மீன்பிடித் தொழிலலும், வானூர்தித் தொழிலும்.
தமிழ்நாட்டு மீனவர்கள் சுமார் 500 பேருக்கு மேல் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் பகை நாடுகளான இந்தியா பாகிஸ்தான் இடையே கூட மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது கிடையாது. ஆனால் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 600 பேரை சுட்டுக் கொன்றுள்ளார்கள். தமிழக மக்களின் தொடர் கோரிக்கையால் தற்போது சுட்டுக்கொல்வது தவிர்க்கப்பட்டு வந்தாலும், அவர்கள் தாக்கப்பட்டு, அவர்களுடைய மீன்பிடி உபகரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தாக்கப்படுவது, விரட்டியடிக்க போடுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்த கடற்பகுதி தமிழக மீனவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மீன்பிடி தொழில் செய்து வரும் பகுதியாகும். தற்போது நாடுகளின் எல்லைகள் குறிக்கப்பட்ட கூட அவர்களுக்கு இடையேயான வர்த்தகம், போக்குவரத்து போன்றவை நடைபெற்று வருகின்றன. அதேபோன்று மீன்பிடிக்கவும் அனுமதிக்க வேண்டும் .குறிப்பாக போக்குவரத்தைப் பொறுத்தவரை இலங்கையில் உள்ள வானூர்தி நிறுவனங்கள் மற்றும் இந்தியாவிலுள்ள வானூர்தி நிறுவனங்களும் மாறி ,மாறி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் வானூர்தி சேவைகளை வழங்கிவருகின்றன. அதேபோன்று தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் இரு நாட்டு கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும். தற்போது விடுதலைப்புலிகள் இல்லை மற்றும் அனைத்து மீனவர்களிடம் அடையாள அட்டை உள்ளது. எனவே தற்போது பாதுகாப்பு பிரச்சனைகள் இல்லை. எனவே அவர்கள் மீன்பிடித் தொழில் செய்ய அனுமதி வழங்க வேண்டும். விடுதலைப்புலிகள் இருந்த போது, உள்நாட்டுப் போர் நடந்த காலங்களில் கூட இரு நாட்டுக் கப்பல்களும், இரு நாடுகளுக்கும் சென்று வந்து வியாபாரம் செய்து வந்தனர். இரு நாட்டின் வானூர்தி நிறுவனங்களும் தற்போது இரு நாடுகளிலும் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். அதேபோல் மீனவர்களுக்கும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட அனுமதி வழங்க வேண்டும் அவர்களுக்கு இடையே ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதாவது இலங்கை மாற்றும் தமிழக மீனவர்களுக்கு இடையே ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அவர்களுடன் கலந்து பேசி பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.
கருத்துகள்
கருத்துரையிடுக