அரசு விருந்தினர் மாளிகையில் தண்ணீர் வரவில்லை, கதவை மூட முடியவில்லை: சட்டசபை பொது கணக்கு குழு.
தமிழ்நாடு முழுவதும் சாலைகள் கட்டிடங்கள் சரியான தரத்துடன் போடப்படுவதில்லை, சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் கடுமையாக இருந்து வரும் நேரத்தில் ,தற்போது ஒரு கட்டிடம் கூட இடிந்து விழுந்த நிலையில் ,அரசு விருந்தினர் மாளிகையில் கூட சரியான பராமரிப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை சட்டசபை பொதுக்கணக்கு குழுவினர் வைத்து உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதில் முதலமைச்சரை போன்றவர்கள் தங்கும் அறைகள் மிக சரியாக பராமரிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாகவே முதலமைச்சர்கள் போன்றவர்கள் வரும்போது சாலைகள் சரியாக போடப்படுகின்றன ,எனவே தான் அவர்கள் நாடு முழுவதும் சாலை சரியாக இருக்கிறது என்று நம்பி செல்கிறார்கள் என்ற கூற்றும் உள்ளது .அதேபோல் முதல்வர் மற்றும் அமைச்சர்களை
மட்டும் கவனித்திட்டாலே மற்றவர்களை ஏமாற்றி விடலாம் என்ற நினைப்பில் இதுமாதிரி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். இது பற்றிய செய்தி துளிகள்:
கோவை அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள கழிவறையில் தண்ணீர் வராததாலும், கதவு மூட மூடியாமல் இருந்ததாலும், கேபமானான, சட்டசபை பொது கணக்கு குழுவினர், பொதுப்பணித்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
தமிழக சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையிலான குழுவினர், கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். இவர்களுக்கு, அரசு விருந்தினர் மாளிகையில், அறை ஒதுக்கப்பட்டது.
தமிழக சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையிலான குழுவினர், கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். இவர்களுக்கு, அரசு விருந்தினர் மாளிகையில், அறை ஒதுக்கப்பட்டது.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கட்டடங்களில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்கும் அறைகளை மட்டும் 'பளபள'ப்பாக வைத்திருக்கின்றனர். மற்ற அறைகளை பராமரிப்பின்றி வைத்துள்ளனர்.
டிசம்பர், 27ம் தேதி இரவு, 11:00 மணிக்கு, விருந்தினர் மாளிகைக்கு வந்த அக்குழுவினருக்கு, மிகப்பெரிய அதிர்ச்சி. அவர்களுக்கு ஒதுக்கிய அறைகளில் உள்ள கழிவறைகளில் தண்ணீர் வரவில்லை. கழிவறை மற்றும் குளியலறை கதவுகளை மூட முடியவில்லை. இரவில் வந்த எம்.எல்.ஏ.,க்கள், கழிவறை செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

மறுநாள் மிகவும் கஷ்டப்பட்டு குளித்து தயாராகி, கள ஆய்வுக்குச் சென்று விட்டு, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த துறை ரீதியான கூட்டத்துக்கு வந்தனர். அப்போது, குழு உறுப்பினர்களான, பூண்டி கலைவாணன் (திருவாரூர்), சிந்தனைச்செல்வன் (காட்டுமன்னார் கோவில்) ஆகியோர், அரசு விருந்தினர் மாளிகை அறை பராமரிப்பு தொடர்பாக கேள்வி எழுப்பினர்.'கழிவறையில் தண்ணீர் வரவில்லை; கதவை மூட முடியவில்லை. எப்படி குளிக்க முடியும்' என, கேள்வி எழுப்பினர். அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் நெளிந்தனர்.
குழு தலைவரான செல்வப்பெருந்தகை, ''அரசு விருந்தினர் மாளிகை பராமரிப்பு யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. கடந்த ஆறு மாதமாக, பராமரிக்க எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது என்கிற விபரத்தை தாக்கல் செய்ய வேண்டும். பராமரிப்பு மோசமாக இருப்பது தொடர்பாக, பொதுப்பணித்துறைக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்புங்கள்,'' என, உத்தரவிட்டார்.
கருத்துகள்
கருத்துரையிடுக