மதுரை மாநகராட்சிக்கு 200 வார்டுகள் தேவை.
மதுரை மாநகராட்சியின் மக்கள் தொகையானது 13 இலட்சத்திற்கு சற்று அதிகமாக உள்ளத உள்ளது. இதற்கு மொத்தமாக 100 வார்டுகளை ஒதுக்கி இருக்கிறார்கள். 100 வார்டுகள் என்றாலும் ஒவ்வொரு வார்டும் சுமார் 13,000 மக்கள் தொகை கொண்டதாக இருக்கும். இது மக்கள் தொகை அதிகரித்து ஒவ்வொரு வார்டு உறுப்பினரும் 13,000 மக்களின் பிரச்சனைகளை கையாள வேண்டி வரும். பேரூராட்சிகளில் மொத்த மக்கள்தொகை 13000 தான். ஆனால் அங்கே 30க்கு மேற்பட்ட வார்டு உறுப்பினர்கள் உள்ளார்கள்.அப்படி பார்த்தால் 400 பேருக்கு ஒரு வார்டு உறுப்பினர் உள்ளார்கள். 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் என்ற அடிப்படையில் 13 ஆயிரம் பேருக்கு ஒரு வார்டு உறுப்பினர் உள்ளார். இதை 200 வார்டுகளாக உயர்த்தி இருந்தால் சுமார் 6 ஆயிரத்து 500 பேருக்கு ஒரு வார்டு உறுப்பினர் இருந்திருப்பார் மக்கள் எளிதாக உறுப்பினர்களை சந்தித்து தங்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறியிருக்க முடியும் இதேபோலவே திருச்சி கோயம்புத்தூர் சேலம் திருப்பூர் போன்ற 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளுக்கு 200 வார்டுகளை வழங்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக