சீனத்தூதுவரின் வட இலங்கை பயணம் .

சீனத்தூதுவர் கீ சென் ஹொங் 3 நாட்கள் வட இலங்கை பயணத்தை மேற்கொண்டு முடித்துவிட்டு கொழும்பு திரும்பியுள்ளார்.

அவருடன் அரசியல் அதிகாரி, தூதரகப்பாதுகாப்பு அதிகாரி என்று முக்கியஸ்தர்கள் சென்றுள்ளனர். அதாவது இராஜதந்திரம், அரசியல், இராணுவம் சார்ந்த மூவர் அங்கு சென்றுள்ளனர். மேலும் அவர்கள் சென்ற இடங்களும் முக்கியமானவையாகும்.

மன்னார் தாழ்வுப்பாட்டு கடற்படை இராணுவ முகாம், இராமர் அணை, நல்லூர் கோவில், யாழ் நூலகம், மன்னார் மீனவர்களுடனான சந்திப்பும், நிவாரணமும் என்ற வகையில் சீனத்தூதுவரின் பயணத்தில் அமைந்துள்ளது.

குறிப்பாக மன்னாரிலிருந்து 25 கிலோமீட்டர்  பயணம் செய்து சேது பாலம் சென்று 20 நிமிடங்கள் தரித்து நின்று அவதானிப்புகள் செய்துள்ளார்கள்.

மேலும், வட பகுதி மீனவர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கும் இடையில் மீன்பிடி பிரச்சினைகள் இருப்பதால் அதனைப் பயன்படுத்தக் கூடிய விதத்தில் அந்த மீனவர்களைச் சந்தித்து 20 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான நிவாரணங்கள், வலைகள் வழங்கியுள்ளார். இதன் மூலமாக மீனவர்களின் ஆதரவைத் பெற முனைந்துள்ளார். அத்துடன் நல்லூர் கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார்.

உண்மையில் சீனக்கம்யூனிசவாதிகள் கடவுள் நம்பிக்கையற்ற நாஸ்திகவாதிகள் ஆவர். ஆனால் யாழ்ப்பாணத் தமிழர்களின் பண்பாட்டினை மதிப்பதன் மூலம் அவர்களோடு உறவுகளை வளர்க்க சீன தூதர் விரும்புகின்றார். யாழ் நூலகத்திற்கும் சென்று மடிக்கணணிகள், புத்தகங்களை வழங்கியுள்ளார். இதிலிருந்து படித்த மட்டங்களைக் கவர நினைத்துள்ளார். மேலும் இந்தத் நடவடிக்கை முடிவல்ல ஆரம்பம் என்றும் கூறியுள்ளார்.

அதேவேளை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேயர் மணிவண்ணன் போன்ற அரசியல் முக்கியஸ்தர்களுடனும் அரசியல் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார்.

மொத்தத்தில் இவரது பயணமானது சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல், தந்திரோபாய , பூகோள, இராணுவத் தொடர்புகள் சார்ந்ததாக அமைந்துள்ளது.அடுத்ததாக வட பகுதி அபிவிருத்திக்காக பில்லியன் கணக்கான டொலர்களை முதலீடு செய்வதற்கு அல்லது கடனாக வழங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு.

அந்த வகையில், தென்னிலங்கைச் சிங்கள மக்களைச் சீனாவின் செயல்பாடுகளால் கவர்ந்தது போல் வட பகுதி மக்களையும் சீனா கவர்ந்து கொள்வதற்குக் கங்கணம் கட்டுகின்றது.

யுத்தத்தால் அவலப்பட்டுப் பல இழப்புகளுடன் வறுமையில் வாடும் வடபகுதி மக்களைத் தனது பண பலத்தால் சீனா வளைத்துவிடுவதன் மூலம் தனது பூகோள ரீதியான அரசியல் காலூன்றலை வட பகுதியில் பதிக்க நினைக்கின்றது.

ஏற்கனவே வட பகுதித் தீவுகள் 3 இல் புதுப்பிக்கத்தக்க சக்தி உருவாக்கம் என்ற அடிப்படையில் சீனா இந்தியாவுக்கு அண்மையில் காலூன்ற நினைத்தது. அதற்கு இலங்கை அரசு வாய்ப்பளித்தது. ஆனால் வட பகுதி மக்களின் எதிர்ப்புகள், தமிழ்த் தேசியக் கட்சிகளில் எதிர்ப்பு, இந்தியாவின் எதிர்ப்புக் காரணமாகச் சீன முதலீட்டாளாகள் அங்கு இருந்து வெளியேற வேண்டி ஏற்பட்டது.

பூநகரி கெளதாரிமுனை கடல் அட்டை வளர்ப்பு விடயத்தில் ஈடுபட்ட சீனர்,அங்கு வாழும் மக்களதும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளதும் எதிர்ப்பைச் சந்தித்தனர். இந்த நிலையில் சீனாவின் இராஜதந்திரப் பாய்ச்சல் அணுகுமுறை இப்போது சீனத் தூதுவர் மூலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இது ஆரம்பந்தான் முடிவல்ல என்றும் சீனத் தூதுவர் கூறியுள்ளார். இவ்வாறு சீனா பாய்ச்சல் அணுகுமுறையில் தனது இராஜதந்திர வலையைத் தனது புவிசார் நல அரசியலையும், கொண்டுள்ளது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு