கல் குவாரிகள் அனுமதி மாற்றி அமைக்கப்பட்டதற்கு அரசு மீது முன்னாள் முதலமைச்சர்பழனிசாமி குற்றச்சாட்டு

கடந்த இரண்டு மாதங்களாக, கல் குவாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்படும், 'பர்மிட்' முறையில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக ஆண்டுக்கு, 12 ஆயிரம் யூனிட் ஜல்லி உற்பத்தி செய்யப்படும் எனக் கூறி, குவாரி நடத்த அனுமதி பெற்றவர்கள், மாதத்திற்கு 1,000 யூனிட் ஜல்லி வீதம் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற புதிய விதியை, தமிழக அரசு திணிப்பதாக கூறுகின்றனர்.
மேலும், மூன்று நாட்களுக்கு பர்மிட் வாங்கினாலும், மீதமுள்ள இரண்டு நாட்களுக்கு மட்டுமே, கட்டுமானப் பணிகளுக்கு, ஜல்லியை உற்பத்தி செய்யவும், வாகனங்களில் எடுத்து செல்லவும்
இயலும்.

முறைப்படி கல் குவாரி நடத்துவதற்கு அனுமதி வாங்கி, ஜல்லி உற்பத்தி செய்பவர்களுக்கு அரசு கெடுபிடி தருகிறது.ஆனால், 50 சதவீதத்திற்கு மேல் காலாவதியான கல் குவாரிகள், எந்தவிதபர்மிட்டும் பெறாமல், கவனிக்க வேண்டிய, ஆளும் கட்சியினரை கவனித்து, ஜல்லி வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கின்றன.
எனவே, பழையபடி 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை பர்மிட் வழங்க வேண்டும். காலாவதியான கல் குவாரிகளில் எந்தவிதமான பர்மிட்டும் பெறாமல், ஜல்லியை உற்பத்தி செய்து, விற்பனை செய்வதை அனுமதிக்கும் அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு