ஒகேனக்கல் இரண்டாம் கட்ட குடிநீர் திட்டத்திற்கு கர்நாடகா எதிர்ப்பு.

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை துவக்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் 4,600 கோடி ரூபாய் செலவில் திட்ட அறிக்கை தயாரித்திருப்பதற்கு, கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.கர்நாடக நீர் பாசனத்துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோள் நேற்று கூறியதாவது:
தமிழகத்தின் ஒகேனக்கல் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு, தமிழக அரசு 4,600 கோடி ரூபாய் செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக எங்களின் கவனத்துக்கு வந்துள்ளது.இத்திட்டத்தின் உள்ளீடுகளை தீர்ப்பாயம் அல்லது உச்ச நீதிமன்றத்தின் முன்னிலையில் தெரிவிக்காத தமிழகத்தின் எந்த திட்டத்துக்கும் கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிக்கும்.காவிரி நீர்ப்பாசன தீர்ப்பாயம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் உத்தரவிடப்பட்டுள்ள, பகிர்ந்து அளிக்கப்படும் தண்ணீரின் அளவுக்கு தகுந்தபடி தமிழக அரசு திட்டங்களை துவங்க வேண்டும்.

தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள திட்டம் கர்நாடகா, தமிழகம் நிலப்பரப்பில் உள்ளது. திட்டங்களை துவங்குவதற்கு முன், பல கோணங்களில் ஆராய வேண்டும். சட்ட பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். தமிழக அரசு தன்னிச்சையாக திட்டத்தை துவக்க முடியாது. மேலும் கர்நாடக மற்றும் தமிழகத்தின் ஒகேனக்கல் எல்லையை, மத்திய அரசின் 'சர்வே' அதிகாரிகள் இன்னும் முடிவு செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு