வலிமை சிமெண்ட்
தமிழ்நாட்டில் அனைத்து துறை அரசு நிறுவனங்களை லாபத்தில் இயங்க செய்து, மேலும் முதலீடு செய்து நிறைய பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.போக்குவரத்துத்துறை தற்போது சுமார் பத்தாயிரம் கோடிக்கு மேல் கடனில் மற்றும் நட்டத்தில் இயங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .மின்சாரத்துறை ஒரு லட்சம் கோடி கடன் மற்றும் நஷ்டத்தில் இயங்குகிறது. எல்லாராலும் அரசாங்கத்திற்கு அதிக வருமானத்தை அள்ளித் தருகிறது என்று நினைக்கப்பட்ட டாஸ்மாக் கூட நஷ்டத்தில் இயங்குவதாக தற்போது கணக்கு காட்டுகிறார்கள் .டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கினாலும் அரசாங்கத்திற்கு கோடிக்கணக்கான ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரி வருமானத்தை அள்ளித் தருகிறது. இனிமேல் ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் எல்லா அரசுத்துறை நிறுவனங்களையும் லாபத்தில் இயங்க வைப்போம் என்று வாக்குறுதி கொடுக்க வேண்டும். அரசு துறையில் உள்ள முறைகேடுகள் ஊழல்கள் போன்றவற்றை தவிர்த்து எல்லா அரசு நிறுவனங்களை லாபத்தில் இயங்க வைத்த செய்ய வேண்டும். குறிப்பாக நஷ்டத்தில் இயங்குகிறது என்று கூறப்படும் போக்குவரத்து துறையில் கூட டீசல் திருட்டு, உதிரிபாகங்கள் கொள்முதலில் வானளாவிய ஊழல் போன்றவை உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இவற்றை குறைத்தாலே போக்குவரத்து கழகத்தை லாபத்தில் இயங்க செய்ய முடியும் என்று கூறுகிறார்கள் .அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்ங்குவது ஆட்சியாளர்களின் திறமையின்மையை காட்டும். எனவே எதிர்காலத்தில் அரசியல் கட்சிகள் ஊழல், முறைகேடுகளை குறைத்து/தவிர்த்து அரசு நிறுவனங்களை லாபத்தில் இயங்க வைக்க வேண்டும்.
வலிமை சிமெண்ட் தமிழக அரசு புதிதாக வெளியிட்டிருக்கிறார்கள் இதன் விலை சுமார் 360 ரூபாய். சந்தை விலையை விட 60- 70 ரூபாய் குறைவாக விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இது சிமெண்ட் விலை குறைவுக்கு வழிவகுக்கும். இதனால் கட்டுமான துறை வளர்ச்சி அடையும் என்று நம்பலாம். ஏற்கனவே பெரம்பலூர் ,அரியலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ் நாட்டுக்கு சொந்தமான சிமெண்ட் ஆலைகள் சரியாக பராமரிப்பும செய்யப்படாததால் உற்பத்திச் செய்ய முடியாமல் கிடப்பதாகவும், இதுதான் சிமெண்ட் விலை உயர்ந்து கொண்டே போவதற்கு காரணம் என்று கூறப்பட்டது .தற்போது அரசாங்கம் சிமெண்ட் தயாரித்து வெளியிட தொடங்கியிருக்கிறது. இதேபோல் அரசு சிமெண்ட் நிறுவனத்தை இயக்கி குறைந்த விலையில் சிமெண்ட் விற்றால் விலை ஏறாது. இதனால் சாதாரண சாதாரண வீடு கட்டும் கனவு உள்ளவர்களிலிருந்து கட்டுமான நிறுவனங்கள் வரை பயன்பெறுவார்கள், வேலை வாய்ப்பும் பெருகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக