கவர்னரின் பரிசீலனையில் நீட் தேர்வு ரத்து மசோதா

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு உட்கொண்டு வருவது நல்லது என்பதே என்னுடைய கருத்து. ஏற்கனவே கல்விமானிய பட்டியல் மாநில பட்டியல் இருந்தபோதுதான் தமிழ்நாட்டில் இருந்து சிறந்த மருத்துவர்கள், பொறியாளர்கள் வந்தாரகள்.
இதற்கு முன்பு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு இருந்தது. பின்பு அது கிராமப்புற மாணவர்களை பாதிக்கிறது என்பதற்காக ரத்து செய்யப்பட்டது ,அது உண்மைதான் பெரும்பாலான நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களை மாவட்ட தலைநகரங்களில் இருந்தன .கிராமப்புற மாணவர்கள் அங்கு சென்று படிப்பது மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள் அங்கு சென்று படிக்க முடியாத நிலை இருந்தது இந்நிலையில் நுழைவுத் தேர்வு ரத்தானது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது .தற்போது மீண்டும் நீட் தேர்வு கொண்டு வந்திருக்கிறார்கள் .இது தற்போது கவர்னரின் பரிசீலனையில் ரத்து செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆளுநரின் ஒப்புதலுடன் செயல்படுத்தப்பட்ட வன்னியருக்கான பத்து சதவிகித இட ஒதுக்கீடு போன்ற திட்டங்கள் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன. கவர்னர் ஒப்புதல் அளிப்பார் என்பது சந்தேகம் என்றாலும் மாநில அரசுக்கு கவர்னர் ஒப்புதல் இல்லாமலே சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் உள்ளது . யாராவது நீதிமன்றத்திற்கு சென்றால் மாநில அரசு சரியான வழக்கறிஞர்களை வைத்து வெற்றி பெற வேண்டும் இதற்கு தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளின் ஆதரவும் உள்ளது. அனைத்து கட்சிகளும் இணைந்து அமித்ஷாவை சென்று சந்தித்துப் பேசப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்ட மசோதா, பரிசீலனையில் உள்ளதாக ஆளுனர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்தது. ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை நடந்த, புது அரசின் முதல் சட்டசபை கூட்டத் தொடரில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

கவர்னர் அதற்கு ஒப்புதல் வழங்கி, மத்திய அரக்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசு பரிந்துரையுடன், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஜனாதிபதி ஒப்புதல் அளித்தால் மட்டுமே சட்டமாகும்; நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும். ஆனால், சட்ட மசோதாவை கவர்னர் இன்னும் மத்திய அரசுக்கு அனுப்பவில்லை.

இந்நிலையில், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், நீட் விலக்கு சட்ட மசோதாவின் நிலை குறித்து, கவர்னர் மாளிகையில் தகவல் கேட்டார். அதற்கு, 'நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட மசோதா கவர்னரின் பரிசீலனையில் உள்ளது' என கவர்னர் மாளிகையில் இருந்து பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு