ஒரு நாள் மழைக்கு மீண்டும் சென்னை மிதக்கிறது-எடப்பாடி

நாம் தமிழர் மற்றும் திமுகவினர் வம்பு சண்டை போட்டு வரும் சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி அறிக்கைகள் மூலம் திமுகவிடம் கேள்வி எழுப்பி வருகிறார். 1996ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை தமிழ் மாநில காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தபோது கூட ஜெயலலிதா அறிக்கைகளின் வாயிலாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அதுபோலவே எடப்பாடிபழனிசாமி அறிக்கைகள் வாயிலாக அரசாங்கத்தை கேள்வி கேட்டு வருகிறார் .சீமான் திமுகவினர் போன்றவர்கள் வம்பு சண்டை போட்டு  வருகிறார்கள் என்பதே என்னுடைய கருத்து. எடப்பாடி பழனிசாமியின் ஒருநாள் மழை பற்றிய அறிக்கை இதோ:
அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒரு நாள் மழைக்கு மீண்டும் சென்னை மிதக்கிறது. 8 மாதங்களில் தி.மு.க., அரசு என்ன சாதித்தது? வடகிழக்கு பருவமழை ஓய்ந்திருந்த போது வடிகால்களை சீரமைத்திருந்தால் பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம். சென்னையில் மின்சாரம் தாக்கி 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மின்வாரிய ஊழியர்களின் அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் என பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, அமைச்சரை பதவி விலக கூறிய ஸ்டாலின் இப்போது கூறுவாரா? தங்களின் இயலாமையை மறைக்க எதிர்க்கட்சிகளை குறை கூறாமல், உண்மையான அக்கறையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு