எம்ஜிஆர் வைகோ துரோகிகளா? முழு பதிவு:

 எம்ஜிஆரும் வைகோவும் துரோகிகள் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார். அவருடைய கருத்து  கூட்டணி கட்சி தலைவரான வைகோவின் மனதை புண்படுத்தும் விதத்தில் இருக்கும் என்பது புலனாகிறது. எம்ஜிஆரை துரோகி என்கிறார்கள், திமுகவினர் எம்ஜிஆர் துவக்கம் முதலே திமுகவில் இருந்து விலகி தனிக்கட்சி துவக்குவதற்கு திட்டம் வைத்திருந்தார் என்பது அவரின் செயல்பாடுகளிலிருந்து தெரிகிறது. இங்கு அனைவரும் கூறுகிறார்கள், எம்ஜிஆர் கட்சி துவங்கிய முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றார். அவர் தேர்தலில் தோல்வியை சந்திக்காதவர் என்று, ஆனால் மற்ற நடிகர்கள் தோற்று அரசியலை விட்டு வெளியே போகிறார்கள் என்றும் கூறுகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் முதல் தேர்தலில் அவர் தனியாக சந்தித்து இருந்தால் , அதாவது 57 ஆம் ஆண்டு தேர்தலில் எம்ஜிஆர் தனியாக நின்று இருந்தார் என்றால் ,அவர் திமுக வாங்கியதில் பகுதி வாக்குகளைக் கூட அல்லது விஜயகாந்த்  முதல் முறையாக போட்டியிட்ட போது வாங்கிய 8 சதவீத வாக்குகளை கூட பெற்றிருக்க மாட்டார். 

அப்போது நடிகன் நாடாளலாமா என்ற ஒரு புகழ்பெற்ற வாக்கியம் இருந்தது.  கருணாநிதி கூட சிறந்த மேடை நாடக நடிகராக இருந்தாலும் அவர் திரைப்படங்களில் நடிக்காததற்கு அதுவே முக்கிய காரணமாகும். நடிகர்  நாடாளலாமா என்று அப்பொழுது நடிகர்களைப் பற்றிய தரக்குறைவான கண்ணோட்டம் இருந்தது. அதை எம்ஜிஆரும் உணர்ந்திருந்தார் அதுமட்டுமல்ல, அப்போது காமராஜரின் நல்லாட்சியில் கல்வித்துறை மற்றும் தொழில்துறையில் தமிழ்நாடு வீறுநடை போட்டுக்கொண்டிருந்து.காமராஜரை எதிர்த்து எம்ஜிஆர் என்றால் சிரிப்பார்கள் .அப்போது அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஆனது காமராஜர் தமிழர் என்றாலும், அவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைமை புதுதில்லியில் உள்ளதால் அவர்களை ஆரியர்கள் என்று பிரசாரம் செய்து காமராஜரை வீழ்த்த முனைந்தது .எம்ஜிஆர் அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்தி இருக்கிறார், அவர் சினிமாவில் துவக்கத்தில் வெற்றி பெறவில்லை. 1937 இல் சினிமாவில் நுழைந்த எம்ஜிஆர் கதாநாயகனாக உயர 10 ஆண்டுகள் எடுத்துக் கொண்டு 1947இல் தான் கதாநாயகன் ஆனார. 1947 முதல் சிறு, குறு படங்களில் நடித்துவந்த எம்ஜிஆர் 52 மலைக்கள்ளன் கொடுத்த பிறகு முன்னணி நடிகரானார். எம்ஜிஆர் இதிலிருந்தே பாடம் பெற்றிருப்பார் என்று நினைக்கிறேன். எந்த ஒரு துறையாக இருந்தாலும் நாம் அதில் முன்னணி இடத்துக்கு வருவதற்கு பத்து பதினைந்து ஆண்டுகள் பிடிக்கும் என்பதை எம்ஜிஆர் நன்றாக உணர்ந்திருந்தார். அதுமட்டுமல்ல நடிகர் நாடளவே முடியாது, கூடாது. அவர்களுக்கு நடிப்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்ற எண்ணம் மேலோங்கி இருந்த காலம் அது .இன்று கேரளாவில் எப்படி நடிகர்கள் நாடாள முடியாத சூழ்நிலை இருக்கிறதோ அதேபோல் அன்று தமிழ்நாடு மட்டுமல்ல உலகெங்கிலும் நடிகர்கள் யாரும் நடாண்டதாக சரித்திரம் இல்லை. அந்த நிலையில் எம்ஜிஆர்  ஏற்கனவே 35 வயதை எட்டி இருந்தார், அப்போது எம்ஜிஆர் தனிக்கட்சி துவங்கினாலும் சிரிப்பார்கள். அதுமட்டுமல்ல சினிமா ,அரசியல் என்று இரட்டை குதிரைகளில் அவரால் தனியாக  பயணம் செய்ய முடியாது. எனவேதான் அவர் அப்போது விரைவாக முன்னேறிக் கொண்டிருந்த திமுகவில் இணைந்தார் .

திமுகவானது தமிழ் தேசியத்தை முன்வைத்து முன்னேறியது ,பெயரளவில் அவர்கள் திராவிடம் என்று கொண்டு இருந்தாலும் அது தமிழ் தேசியத்தை முன்வைத்து முன்னேறிக் கொண்டிருந்தது .மலையாளியான எம்ஜிஆர் தன் மீதான விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக திமுகவில் இணைந்தார் .நீங்கள் ஏன் மலையாளியை கொண்டாடுகிறீர்கள், தமிழரான சிவாஜி அதே இடத்தில் வைத்து ஏன் கொண்டாடக் கூடாது, என்பன போன்ற கோரிக்கைகள் எழுவதை எம்ஜிஆர் இதன்மூலம் தவிர்த்தார. ரஜினிக்கு மூன்பு எம்ஜிஆர் தான் வேற்று மொழி பேசும் தமிழ் உச்ச நடிகர். கண்டிப்பாக  தாய் மொழி மலையாளம் ஆக இருப்பது தமிழ் சினிமாவில் போராடுவதற்கு தனக்கு ஒரு தடையாக இருப்பதற்கான வாய்ப்பு உண்டு அல்லது தன் மீதான விமர்சனங்கள் வருவதற்கான வாய்ப்பு உண்டு என்பதை எம்ஜிஆர் நன்றாகவே உணர்ந்திருந்தார். எனவேதான் எம்ஜிஆர் தமிழ்ப்பற்று தமிழ் தேசியத்தை ஓங்கி பிடித்துக் கொண்டிருக்கும் திமுகவில் இணைந்தார் .


எம்ஜிஆர் அடிப்படையில் காங்கிரஸ் விசுவாசி அவர் கதர் ஆடைகள் உடுத்தியிருக்கிறார், இருந்தாலும் அவர் திமுகவில் இணைவதற்கு முக்கியமான காரணங்கள் இரண்டு. எம்ஜிஆர் காங்கிரஸில் இணைந்தால் அவரை பிரச்சாரத்திற்கு மட்டும் பயன்படுத்துவார்கள், சிவாஜிக்கு ஏற்பட்ட நிலைமைதான் அவருக்கு ஏற்படும். முதல் படத்திலேயே வெற்றி நாயகனாக உருவான சிவாஜி அரசியல் மற்றும் வாழ்க்கை பாடத்தை அவ்வளவு எளிதாக கற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே தான் அவர் காங்கிரசில் இணைந்து அரசியலில் தோல்வி பெற்ற நடிகர் ஆனார் , துவக்க காலத்தில் போராட்டத்தை சந்தித்து வந்த எம்ஜிஆர் வாழ்க்கை பாடத்தை நன்றாக கற்று வந்தார், எனவேதான் அவர் காங்கிரசை தவிர்த்தார். காங்கிரஸில் சேர்ந்தால் அவரால் எம்எல்ஏ ஆவது கூட கடினம்தான், ஆந்திராவின் முன்னாள் முதல்வரான என்டிஆர் கூட காங்கிரஸ் கட்சியினரிடம் தனக்கு ஒரு எம்பி பதவி தரவேண்டும் என்று கெஞ்சியதாகவும், அவர்கள் தராததால் கோபித்துக் கொண்டு போய் தனிக்கட்சி கண்டு ஆட்சியை பிடித்த முதல்வரானதும் ஏற்கனவே நடந்த சம்பவம், இதை முன்கூட்டியே உணர்ந்திருந்தார் எம்ஜிஆர் மற்றும் அவர் திமுகவில் இணைய இரண்டாவது காரணம் அவருடைய தாய்மொழி மலையாளம் ஆக இருந்தது .தமிழ்ப்பற்று, தமிழ் தேசியத்தை தூக்கிப் பிடிக்கும் திமுகவில் இணைவதன் மூலம்  தன்மீதான மலையாளி என்ற விமர்சனத்தை உடைக்க முடியும் என்று எம்ஜிஆர் உறுதியாக நம்பினார், அதுவும் நடந்தது. 


எம்ஜிஆர் ஆதரவு தெரிவித்த 1957ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வெறும் 15 இடங்களில் வெற்றி பெற்றது. எம்ஜிஆர் தனியாக களம் கண்டிருந்தால் அவர் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றிருக்க மாட்டார்.  உதாரணத்திற்கு 57 சட்டமன்ற தேர்தலில் அவர் தனிக்கட்சி தொடங்கி இருந்தால், அவர்  ஒன்றரை சதவீத வாக்குகளை கூட பெற்றிருக்க முடியுமா என்பது சந்தேகமே, காரணம் அப்போது நடிகர்கள் அரசியல்வாதிகள் என்பது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. அதன்பின்னர் எம்ஜிஆர் திமுகவின் பிரச்சார மேடைகளை தனக்கான மேடையாக பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார். தன்னை ஒரு  12 ஆண்டு அனுபவம் கொண்ட அரசியல்வாதியாக மாற்றியபின் 1952 இல் திமுகவில் இணைந்த எம்ஜிஆர் 1964 இல திமுகவில் இருந்து விலகி தனிக்கட்சி துவங்குவதற்கு திட்டமிட்டார் .சினிமாவில் சுமார் 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் உச்ச நடிகராகிவிட்டார் அதேபோல் நாம் அரசியலிலும் ஆகி இருப்போம் என்று நினைத்திருந்தார், எனவேதான் எம்ஜிஆர் அண்ணாவுடன் பிரச்சனை செய்ய ஆரம்பித்தார் , தனக்கு வழங்கப்பட்ட எம்எல்சி பதவியையும் அவர் விலகினார் .அப்போது ஏற்பட்ட ஒரு ஆச்சரியமான நிகழ்வில் 1964-ல் வெளியான எம்ஜிஆரின் என்கடமை படம் தோல்வியடைந்தது. இது அவருக்கு உண்மை நிலையை  உணர்த்தியது. எம்ஜிஆரால் திமுக அடைந்த நன்மையை விட அண்ணாவின் தொண்டர்களாகளால் எம்ஜிஆர் அடைந்த நன்மை அதிகம் என்பதை இந்த திரைப்படத்தின் தோல்வி எம்ஜிஆருக்கு உணர்த்தியது. அண்ணாவின் தொண்டர்களே எம்ஜிஆர் அண்ணாவின் கொள்கைகளை உயர்த்திப் பிடித்தால் எம்ஜிஆர் படங்களை பார்த்தனர் என்பதை எம்ஜிஆர் புரிந்து கொண்டார். திரைப்படம் மூலம் வரும் வருமானமானது முழுக்க முழுக்க தன்னுடைய ரசிகர்களிடமிருந்து வருவதில்லை, திமுக தொண்டர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என்று மூன்று தரப்பிடம் இருந்து வருவதை எம்ஜிஆர் உணர்ந்துகொண்டார். 


திமுகவில் இருந்து விலகுவது தன்னுடைய சினிமா அரசியல் இரண்டின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்பதை உணர்ந்து மீண்டும் திமுகவில் தொடர முடிவு செய்தார். அண்ணாவும் பெருந்தன்மையாக எம்ஜிஆரை ஏற்றுக்கொண்டார். அதுவரை திமுகவுக்கு வந்த கூட்டத்தினரில் எம்ஜிஆரின் தொண்டர்கள் நிறைய வந்ததாகக் கூறப்படுவதுண்டு, ஆனால் கூட்டத்தை மட்டும் வைத்தே அரசியலில் வெற்றி பெற முடியாது .கூடுகிற கூட்டம் எல்லாம் சினிமா நடிகர்களை பார்ப்பதற்காக வேண்டுமானால் வருவார்களே தவிர வாக்களிக்க மாட்டார்கள், அதிலும் ஒரு மூன்றில் ஒரு பங்கு கிடைப்பதே பெரிய விஷயம் என்பதை எம்ஜிஆர் உணர்ந்து வைத்திருந்தார். எனவே அவர் மீண்டும் திமுகவிற்காக உழைக்க ஆரம்பித்தார். பெரிய மனதுடன் எம்ஜிஆரை ஏற்றுக்கொண்டார் அண்ணா. இன்னொன்று எம்ஜிஆர் என்ன தொல்லை கொடுத்தாலும்  அண்ணா கண்டு கொள்ளாததற்கு காரணம் , எம்ஜிஆர் மீது நடவடிக்கை எடுத்தால் எம்ஜிஆரை தனக்கு இணையான தலைவராக ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடும். எனவேதான் எம்ஜிஆர், கருணாநிதி போன்றவர்கள்  தொல்லை கொடுத்தாலும் அண்ணா அவர்களை கட்சியை விட்டு நீக்கி அவர்களை வளர்த்து விட விரும்பவில்லை.  அவர்களுடன் எல்லாம் போட்டி போடுவது தனக்கு அவமானமாகி விடும், தன்னை விட திறமை குறைந்தவர்கள் தனக்கு இணையாக தேர்தலில் நிற்பார்கள் என்பதை உணர்ந்து வைத்திருந்தார். எனவேதான் அவர்கள் அடிக்கடி தொல்லை கொடுத்தாலும் அவர்களை தன்னுடனேயே வைத்திருந்தார். இல்லையெனில் வெளியே போய் தனக்கு போட்டியாக அவர்கள் வர முயற்சிப்பார்கள், அது தன்னுடைய நற்பெயருக்கு களஙகம் விளைவிக்கும் என்பதை  நன்றாகவே உணர்ந்திருந்தார்.

1967ஆம் ஆண்டு தேர்தலில் கூட எம்ஜிஆர் கழுத்தில் குண்டடிபட்டு, அதன் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தேர்தல் விளம்பரத்திற்கு பயன்படுத்தியதால் தான் திமுக வென்றது என்று கூறுகிறார்கள்.  அது ஒரு சிறு பங்களிப்பை வேண்டுமானால் செய்து இருக்கலாம், ஹிந்தி திணிப்பு மற்றும் அதை ஒட்டிய இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் இல்லையெனில் அந்த தேர்தலில் எம்ஜிஆருக்கு குண்டடிபட்ட புகைப்படத்தால் எந்த பயனும் கிடைத்திருக்காது. திமுக தோற்று இருக்கும்.1962 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாக வந்துவிட்டது, அப்போது காமராஜர் முதலமைச்சராக இருந்தார்,சுமார் ஓராண்டு கழித்து காமராஜர் முதல்வர் பதவியை விட்டு விட்டு கட்சியை வளர்ப்பதற்காக சென்றதால், அதன் பின்னர் வந்தவர் பக்தவச்சலம் அவர் காமராஜர் அளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாதவர் மட்டுமல்ல, அவருடைய ஆட்சி காலத்தில் உணவு பஞ்சம், இந்தியை தமிழ்நாட்டில் கொண்டுவருவதில் அவரே முன் நின்று வேலை செய்தது ,இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நசுக்க பார்த்தது போன்றவை ஏற்கனவே ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையை தோற்றுவித்திருந்தது. எனவே எதிர்கட்சியான திமுக அதற்கான பலனை அறுவடை செய்வது இயல்பே. உணவு பஞ்சம் மற்றும் இந்தி எதிர்ப்பு போராட்டம் இல்லாமல், எம்ஜிஆருக்கு குண்டடிபட்ட புகைப்படம் மட்டும் வைத்து திமுக தேர்தலை சந்தித்து சந்தித்து இருக்குமானால் கடந்த தேர்தலில் சுமார் 50 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்ற திமுக 75 முதல் 80 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கும். மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை தொடர்ந்து இருக்கும். அதுமட்டுமல்ல இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்றவற்றில் பங்கேற்கும் துணிவு அற்றவர்  எம்ஜிஆர், இருந்தாலும் அவரின் தகுதியறிந்து எம்ஜிஆர் போன்றவர்களுக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இருந்து விலக்கு அளித்தார் அண்ணா.

1967 திமுக வென்றதற்கு தன்னுடைய குண்டடிபட்ட புகைப்படம் காரணமில்லை என்பதை எம்ஜிஆர் நன்றாகவே உணர்ந்திருந்தார் .எனவேதான் அவர் 1967 வென்றவுடன் தனிக் கட்சி துவங்கும் முடிவு ஏதும் வரவில்லை. கட்சிக்குள் கலகம் எதுவும் செய்யவில்லை, அண்ணா இறந்த பிறகு நெடுஞ்செழியன், கருணாநிதியை என்ற போட்டி வந்தபோது எம்ஜிஆரும் கருணாநிதிக்கு ஆதரவு தெரிவித்தார். ஏற்கனவே சினிமா துறையில் கோலோச்சிய கருணாநிதி முதலமைச்சராக ஆவது அடுத்த கட்டத்திற்கு முன்னேறி ஒரு நடிகரான தான் முதல்வர் ஆக உதவும் என்பதை எம்ஜிஆர் நன்றாகவே உணர்ந்திருந்தார்.எனவேதான் நெடுஞ்செழியனுக்கு பதிலாக கருணாநிதியை எம்ஜிஆர் ஆதரித்தார். இதன் மூலம் கட்சியின் பொருளாளர் பதவியை பெற்று கட்சியின் முக்கிய புள்ளியாகவும் உயர்ந்தார்.  பொருளாளர் பதவி கட்சியின் மூன்றாம் இடத்தில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் பதவியாகும். தலைவர், பொதுச் செயலாளரை அடுத்த பதவி. இதன் மூலம் எம்ஜிஆர் கட்சியின் மூன்றாவது முக்கிய நபர் ஆனார். நெடுஞ்செழியன் முதலமைச்சராக இருந்தால் எம்ஜிஆருக்கு இந்த பதவி வழங்கப்பட்டு இருக்காது என்பதே உண்மை. 

அதன்பிறகும் எம்ஜிஆர் 1971ஆம் ஆண்டு தேர்தல் வரை பொறுத்து இருந்தார் .அதற்கு காரணம் காமராஜரின் வருகை தான், காமராஜர் மத்திய அரசிலிருந்து, மாநில அரசியலுக்கு திரும்பியிருந்தார். காமராஜர்தான் 1971ஆம் ஆண்டு தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் என்று முடிவானதும் ,இந்த தேர்தலில் தனிக் கட்சி  தொடங்கவில்லை எம்.ஜி.ஆர். திமுக,காமராஜர் மோதலில் தான் காணாமல் போகும் வாய்ப்பு உண்டு என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தார் .எனவேதான் அவர் 1971-ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் இணைந்து சந்தித்தார். ஆனால் இந்த தேர்தலில் திமுக தோற்கும் என்று அனைத்து கணிப்புகளும், ஊடகங்களும் கூறினார்கள். அதேபோல் எம்ஜிஆரும் கணித்திருந்தார் எனவேதான் அவர் அந்த தேர்தலில் பிரச்சாரம் செய்யவில்லை. இதற்கு முன்பு திமுக வளர்ந்து வரும் நேரத்தில் தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் பிரச்சாரம் செய்த எம்ஜிஆர், ஆட்சியை பிடித்த பிறகு 1971 ஆம் ஆண்டு தேர்தலில் தான் பிரச்சாரம் செய்து, திமுக தோற்றாலும் அது  தனக்கு ஏற்பட்ட தோல்வியாக உன் கருதப்படும் என்று நன்றாக உணர்ந்திருந்தார் .இந்த காலத்தில் எம்ஜிஆர் சினிமா துறையில் உச்சத்தில் இருந்தார் .சினிமா கவர்ச்சி  தாண்டி எம்ஜிஆர் மற்றும் திமுகவை தோற்கடிக்கும் வலிமை காமராஜருக்கு இருந்ததை எம்ஜிஆர் உணர்ந்திருந்தார்.எனவே தான் அவர் 1971ஆம் ஆண்டு தேர்தலில் பிரச்சாரம் செய்யவில்லை .இதன் மூலமாக ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம் என்று திட்டம் வைத்திருந்திருப்பார் என்று நினைக்கிறேன். திமுக தோற்று காமராஜர் முதல்வர் ஆவார். இதன் மூலம் எம்ஜிஆர் பிரச்சாரம் செய்யாததால் தான் திமுக தோற்றது எந்த வாதம் திமுகவில் பிறக்கும். இது திமுகவில் கருணாநிதியின்  தலைமைப் பதவியை பறித்து விட்டு எம்ஜிஆர் தலைவரானால்  அடுத்த தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற வாதத்தை முன்வைக்கும் .அதன் மூலம் தான் திமுகவின் தலைவர் பதவிக்கு வரலாம் அல்லது திமுகவில் தன்னுடைய பிடியை மேலும் இறுக்கலாம் என்று எம்ஜிஆர் நினைத்திருந்தார். 

ஆனால் நிறைய தேர்தலில் தோற்று இருந்தாலும் கருணாநிதி இந்தத் தேர்தலில் தான் ஒரு ராஜதந்திரி என்பதை நிரூபித்தார். கள சூழ்நிலைகள் குறிப்பாக காங்கிரஸ் காமராஜர் அணி, இந்திரா காந்தி அணி என இரண்டாகப் பிளவுபட்டு இந்த தேர்தலை சந்தித்தது.இது கருணாநிதிக்கு ஒரு வாய்ப்பாக போய்விட்டது அப்படி இருந்தும் இந்த தேர்தலில் காமராஜரை ஜெயிப்பார் என்று கணிப்புகள் கூறின.அதையும் மீறி காமராஜர் தோற்க காரணம் 1971ஆம் ஆண்டு வங்கதேச போரில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தது. அது இந்திராவுக்கு பெரும் புகழைப் பெற்றுத்தந்தது. இது இந்திராவுக்கு தமிழ்நாட்டிலும் செல்வாக்கை ஏற்படுத்தினாலும், தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்கள் அனைவரும் காமராஜர் பின் சென்றதால் தமிழ்நாட்டில் அவர்கள் வலுவிழந்து போனார்கள். தமிழ்நாட்டில் இந்திராவுக்கு ஆதரவு இருப்பதை கருணாநிதி நன்றாக உணர்ந்து 1972இல் தேர்தல் வர வேண்டிய தமிழ்நாடு சட்ட மன்றத்தை கலைத்து விட்டு 1971ஆம் ஆண்டு தேர்தலை நடத்தினார். அந்தப் போர் வெற்றியே தமிழ்நாட்டில் திமுகவுக்கு கைகொடுத்தது. இந்தத் தேர்தலுடன் காங்கிரசைக் கொண்டே காங்கிரஸின் கதையை முடித்தார் கருணாநிதி .இந்த தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஒருநாளும் காங்கிரஸ் ஆனது ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ள கட்சியாக பார்க்கப்பட்டது இல்லை. இந்தத் தேர்தல் பற்றி கண்ணதாசன் அவர்களே கருத்து தெரிவித்திருக்கிறார் ,அப்போது இந்திரா காங்கிரஸார் தன்னை தேர்தல் பணி செய்ய அழைத்ததாகவும், அப்போது இந்திரா காங்கிரசுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்ததை தான் உணர்ந்ததாகவும், ஆனால் அதற்குரிய தலைவர்கள் அவர்களிடத்தில் இல்லை என்பதை காமராஜரை ஒரு சில இடங்களில் கூறியிருக்கிறார். அப்படிப்பார்த்தால் இந்திராவின் செல்வாக்கை வைத்து கருணாநிதி 1971இல் வெற்றி பெற்றதோடு தமிழ்நாட்டில் உண்மையாக கங்கிரஸான காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு முடிவுகட்டி ,இந்திரா காங்கிரஸ், காமராஜர் காங்கிரஸ் இணைந்த பின்னும் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தலை எடுக்காமல் செய்துவிட்டார். 

இதன் பின்னரே எம்ஜிஆர் துணிவு  பெற்று இனிமேல்  காங்கிரஸ் பிளவு பெற்றிருப்பதால், காங்கிரஸ் ஒருநாளும் நமக்குப் போட்டியாக வர முடியாது, கருணாநிதியை எதிர்கொள்வது தனக்கு எளிதாக இருக்கும் என்பதை எம்ஜிஆர் நன்றாக உணர்ந்து வைத்திருந்தார். எனவேதான் அவர் தனக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி கேட்டு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். கருணாநிதியும் கொடுத்திருந்தாலும் அது எம்ஜிஆருக்கு பெரிய தொல்லையாக மாறியிருக்கும், பெரிய அனுபவம் இல்லாத எம்ஜிஆர் சுகாதாரத்துறை போன்ற முக்கிய துறைகளை சரியாக கையாண்டு இருக்க முடியாது .எம்ஜிஆரின் திரைப்பட வாழ்க்கையும் முடிவுக்கு வந்திருக்கும் .ஆனால் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது எம்ஜிஆருக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை ,எனவே  பொருளாளராக கட்சியின் கணக்கு வழக்குகளை கவனித்து வந்த எம்ஜிஆர் கணக்கு கேட்டார் .அதன்பிறகு கட்சியைவிட்டு நீக்கப்பட்டார் .அதன் பின்னர் நடந்த 1972 மாண்டு திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்ஜிஆர் 50 சதவீத வாக்குகளைப் பெற்று கருணாநிதி, இந்திரா காமராஜர் ஆகியோரின் வேட்பாளர்களை தோற்கடித்தார் .இதன் மூலம்தான் தான் அடுத்த முதல்வர் என்பதை எம்ஜிஆர் மக்களுக்கு உணர்த்தினார். 

இங்கே ஒன்றை நோக்கவேண்டும், எம்ஜிஆர் மட்டுமல்ல கருணாநிதி ,அண்ணா போன்றவர்கள் கழகத்தில் வரும்போதே பல்வேறு நோக்கங்களுடன் வந்தவர்கள்தான். குறிப்பாக அண்ணா அவர்கள் பெரியாருடன் சேரும்போதே தேர்தல் லட்சியத்துடன் வந்தவர் என்பது அவருடைய பிற்கால அரசியலை பார்க்கும்போது தெரிகிறது. பெரியாரின் தனிப்பட்ட வாழ்வை விமர்சித்து அவர்கள் தனிக்கட்சி துவங்கினார்கள் .பெரியார் கூட அப்போது சரியான பதில் அளித்திருந்தார, நாங்கள் இருவருக்குமே மேஜர் அப்படி இருக்கும்போது எங்கள் திருமணத்திற்கு எந்த தடையும் இல்லை, தாங்கள் இருவரும் விருப்பப்பட்டுதான் திருமணம் செய்கிறோம் என்று சட்டப்படி சரியான காரணத்தை கூறி இருந்தார். ஆனால் அண்ணா பிரிந்து சென்ற பின்னர் திமுக கூட்டத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டாடுமா? இல்லையா என்று வாக்கெடுப்பு நடைபெற்றது .அப்போது கூட நிறைய பேர் தேர்தல் அரசியலில் பங்கேற்க வேண்டாம், சமூக இயக்கமாகவே இருக்க வேண்டும் என்று வாக்களித்தார்கள். அதை அண்ணா போன்ற திமுக தலைவர்கள் தான் மாற்றி போட்டு தேர்தலில் பங்கேற்றதாகாக நிறைய பேர் கூறுகிறார்கள் என்று  செய்திகள் உண்டு. அப்படிப் பார்த்தால் அண்ணா கூட அரசியல் இயக்கமாக திராவிடர் கழகம் மாறவேண்டும், பெரியாரிடம் எடுத்துக்கூறி மாற்றலாம் என்று வந்திருப்பார் .தன்னுடைய நோக்கம் திராவிடர் கழகத்தில் நிறைவேறாது என்று அறிந்து,அவர் தனிக்கட்சி கண்டு முதல்வரானார். அதற்காக அவரை துரோகி என்று கூற முடியாது.

