351 பொருட்கள் இறக்குமதி ராணுவ அமைச்சகம் தடை, உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு.
மோடி ஆட்சியை பற்றி கற்றறிந்த நடுநிலையாளர்கள் கூட கடுமையான கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள் . அப்படி இருந்த போதிலும் மோடியின் ஆட்சியில் சில நல்ல செயல்கள் அறிவிக்கப் படுகின்றன .அவை நடைபெறுகின்றனவா/ செயல்படுத்த பட போகின்றனவா என்பது போகப்போகத்தான் பார்க்க வேண்டும். குறிப்பாக தற்சார்பு திட்டம், உலகிலேயே ராணுவத்திற்காக அதிக நிதி ஒதுக்கீடு நாடுகளில் இந்தியா மூன்றாவது நான்காவது இடத்தில் இருந்து வருகிறது. ராணுவத்திற்கான பீரங்கிகள் போன்றவை வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் இந்தியா அன்னியச் செலவாணி ஏராளமாக செலவழிக்கிறது .மற்றொன்று நாட்டினருக்கு கிடைக்கவண்டிய வேலை வாய்ப்புகள் பறிபோகிறது.
ஆனால் இந்த தற்சார்பு திட்டம் மூலம் இந்தியாவிலேயே ராணுவ தளவாடங்கள் தயாரிக்கப் பட்டால் இந்தியாவில் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து, தொழில் புரட்சி ஏற்பட வழிவகுக்கும். இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் தரம் குறைந்தவை என்பதை மாற்றி, சரியான தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் வைத்து தரத்தையும் மேம்படுத்த வேண்டும் .வட கொரியா போன்ற நாடுகள் கூட நாடுகளில் கண்காட்சிக்கு வைக்கப்படும் ஏவுகணை போன்றவற்றில் நட்டு போல்டுகள் (Bolt & Nut) கூட சரியாக இல்லை என்று கூறப்பட்டாலும் வடகொரியாவின் ஏவுகணைகளை கண்டு அமெரிக்கா போன்ற வல்லரசுகள் பயந்து அவர்களுடன் பேச்சு வார்த்தைக்கு போகின்றன . ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீது எடுத்தது மாதிரியான போர் நடவடிக்கைகளை வடகொரியா மீது எடுப்பதற்கு தயங்குகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் /பொருட்களின் தரத்தை மேம்படுத்த வேண்டுமே தவிர தரத்தை மட்டுமே காரணம் காட்டி வெளிநாட்டினருக்கு அந்த ஒப்பந்தங்களை வழங்கினால், இந்தியாவில் வேலை வாய்ப்பு குறையும் .இந்தியா பொருளாதார வல்லரசாவது தடைபடும் /தாமதப்படும்.இது பற்றிய விரிவான செய்தி துளிகள்: சில ஆண்டுகளுக்கு முன் தற்சார்பு இந்தியா திட்டம் பற்றி பிரதமர் மோடி அறிவித்தார்.இதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ராணுவ தளவாட பொருட்களை இறக்குமதி செய்ய, ராணுவ அமைச்சகம் தடை விதித்தது. இந்தப் பொருட்களை இந்தியாவிலேயே தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன்பின், மேலும் 108 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்த தடைகளை, 2023ம் ஆண்டுக்குள் முழுமையாக அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, ராணுவ அமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில், ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முப்படைகளில் பயன்படுத்தப்படும், 2,5௦௦க்கும் அதிகமான பொருட்கள் தற்போது இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது.
தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், மேலும், 351 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை, மூன்று ஆண்டுகளில் முழுமையாக அமல்படுத்தப்படும்.இந்தப் பொருட்கள், இந்திய தொழிற்சாலைகளில் இருந்தே கொள்முதல் செய்யப்படும்.
351 பொருட்களில், 172 பொருட்கள், அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் இந்தியாவிலேயே முழுமையாக தயாரிக்கப்படும். 89 பொருட்கள், 2023ம் ஆண்டுக்குள்ளும், 90 பொருட்கள் 2024ம் ஆண்டுக்குள்ளும், இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் அன்னிய செலவானி, 3,000 கோடி ரூபாய்க்கு மேல் மிச்சமாகும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக