மதுரை சர்வதேச விமான நிலயத்துக்கான கோரிக்கை.

 மதுரையை சர்வதேச விமான நிலையம் ஆக்காமல் இருப்பது சற்று ஏமாற்றம் அளிக்கிறது. நம்மை காட்டிலும் சிறிய விமான நிலையங்களான திருப்பதி , கண்ணூர்,திருச்சி  போன்ற விமான நிலையங்கள் சர்வதேச விமான நிலையங்களாக உள்ளது.
சென்னை, கோவை,திருச்சி விமான நிலையங்கள் மட்டும் சர்வதேச விமான நிலையங்களாக அறிவிக்கப்பட்டு மதுரை மட்டும் தனித்து விடபட்டுள்ளது 😑 
நம் பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால் மிக பழமையான மதுரை விமான நிலையத்தை மட்டும் இன்னும் கஸ்டம் விமான நிலையமாக வைத்துள்ளனர்.😑😔

மதுரை இன்றும் கஸ்டம்ஸ் (சுங்க) விமான நிலையமாக  செயல்பட்டு வருகிறது..😔

கஸ்டம்ஸ் விமான நிலையத்தில் சில நாடுகளுக்கு மட்டுமே விமான சேவையை இயக்க முடியும் .அதுவும் வெளிநாட்டு விமானங்கள் BASA ஒப்பந்தத்தில் சேர்க்காமல் இருந்தால் வர வாய்ப்புகள் இல்லை..உள் நாட்டு விமானங்கள் மட்டுமே விமான துறை அனுமதி தந்தால் சில நாடுகளுக்கு மட்டும் இயக்க முடியும்..🛫✈️

மற்றொரு சிக்கல் என்னவென்றால் இரவு 10 மணிக்கு மேல் மற்ற விமான நிலையங்கள் போல் மதுரை  விமான நிலையம் இயங்காது .🛫✈️

தற்போதைக்கு துபாய், ஶ்ரீலங்கா நாட்டிற்க்கு மட்டும் விமான சேவை மதுரையில் இருந்து உள்ளது..🛫✈️
ஜனவரி மாதத்தில் இருந்து தான் ஷார்ஜா விமான சேவை தொடங்கும்..🛫✈️

தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்புகள் இல்லாததால் பலர் மலேசியா ,சிங்கப்பூர் மற்றும் பிற வெளி நாடுகளில் குடும்ப சூழ்நிலை காரணமாக பணி புரிந்து வருகின்றனர்.🛫✈️

மேலும் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,ராமேஸ்வரம்,அழகர்கோவில்,திருச்செந்தூர் போன்ற புண்ணிய தளங்களில் வருகை தருவார் மிக அதிகம் .அது மட்டும் அல்லாது நம் நாட்டின் 9 சர்வதேச விமான நிலையங்கள் விட மதுரை விமான நிலையம் அதிக பயணிகளை கையாண்டு வருகிறது..மதுரை மற்றும் தென் தமிழகத்தில் விளையும் பொருட்கள் ஏற்றுமதி செய்யவும் வர்த்தகம் ரீதியாக மேம்பட , உள் கட்டமைப்பு வசதிகள் மேம்பட மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும்.🛫✈️

ஜனவரி மாதத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வருகை தர உள்ளார்..அவரிடம் தமிழக முதல்வர் அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை அழுத்தமாக வைக்க வேண்டும் என்பதே தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது .🛫✈️

மேலும் மதுரையில் சாலைகள் போடுவதற்கு டெண்டர் வெளியிட்டு உள்ளனர்..இன்னும் அந்த வேலையை ஆரம்பிக்கப் படாமல் உள்ளது..சாலைகள் சீரமைக்க பட வேண்டும்..🛫✈️

மதுரை விமான நிலையம் கடந்த மாதம் மட்டும் 78000 பயணிகளை கையாண்டு உள்ளது .அதன் தகவல் கமெண்ட் இல் கொடுக்கப்பட்டு உள்ளது..

தென் மாவட்டங்களும் வளர்ச்சி பெற மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் ❤️✈️🛫

அன்னை மீனாட்சி அருளால் மதுரை மீண்டு வரும்♥️🙏

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு