இலங்கை யின் 13 வது சட்ட திருத்தம் என்றால் என்ன?

இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பதின்மூன்றாவது திருத்தம் (Thirteenth Amendment (13A) to the Constitution of Sri Lanka) என்பது இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்குவதற்காக அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தச் சட்டமூலம் ஆகும். இத்திருத்தச் சட்டமூலத்தின் படி, சிங்களம், தமிழ் ஆகிய மொழிகள் நாட்டின் ஆட்சி மொழிகள் ஆகவும் ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் ஆக்கப்பட்டது.


1987 சூலை 29 இல், அதிகாரங்களை மாகாணங்களுக்குப்   பகிர்ந்தளிக்கும் முகமாக இலங்கை-இந்திய ஒப்பந்தம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அரசுத்தலைவர் ஜெயவர்தனாவிற்கும் இடையில் கொழும்பு நகரில் கையெழுத்திடப்பட்டது.இதனை அமுல் படுத்தும் வகையில் 1987 நவம்பர் 14 இல் இலங்கை நாடாளுமன்றம்  13வது திருத்தத்தை நிறைவேற்றியது.




  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு