இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமிக்கப்பட வேண்டும்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. விராட் கோலி தன்னுடைய கேப்டன் பதவிக்கு ஆபத்தாக வந்து விடுவார்களோ என்று அஸ்வின், ரோகித் சர்மா ,300 ரன்கள் அடித்த கருண் நாயர் போன்றவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்காமல் புறக்கணித்து வந்தார். தொடர் புறக்கணிப்பு அந்த வீரர்கள் விராட் கோலிக்கு எதிராக கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளிக்க வைத்ததோடு, விராட் கோலி ஐசிசி, ஐபிஎல் டி20 போட்டிகளில் கோப்பை வெல்லாதது மற்றும்  கடந்த சில ஆண்டுகளாக அவரின் பேட்டிங் சரி இல்லாதது போன்றவை விராட் கோலியின் கேப்டன் பதவியை பறி போவதற்கு காரணமாக அமைந்தது. தற்போது அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது, அதற்கு முழு தகுதியானவர் அஸ்வின், காரணம் விராட் கோலிக்கு அடுத்ததாக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதோடு  மட்டுமல்லாமல், இதுவரை விளையாடிய எந்த ஒரு இந்திய கிரிக்கெட் வீரர்களை விட அதிக தொடர் நாயகன் விருதுகளை பெற்றவர் அஸ்வின் தான். எனவே திறமை அடிப்படையில் அவருக்கு அந்த  பதவியை வழங்க வேண்டும் தமிழ்நாட்டில் அந்தணர், அந்தணர் அல்லாதார் என்ற பிரச்சனைகள் இருந்தாலும், வட இந்தியாவிலிருந்து வரும் ஒரு முஸ்லிம் கூட இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டனாக முடியும் .ஆனால் தமிழக வீரர்கள் இந்திய அணியில் நிலைத்திருப்பதே மிகப்பரிய கடினம். அந்தண வீரர்கள் கூட இந்திய கிரிக்கெட் அணியை நீண்டகாலம் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை . இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சீனிவாசன் வந்த பிறகே தமிழகத்தில் இருந்து நிறைய வீரர்கள் ஓரளவு ஆண்டுகள்  அணியில் நிலைத்து இருந்தார்கள். அவர்களில் அஸ்வின் நீண்ட காலம் நிலைத்து நின்றதோடு சச்சின் டெண்டுல்கர் போன்ற முன்னணி வீரர்களை விட அதிக தொடர் நாயகன் விருதை பெற்றவர் . எனவே அவர் இந்திய  அணியின் கேப்டனாக வர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு