மதுரை விமான நிலையம் ஏற்கனவே சர்வதேச விமான நிலையமாக உள்ளது -எச். ராஜா
மதுரை விமான நிலையம் ஏற்கனவே சர்வதேச விமான நிலையமாக உள்ளது. இது தெரியாமல் அதை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்கிறார் மதுரை எம்.பி., வெங்கடேசன். தகரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் உண்டியலை கண்டுபிடித்தவர்கள் கம்யூனிஸ்ட்கள் என்றார் எச். ராஜா.
ராஜாவின் மேற் கூறிய கருத்து தவறானது மதுரை சர்வதேச விமான நிலையமாக அறிவித்தால் மட்டுமே மத்திய அரசானது மற்றவர்கள் மற்ற நாடுகளுடனான ஒப்பந்தத்தில் மதுரையில் சேர்க்க முடியும் இதன் மூலம் மதுரைக்கு நிறைய வெளிநாட்டு நகரங்களிலிருந்து சர்வதேச வானொலி சேவைகள் கிடைக்கும் ஒரு சர்வதேச பயணியை கூட கையாளாத வானூர்தி நிலையங்கள் கூட குறிப்பாக புவனேஸ்வர் வானூர்தி நிலயம், முன்பு சர்வதேச வானூர்தி சேவை துவங்க படுவதற்கு முன்பே சர்வதேச விமான நிலையம் அறிவிக்கப்பட்டிருந்தது . தற்போது கூட சில வானூர்தி நிறுவனங்கள் சர்வதேச பயணிகளை கையாளாமல் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தினமும் 5- 6 சர்வதேச விமான சேவைகள் மதுரை விமான நிலையத்திலிருந்து இயக்கப் படுகிறது. பல மத்திய கிழக்கு மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள வெளிநாட்டு வானூர்தி நிறுவனங்கள் மதுரைக்கு வானூர்தி சேவையை வழங்க முன்வந்த போதும், இந்திய வானூர்தி நிறுவனங்கள் தான் முதலில் சேவை வழங்க வேண்டும் என்ற இந்திய அரசின் கொள்கையால் ஏர் ஏசியா, டைகர் ஏர்வேஸ் ,ஃபிளை துபாய் போன்ற நிறுவனங்கள் மதுரைக்கு விமான சேவையை வழங்க முடியாமல் உள்ளது. சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்கு மதுரையிலிருந்து வானுர்தி சேவைகள் இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே துவங்கி விட்டாலும் ,சிங்கப்பூர் துபாய் போன்ற நாடுகளின் விமான நிறுவனங்கள் ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்ட எண்ணிக்கையிலான விமான சேவைகளை வழங்கி வருவதால், அவர்களால் மதுரைக்கு விமான சேவையை வழங்க முடியவில்லை. இன்னும் அந்த ஒப்பந்தத்தை புதுப்பித்து அதிக விமானங்களை இயக்க இந்திய அரசு ஒப்புக் கொண்டால் மட்டுமே அவர்களால் மதுரை போன்ற நகரங்களுக்கு விமான சேவையை இயக்க முடியும். எனவே இந்திய அரசு விரைந்து மதுரையை சர்வதேச மாநிலமாக அறிவிக்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக