காமராஜர் ஆட்சி எங்கே? காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் உறுமல்.
முன்பு திமுகவுடன் கூட்டணி வைத்து நல்ல வெற்றி பெற்றவுடன் காமராஜர் ஆட்சி வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்த காங்கிரஸ்காரர்கள் தற்போது உள்ளாட்சி தேர்தல்களில் நியாயமான அளவு தொகுதிகள் தங்களுக்கு வேண்டும் என்பதற்காக காமராஜர் ஆட்சியை நினைவு கூறுகிறார்கள் விபரம் இதோ:
இதில் கலந்து கொண்ட அழகிரி
காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று நாம் சொல்லி வந்ததை அண்மைக்காலமாக விட்டுவிட்டோம் என நம்மை பார்த்து கேள்வி எழுப்புகின்றனர். கூட்டணியில் இருப்பதால் நாம் அந்த முழக்கத்தை விட்டு விட்டதாக கருதுகின்றனர். கூட்டணியில் இருப்பதால் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்பதை நாம் மறந்து விடவில்லை. அந்த முழக்கம் நம் உணர்வோடு கலந்த ஒன்று. தமிழகத்தில் கூட்டணி வைக்காமல் தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக தயாராக இருக்கிறதா? இல்லையே. ஆனால், காங்கிரஸ் மட்டும் ஏன் கூட்டணி வைக்கிறது என ஏன் கேட்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.
கூட்டணி வைத்ததால் தான் காங்கிரஸ் செல்வாக்கு சரிந்து போனது. கூட்டணியால் பலன் இல்லை. கிராமம் கிராமமாக சென்று கட்சியை பலப்படுத்துவோம். அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியை நம்மால் பெற முடியும். அதற்கு காங்கிரஸ்காரர்கள் உழைக்க வேண்டும் ; கடுமையாக உழைக்க வேண்டும்' என்று ' கூறினார்.
அதேபோல, காங்கிரசின் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா பேசும் போது, 'சென்னையில் இருந்து நாமக்கல் வரும்போது வழி நெடுக இருந்த பல விசயங்களை பார்த்துக் கொண்டே வந்தோம். அணைக்கட்டுகள், தொழிற்சாலைகள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் என காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பல அடையாளங்கள் இருந்தன. பெருமையாக இருந்தன. இந்த மாநிலம் வளர்ச்சியடைந்ததற்கு நம் காங்கிரஸ் கட்சியும் நம் தலைவர்களுமே காரணம். இதில் வேறு எவருக்கும் கொஞ்சம் கூட பங்கு கிடையாது' என்று சொன்னார்.
திமுக ஆட்சி காலத்தில் தமிழகம் வளர்ச்சியே அடையவில்லை என்பது போலவும், திமுகவால் காங்கிரசுக்கு எந்த லாபமும் இல்லை என்பது போலவும் தொனியில் அமைந்துள்ள பேச்சுக்கள் திமுகவினரை வருத்தம் அடைய வைத்திருக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக