தமிழகத்தில் ஒன்பது மாதங்களில் ரூ.55 ஆயிரம் கோடி முதலீடு
தமிழகத்தில் ஒன்பது மாதங்கள் 55000 கோடி முதலீட்டின் மூலமாக, சுமார் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள் தொழிநுட்பக் கல்லூரிகள் போன்றவற்றில் இருந்த ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 லட்சம் பேர் வரை வெளி வருகிறார்கள். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வேலை தேடி வருகிறார்கள். இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு முதலீடுகள் தேவை .இதற்காக குறைந்தது ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு தேவை. தமிழ்நாடு 9 ஆண்டுகளில் பெற்ற முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய செய்தி துளிகள்:
தமிழகத்தில் ஒன்பது மாதங்களில், 55 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது; இதன் வாயிலாக, 1.65 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என, தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 9.84 சதவீதம் பங்களிப்பை வழங்கும், இரண்டாவது பெரிய பொருளாதாரம் உடைய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.வரும் 2030க்குள், 23 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கவும், 46 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தமிழகத்தில், நடப்பு நிதியாண்டின் ஒன்பது மாதங்களில், 100 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், உற்பத்தி நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதன் வாயிலாக, 55 கோடி ரூபாய் வரை முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது; 1.65 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க
உள்ளது.இதில், மூன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், உற்பத்தியை துவங்கும் நிலையில் தங்களது பணிகளை விரைவாக செய்து வருகின்றன. பல்வேறு நிறுவனங்கள் தொழில் துவங்குவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துஉள்ளன.மேலும், 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், நிலம் வாங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன. 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தொழில் துவங்குவதற்கு ஏதுவான நிலங்களை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டு வருகின்றன.மேற்கொள்ளப்பட்ட, 100 ஒப்பந்தங்களில், 50 நிறுவனங்கள், தொழிற்சாலைகளை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை, துவக்கி உள்ளன. கொரோனா காலத்திலும், தமிழகத்தில் 55 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடுகளை ஈர்த்து உள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக