தமிழகத்தில் உள்ள எட்டு மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற கோரிக்கை.
கடிதத்தில் அவர் வைத்த கோரிக்கைகள் :தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி சாலை, வள்ளியூர் - திருச்செந்துார், கொள்ளேகால் - அன்னுார் - எம்.எம்.மலை - பாலார். பழநி - தாராபுரம், ஆற்காடு - திண்டிவனம், மேட்டுப்பாளையம் - பவானி, அவினாசி - மேட்டுப்பாளையம், பவானி - கரூர் சாலை ஆகியவை, மாநில நெடுஞ்சாலைகளாக உள்ளன.இவற்றை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற, 2017 - 18ம் ஆண்டில், தேசிய நெடுஞ்சாலை பிரிவு சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, மத்திய சாலை போக்குவரத்து துறைக்கு அனுப்பப்பட்டது.
இந்த எட்டு சாலைகளும் மிகவும் முக்கியமானவை. புனித தலங்களான திருவண்ணாமலை, திருச்செந்துார், பழனி போன்றவற்றையும், வர்த்தக, சுற்றுலா மையங்களையும் இணைப்பவையாக உள்ளன.எனவே, இந்த சாலைகளை உடனடியாக மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இச்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற, ஏற்கனவே கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக எட்டு மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றி அறிவிப்பு வெளியிட வேண்டும்.
மேலும், அவற்றை மேம்படுத்த தேவையான நிதி ஒதுக்கி, பணிகள் மேற்கொள்ள, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும். அதற்கு, மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்
கருத்துகள்
கருத்துரையிடுக