அடிமைத்தனத்தில் அதிமுகவுடன் திமுக போட்டி.
அடிமைத்தனத்தில் அதிமுகவுடன் போட்டி போட தூங்கிவிட்டனர் திமுகவினர் .அதிமுகவினர் அடிமைகள் காலில் விழுந்து கிடப்பவர்கள் என்றெல்லாம் திமுகவினர் கூறினாலும், தற்போது திமுகவினர் அதே போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். .இதற்கு முன்பு அதிமுக எம்பிக்கள் எல்லாம் நாடாளுமன்றத்தில் பேசி முடித்ததும் எனக்கு வாய்ப்பளித்த அம்மாவுக்கு நன்றி என்று சொல்வார்கள், ஒருமுறை சபாநாயகரே இதை கிண்டலடித்தார் .இந்தியா முழுவதும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்ற அறிவு கூட இல்லாமல் அதிமுகவினர் இப்படி செய்தார்கள். ஜெயலலிதா கூட இந்த முட்டாள்தனத்தை அங்கீகரித்தார். ஆனால் தற்போது திமுகவினரும் அதே போன்று செய்து வருகிறார்கள். இந்த செயலை கண்டித்த சபாநாயகருக்கு வாழ்த்துக்கள் சம்பவம் இதோ:
ராஜ்யசபாவில் நேற்று பதவியேற்ற தி.மு.க., - எம்.பி., ராஜேஷ் குமார், உறுதிமொழி ஏற்பின் போது கோஷமிட்டதை, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு கண்டித்தார்.
ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு முன்னிலையில், தமிழகத்தில் இருந்து தேர்வான தி.மு.க.,வைச் சேர்ந்த அப்துல்லா, ராஜேஷ் குமார், கனிமொழி சோமு மற்றும் மஹாராஷ்டிராவில் இருந்து தேர்வான காங்.,கைச் சேர்ந்த ரஜினி அசோக்ராவ் பாட்டீல் ஆகியோர் பதவியேற்றனர். தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜேஷ் குமார் உறுதிமொழி வாசித்து முடித்த பின், 'வெல்க தளபதி... வெல்க அண்ணன் உதயநிதி' என கோஷமிட்டார்.
உடனடியாக குறுக்கிட்ட வெங்கையா நாயுடு, “கோஷம் சபைக்குறிப்பில் சேர்க்கப்படாது. சபைக்கு வெளியில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் கூறலாம்,” என, கண்டித்தார்.
உடனடியாக குறுக்கிட்ட வெங்கையா நாயுடு, “கோஷம் சபைக்குறிப்பில் சேர்க்கப்படாது. சபைக்கு வெளியில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் கூறலாம்,” என, கண்டித்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக