பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்- 50 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர்.வரதராஜன், கோட்டாம்பட்டியில் உள்ள எல்.எம்.எஸ் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொள்ளாச்சியில் பொதுமக்களிடையே திமுகவிற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால் வெற்றி உறுதி. திமுக ஆட்சி அமைந்தவுடன் பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
தமிழ்நாட்டில் தற்போது 2-3 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மாவட்டங்கள் கூட உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டமானது சுமார் 34லட்சம் மக்கள் தொகை(2011 இல்) மற்றும் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளை கொண்டதாக உள்ளது. கோவை மற்றும் பொள்ளாச்சி என இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் கொண்டதாக உள்ளது .முன்பு ஒருமுறை தேர்தல் கமிஷனர் கூட ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்டம் இருக்க வேண்டும் என்று கூறினார் .அதையும் தாண்டி சிறு மாவட்டங்கள் கூட இந்தியா முழுவதும் உள்ளன .அப்படிப் பார்த்தால் பொள்ளாச்சி வெகு விரைவாக தனி மாவட்டமாக பிரிக்கப்பட வேண்டும். கோயம்புத்தூர் 34 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக இருப்பதால் பொள்ளாச்சியை கோயம்புத்தூரில் இருந்து பிரித்து மற்றும் அருகிலுள்ள திருப்பூரிலிருந்து சில பகுதிகள் இணைத்தும் (காரணம் திருப்பூர் கூட மிகப்பெரிய மாவட்டமாக உள்ளது) தனி மாவட்டம் அமைக்க வேண்டும். சமீபத்தில் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் கூட ஒரே கட்டிலில் இருவரை படுக்க வைத்திருப்பதாக படங்கள் வெளியாகின. ஒரே மாவட்டமாக இருக்கும்பொழுது ஒரு மருத்துவக் கல்லூரி, ஒரு ஆட்சியரகம் என்று இருப்பதால் மக்கள் அனைவரும், அதாவது 34 லட்சம் மக்களும் தங்களது தேவைகளுக்காக ஒரே இடத்தில் குவியும் போது இதே போன்ற நெருக்கடிகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி கூட ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் புதிதாக பதினோரு மருத்துவக் கல்லூரிகள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. மேலும் கேட்கப்பட்ட 6 மருத்துவ கல்லூரிகளுக்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை( 17 மருத்துவக் கல்லூரிகளில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி இருக்கிறார்கள்). பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அழறிப்பதோடு மட்டுமல்லாமல், பொள்ளாச்சியில் மருத்துவக்கல்லூரி அமைவதறகும் தமிழக அரசு முயற்சி எடுக்கவேண்டும். பொள்ளாச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டால், அது அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான தகுதியையும் பெற்றுவிடும் .2011ஆம் ஆண்டு தான் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மக்கள்தொகை 34 லட்சம், கோயம்புத்தூர் தொழில் வளம் பெற்ற மாவட்டம் மற்றும் சமீப காலமாக தகவல் தொழில்நுட்ப தொழிலில் ஏற்பட்ட வளர்ச்சி போன்றவை கோவை மாவட்டத்தின் மக்கள்தொகை சுமார் 40 லட்சம் வரை 2021 கணக்கெடுப்பில் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே பொள்ளாச்சியை குறைந்தது 15 லிருந்து 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக பிரிப்பது நல்லது. தமிழ்நாட்டில் 7 லட்சம், 5 லட்சம் மக்கள் தொகை கொண்ட பெரம்பலூர் அரியலூர் போன்ற மாவட்டங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது .அங்கு தற்போது கட்டி முடிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், மாவட்டங்களாகவே இருக்க தகுதியற்றவை என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அங்கேயே மருத்துவக்கல்லூரிகள் வந்துள்ளது. பொள்ளாட்சி தனி மாவட்டமாக உருவெடுக்கும் போது, பொள்ளாச்சி நகரமானது மாநகராட்சியாக மாறும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிக விரைவாக வளர்ச்சியடையும்.
திமுகவினர் கூட பொள்ளாச்சியை தனி மாவட்டம் ஆக்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள். அதை அவர்கள் விரைந்து நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் 2004 தேர்தலில் அவர்களது பொள்ளாச்சியில் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக