக, பிஜேபி மற்றும் உதிரிக் கட்சிகள் ஆகியவற்றை இணைத்து 31 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள். அதிமுக மீண்டு வரவே வராது என்று கூறப்பட்ட காலத்தில் இந்த வெற்றியானது மீண்டும் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வராக வர வாய்ப்பு இருப்பதை எடுத்துக் காட்டியது. அதுமட்டுமல்ல அந்த தேர்தலில் ரஜினிகாந்த் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அப்படியிருந்தும் ரஜினியின் ஆதரவை தாண்டியும், அதிமுக கூட்டணி இந்த தேர்தலில் வெற்றி பெற்றது. இதுவரை ரஜினி அரசியல் வராமல் போனதற்கு இதுவும் முக்கிய காரணம். எனவே 96 சட்டமன்ற தேர்தலில் வெறும் நான்கு தொகுதிகளை பெற்ற அதிமுக, உள்ளாட்சித் தேர்தலில் தோற்று இருந்தாலும் ,அடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து சுமார் 31 இடங்களில் வெற்றி பெற்று மீண்டு எழுந்து வந்தது. அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் வருங்காலத்தில் வலுவான கூட்டணி மற்றும் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் மீண்டெழுந்து வரமுடியும் .ஜெயலலிதா மீதும் அந்த காலத்தில் வாழ்க்குகள், கைது நடவடிக்கைகள் இருந்தன. ஆனால் அதை எல்லாம் தாண்டி அவர் வெற்றி பெற்றார், அதேபோல் எடப்பாடி பழனிசாமி முனைப்புடன் பணியாற்றுவாரானால், கட்சியின் ஒத்துழைப்பும் அவருக்கு கிடைக்குமானால் ,அதிமுகவை வீழ்த்துவது அல்லது அதிமுகவுக்கு மாற்றாக பிஜேபி, நாம்தமிழர் போன்றவை வருவது மிகவும் கடினம். அதிமுககாவின் உட்கட்சிப் பூசல் இருந்தாலம் 2024 ஆம் ஆண்டு தேர்தல் வரை எடப்பாடி கட்சியின் தலைவராக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தற்போது பெயரளவில் கட்சியின் உச்ச பொறுப்பில் பன்னீர்செல்வம் இருந்தாலும் ,எடப்பாடி கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியோடு முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளவராகவும் இருக்கிறார் .எனவே எடப்பாடி 2024 வலுவான கூட்டணி அமைப்பது, அதிமுகவை எதிர்த்து சட்டமன்றத்தில் எப்படி செயல்படுவது, அறிக்கைகள் மற்றும் மக்களிடம் திமுகவின் ஆட்சி குறைபாடுகளை கொண்டு செல்வது போன்றவற்றை சரியாக செய்தால் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று வர முடியும். அதிமுகவின் எதிர்காலம் ஆனது 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி பிரிக்கும் வாக்குகள் மற்றும் உதிரிக் கட்சிகள் பிரிக்கும் வாக்குகளை பொறுத்து அமையும். ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரியும் போது ஆளும் கட்சி வெற்றி பெறும். குறிப்பாக 2016 தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிரான 15 சதவீத வாக்குகளை நாம்தமிழர், பிஜேபி, பாமக மற்றும் மக்கள் நல கூட்டணி போன்றவை பிரித்தனர். இதுவே திமுகவின் தோல்விக்கு வழி வகுத்தது. அதேபோல் 2006ஆம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் ஆளுங்கட்சிக்கு எதிரான எட்டு சதவீத வாக்குகளைப் பிரித்தால் திமுகவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியவில்லை. எனவே எடப்பாடி முடிந்த அளவு வாக்குகளைப் பிரிக்கும் மக்கள் நீதி மையம், நாம் தமிழர் போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்வது நல்லது. நாம் தமிழர் கூட்டணிக்கு வருவதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும் ,அவர் குறைந்தது பாமாக மக்கள் நீதிமன்றம் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முயல வேண்டும். ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிவதை எவ்வளவு தடுக்க முடியுமோ அவ்வளவுக்கு தடுக்க வேண்டும் அப்போதுதான் அதிமுக வரும் வளமான எதிர்காலம் அமையும்.
கருத்துகள்
கருத்துரையிடுக