 அதே போல் தான் கருணாநிதி அவரும் திமுகவின் தலைவராக வேண்டும் என்று நினைத்து வந்தார். அண்ணா, எம்ஜிஆர் போல் தனிக்கட்சி துவங்கி நடத்தும் வலிமை இல்லாதவர் என்றாலும் கருணாநிதி திமுகவை கைப்பற்ற வேண்டும் என்பது துவக்கத்திலேயே அவருடைய நோக்கமாக இருந்தது. இதை அவர் தன்னுடைய உழைப்பின் மூலம் நிறைவேற்றினார். சினிமா துறை மற்றும் தன்னுடைய பரப்புரைக் கூட்டங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி அதை நிறைவேற்றிக் கொண்டார் .அண்ணா தன்னுடைய தன்னுடைய சீடரான நெடுஞ்செழியன் தனக்குப் பிறகு முதல்வராக வரவேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்திருந்தார். அதை மீறி கருணாநிதி முதலமைச்சர் ஆனார். அதற்காக அண்ணாவின் வாக்கை மீறிய  கருணாநிதி  துரோகி என்றும் நெடுஞ்செழியன் அணியினரும் குற்றம்சாட்ட முடியாது ,அவருடைய உழைப்பு மற்றும் முயற்சியின் மூலம்  கருணாநிதி திமுகவின் தலைவரானார்.

 அதேபோல் எம்ஜிஆரும் துவக்கத்தில் தான் தமிழ் தேசியத்தை தாங்கிப்பிடிக்கும் திமுக மலையாளியான தமக்கு உதவியாக இருக்கும் என்று நம்பினார். மேலும் அது தன்னுடைய அரசியல் ஆசைக்கும் உதவியாக இருக்கும் என்று நம்பினார். ஆனால் திமுகவை கைப்பற்றுவது சினிமா நடிகரான தனக்கு  முடியாத காரியம் என்பதை எம்ஜிஆர் உணர்ந்தே இருந்தார் .எனவேதான் அவர் தனிக்கட்சி கண்டு ஆட்சியை பிடித்தது தான் முதலமைச்சரானார்.முதல்வர் பதவியை பிடிக்கும் அளவுக்கு வலிமையான தலைவர்தான் என்று நிரூபித்தார். எம்ஜிஆரை துரோகி என்று திமுகவினர் சொல்வதென்றால் அதே கருத்தை அண்ணாவுக்கு எதிராக திராவிடர் கழக கட்சியினரும், கருணாநிதிக்கு எதிராக நெடுஞ்செழியன் ஆதரவாளர்களும் முன்வைக்கலாம் .அரசியலில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு லட்சியத்துடன் வருகிறார்கள் அதற்காக பாடுபடுகிறார்கள். அவர்களை துரோகிகள் என்று வைத்தாள் யாரையும் அரசியலில் துரோகி பட்டியலில் இருந்து விலக்க முடியாது.

வைகோ கட்சித் தலைமையை மீறி ஈழத்துக்கு சென்றிருந்தாலும், அவர் பின்பு மன்னிப்பு கேட்டு கட்சியிலேயே தொடர்ந்தார் .இது பின்னர் திமுக ஆட்சியைக் கலைப்பதற்கு காரணமாக இருந்தது இதன்போதே திமுக தலைமைக்கும், வைகோவுக்கும் இடையே கசப்பு கசப்புணர்வை ஏற்படத் தொடங்கியது. உளவுத்துறை தகவலைக் காட்டி வைகோ நீக்கப்பட்டார். அவர் வேறு வழியில்லாமல் தான் கட்சியை தொடங்கினார்.நீக்கப்படாமல் இருந்திருந்தால் அவர் வேறு கட்சி தொடங்கி இருக்க மாட்டார் எனவே வைகோவை துரோகி என்று கூற முடியாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு