மதுரையை தகவல் தொழில் நுட்ப தலைநகராக உருவாக்கலாம்-பாகம் ஒன்று

ஏற்கனவே திருச்சியை இரண்டாம் தலைநகரமாக வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது என்றாலும் ,ஒரு நல்வாய்ப்பாக ஏற்கனவே தமிழ்நாட்டில் வேறு எந்த நகரங்களிலும் இல்லாத  உயர்நீதிமன்ற கிளை மதுரையில் அமைந்துள்ளது. தற்போதைய நிலையில் தலைநகர் சென்னைக்கு வெளியே மாற்றுவது முடியாத காரியம்.  தலைநகர் சென்னையில் வைத்துவிட்டு சட்டமன்றத்தை வேறு ஒரு நகரத்தில் நடத்துவதும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதே உண்மை. தமிழ் நாட்டை எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை, அதேபோல் சென்னை பொருளாதாரத்தலை நகர் மற்றும் தொழிற்சாலை தலைநகராக, தகவல் தொழில்நுட்ப தலைநகராக, மற்றும் திரைப்படத்துறை தலை நகரமாகவும் சென்னை விளங்குகிறது. வேறு எந்த நாட்டிலாவது இப்படி இருக்குமா என்பது சந்தேகமே குறிப்பாக அமெரிக்காவில் கூட நியூயார்க் பொருளாதார தலைநகராக இருந்தாலும் ,திரைப்படத் துறைக்கு லாஸ் ஏஞ்சல்ஸ், தகவல் தொழில்நுட்ப துறைக்கு சான் பிரான்சிஸ்கோ ,விமான போக்குவரத்து துறைக்கு அட்லாண்டா, அரசியல் தலைநகராக வாஷிங்டன் என்று உள்ளது. தமிழ் நாட்டில் விமான போக்குவரத்து துறை கூட சென்னையை தலைநகராக கொண்டு உள்ளது. சுமார் இரண்டரை கோடி முதல் 3 கோடி பயணிகளை சென்னை வானூர்தி நிலயம் கையாளுகிறது. அதற்கு அடுத்த இடத்தில் உள்ள கோவை வெறும் 30 லட்சம் பயணிகளை கையாளுகிறது. இரண்டாவது தலைநகர் எனறால் என்ன என்று எனக்கு புரியவில்லை .மதுரையை பொருளாதாரத் தலைநகர் ஆக்க முடியுமா? என்றால் மாநில அரசு முயற்சி எடுத்து செய்தால் முடியும். ஆனால் அவர்கள் அதை விரும்ப மாட்டார்கள். மதுரை நகர் தூத்துக்குடி போன்ற துறைமுக நகருக்கு அருகில் உள்ளது. மாநில அரசு வேண்டுமென்றே முயற்சி எடுத்து செய்தால் முடியும். ஆனால் அவர்கள் இரண்டாவது பெரிய பொருளாதார நகரமான கோயம்புத்தூரைக் கூட பொருளாதார தலைநகரை மாற்ற விரும்பமாட்டார்கள். அடுத்து எடுத்துக்கொண்டால் பார்க்கவேண்டியது விமானப் போக்குவரத்து துறை ,மும்பை  சில ஆண்டுகளுக்கு முன்புவரை டெல்லியை விட அதிக பயணிகள் கையாளும் விமான நிலயமாக இருந்தது. ஆனால் தற்போது பிஜேபி ஆட்சி வந்த பிறகு அவர்கள் வட இந்தியாவை தளமாகக் கொண்டவர்கள் என்பதால் டெல்லிக்கு முன்னுரிமை கொடுத்து டெல்லி அதிக வானூர்தி பயணிகளை கையாளும்  நகரமாக மாறிவிட்டது. விரைவில் டெல்லி பொருளாதார தலைநகராக மாறும் என்று பேசிக் கொள்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில்  மதுரையை தலைமையிடமாக கொண்ட ஒரு விமான நிறுவனத்தை தமிழக அரசு   துவங்கினால், மதுரையை விமான போக்குவரத்து தலைநகராக மாற்ற முடியும். ஆனால் தற்போதைய தமிழக அரசு விமான நிறுவனத்தை தூங்கினாலும் அவர்கள்  சென்னையை தலைமையிடமாக கொண்டுதான் தூங்குவார்கள் என்பதால் மதுரை விமான  போக்குவரத்து தலைநகர் ஆவதற்கான வாய்ப்பும் குறைவு. மேலும் மதுரையை திரைப்படத்துறை தலை நகரமாக மாற்ற முடியுமா என்றால் அதற்கான வாய்ப்பும் குறைவு. முன்பு சேலம் போன்ற நகரங்களில் தமிழ்நாட்டில் திரைப்படத் துறையில் சிறந்து விளங்கியிருக்கிறது. கருணாநிதி கதை வசனம் எழுதுவதற்காக சேலம் சென்றார் என்றெல்லாம் படித்திருக்கிறோம். ஆனால் தற்போதைய நிலையில் தமிழக அரசு திரைப்படக் கல்லூரி போன்றவற்றை சென்னையில் அமைத்திருக்கிறது. தற்போது பெங்களூர் போன்ற நகரங்களில் கூட திரைப்பட ஸ்டுடியோக்கள் கட்டப்பட்டு வருகின்றன .ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில்
ஒரு பெரிய திரைப்பட நகரம் உள்ளது, இங்கு தமிழ் திரைப்படங்கள் கூட எடுக்கப்படுகின்றன. மதுரையின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரான நன்மாறன் அவர்கள் மதுரையில் திரைப்பட நகரம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அப்போது கருணாநிதி கூட விளையாட்டாக பரிசீலிக்கிறோம், பரிசீலிப்போம்  என்று சொன்னாலே  வராது என்று சிரித்துக் கொண்டே சொன்னார். தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கூட 150 கோடி செலவில் திரைப்பட நகரம் கொண்டுவரப்போவதாக கேள்விப்பட்டிருக்கிறேன் .எனவே தமிழக அரசு தனியார் மற்றும் அரசு முதலீட்டுடன் மதுரையில் ஒரு திரைப்பட கல்லூரி  சிறிய அளவிலாவது அமைப்பது நல்லது.  மதுரையில் இருந்து பெருமளவு நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தமிழ் சினிமாவில் எடுக்கப்படும் படங்களில் பல மதுரையை கதைக்களமாக கொண்டிருப்பதால், அது மதுரையில் திரைப்பட வளர்ச்சி அடைய வழிவகுக்கும் .தொழில்துறை தரமாக வருமா என்பது சந்தேகமே. ஆனால் மதுரையை ஒரு துறையில் தலை நகரமாக மாற்ற முடியும் ,அது எந்த துறை என்றால் தகவல் தொழில்நுட்பத் துறை. தகவல் தொழில்நுட்பத் துறையில் பெங்களூரு வளர்ச்சி வரக்காரணம் பெங்களூர் அதற்கு முன்பு மின்னணுத் துறை (Electronic City) தலைநகரமாக இருந்தது இருந்தாலும், சென்னை, மும்பை ,கொல்கத்தா போன்ற பெரிய துறைமுகங்கள் பெரிய வானூர்தி நிலையங்களும் அப்போது இல்லை .ஆனால் அதன் பின்னர் வந்த தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் உருவான வசதி வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி தகவல் தொழில் நுட்ப தலை நகராக உருவெடுத்தது. பெங்களூர் உடன் மற்ற நகரங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் போட்டி போட  முடிய வில்லை காரணம், தகவல் தொழில்நுட்பத் துறையில் போட்டி போடும் போது அவர்களுக்கு நிறைய இடங்கள் தேவைப்படும்,  சென்னை, மும்பை ,கொல்கத்தா போன்ற வளர்ந்த நகர்களை விட பெங்களூரில் இடத்தின் விலை குறைவாக இருந்தது, மாற்றும் சாலைகள் போக்குவரத்து குறைவாக இருந்தது ,போன்றவை பெங்களூரு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு காரணம். பல தொழில் துறைகளும் வளர்ச்சி அடைந்த சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு பெரிய அளவில் இட ஒதுக்க முடியவில்லை .ஆனால் பெருநகரம் ஆக பெங்களூருவை மாற்றியே தீர வேண்டும் என்று துடிப்புடன் செயல்பட்ட கர்நாடக அரசு தகவல் தொழில்நுட்பத் துறையை கட்டிப்பிடித்து அதற்கு முன்னுரிமை கொடுத்து இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகராக பெங்களூருவை வளர்த்தெடுத்தது. பெங்களூருக்கும் பெருநகரம் ஆனது, பெங்களூருவை பின்பற்றிய ஹைதராபாத்  தகவல் தொழில்நுட்பத்தில் நல்ல வளர்ச்சி பெற்று இந்தியாவின் மற்றொரு  பெருநகரமாக உருவெடுத்தது-தொடரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு