இனக்கலவரம் வெடிக்க வடக்கு-கிழக்கு இணைப்பு கோரிக்கையே காரணம்- இலங்கை அமைச்சர்

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தைச் சுட்டிக்காட்டி தமிழ்க்கட்சிகள், இந்தியப் பிரதமருக்கு ஆவணம் அனுப்புவதால் வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒருபோதும் மீண்டும் இணைக்க முடியாது. இதற்கு முஸ்லிம் மக்கள் அனுமதி வழங்கமாட்டார்கள் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

"வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகமோ அல்லது முஸ்லிம்களின் தாயகமோ அல்ல. இரு மாகாணங்களும் இலங்கை எனும் நாட்டுக்குள்ளேயே அமைந்துள்ளன.

எனவே, மாகாணங்களைப் பிரித்து எந்த இனத்தவர்களும் சொந்தம் கொண்டாட முடியாது. அனைவரும் ஒரே நாட்டுப் பிள்ளைகள். அனைவரும் இலங்கையர்கள் என்ற எண்ணத்துடன் இங்கு வாழ வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அன்று இணைந்திருந்தபடியால் தான் இனக்கலவரம் வெடிக்க ஆரம்பித்தது. வன்முறைகள் தாண்டவமாடத் தொடங்கின.

இந்த இரு மாகாணங்களையும் முன்வைத்து தான் 'தமிழீழம்' என்ற கனவுடன் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஏந்திப் போராடினர்.

இதனால் நாடெங்கும் இரத்த ஆறு ஓடியது. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டார்கள். கடந்த காலத்தில் இடம்பெற்ற இந்தத் துன்பியல் நிகழ்வுகளைத் தமிழ்க் கட்சிகள் கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும் என்றார்.

குறிப்பு: வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்பு தான் பிரச்சனைக்கு காரணம் என்று பொய்யான காரணத்தை இலங்கை அமைச்சர் கூறுகிறார் .வடக்கும் கிழக்கும் முன்பு இணைந்து இருக்கவில்லை. வட மாகாணத்தில் தற்போது சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழும் அனுராதபுரமும் இருந்தது .இலங்கை இராணுவத்தினால் தமிழர்கள் தாக்குதல்களை சந்தித்த பிறகு, தாக்குதல்களை சந்திக்கும் இடங்களை இணைத்து விடுதலைப்புலிகள் தமிழீழ கோரிக்கையை எழுப்பினார்கள். அவர்களின் கோரிக்கையில் புத்தளம் மாவட்டம் இருந்தாலும், புத்தளத்தில் இலங்கை இராணுவத்தின் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் பெரிய அளவில் இல்லாததால் புத்தளம் பின்னர் தமிழிழ வரைபடத்தில் இருந்து அகற்றப்பட்டது. வடக்கு கிழக்கு தமிழர் வாழும் பகுதிகளை இணைத்து தனி மாகாணம் வழங்க  ராஜீவ் காந்தி முன் வந்த போது பிரபாகரன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கை ஜனாதிபதி ஜெயவர்தனா அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை என்றாலும் ,விடுதலைப் புலிகள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.அதை விடுதலைப்புலிகள்- ராஜீவ்கந்தி பிரச்சனையாக மாற்றுவதற்காக வடக்கு கிழக்கு இணைப்பு ஒத்துக்கொண்டார். வடக்கு கிழக்கு இணைப்பு பிடிக்காததால் பிரமதேசா தலமையிலான இலங்கை அரசு பின்னர் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி இந்திய ராணுவத்துடன் மோத வைத்து இந்திய ராணுவத்தை வெளியேற்ற வைத்தார்கள் . வடக்கு கிழக்கு இணைப்பு தோல்வியடைந்த பிறகு இலங்கையில் போர் தீவிரமடைந்து படுகொலைகளை தாண்டவமாடின. வடக்கு கிழக்கு இணைப்பு தோல்வியடைந்து இருக்காவிட்டால் அதாவது பிரபாகரன் ஏற்றுக்கொண்டிருந்தால் இவ்வளவு பெரிய இனப்படுகொலைகள் இலங்கையில் நடந்திருக்க வாய்ப்பே இல்லை ஆனால் சிங்கள அமைச்சர் அதை மாற்றிக் கூறுகிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு