சென்னையில் ஒருங்கிணைந்த வானூர்தி பயணிகள் முனையம்; ரூ.2,400 கோடியில் பணிகள் நடைபெறுகின்றது

சென்னை விமான நிலையத்தில், 2,400 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டும் பணி, 2018 செப்டம்பரில் துவங்கியது. இந்த புதிய முனையம் வாயிலாக, ஓர் ஆண்டுக்கு கையாளப்படும் பயணிகள் எண்ணிக்கை, 1.7 கோடியில் இருந்து, 3.5 கோடியாக உயரும்.மொத்தம், ஐந்து தளங்கள் இந்த புதிய முனையத்தில் அமைய உள்ளது.

ஒருங்கிணைந்த வசிப்பிட மதிப்பீட்டுக்கான நான்கு நட்சத்திர பசுமை தரத்தில் இந்த முனையம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான கட்டடப் பணிகளை 4 ஆண்டுகளில் முடிக்க திட்டமிட்டு, விரைவு படுத்தப்பட்டுள்ளது.

புதிய முனையத்தில், கீழ் தளத்தில் பயணியர் உடைமைகள் கையாளப்பட உள்ளன. தரை தளத்தில் பன்னாட்டு வருகை பயணியருக்கான வழக்கான நடைமுறைகள்; இரண்டாவது தளத்தில், பயணியருக்கான புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வருகை புறப்பாடு என இரு பிரிவுகளிலும், தானியங்கி முறையில் உடைமைகளை அனுப்புவதற்கான கருவிகள் நிறுவப்படுகின்றன. மேலும், பயணியர் தாங்களாக உடைமைகளில் 'ஸ்டிக்கர்' ஒட்டுவதற்காக கருவிகள் அமைக்கப்படுகின்றன.

சென்னை வானூர்தி நிலயம் தற்போது ஒரு கோடியே 70 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டிருந்தாலும், கோவிட் தொற்று க்கு  முன்பு வரை சுமார் இரண்டரை கோடி பயணிகளை கையாண்டு வந்தது. தற்போது பயணிகள் கையாளுதல் மூன்றரை கோடி வரை உயர்த்தப்படவிருப்பது, சென்னை விமான நிலையத்தில் பயணிகள் நெருக்கடி மற்றும் இட நெருக்கடியை தவிர்ப்பதற்கு உதவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு