மெட்ரோ நிலையங்களில் தண்டவாளங்களுக்கும் கூரை போன்று புறநகர் ரயில் தண்டவாளங்களுக்கும் தேவை.
. சென்னை புறநகர் ரயில் நிலயம்
ஏழு மெட்ரோ நிலையங்களில் பல கோடி ரூபாய் செலவில் நடை மேடை, கூரை மேம்பாடு பணிகள் நடக்க உள்ளது.சென்னை மெட்ரோ ரயில் முதல் திட்டத்தில், முதல் கட்டமாக, ஆலந்துார் - கோயம்பேடு நிலையங்கள் இடையே , 2015ம் ஆண்டு, ஜூன் 29ல் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் நிலையம்
அப்போது, இந்நிலையங்களும், இப்பாதையில் உள்ள ஈக்காடுதாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம், சி.எம்.பி.டி., நிலையங்களிலும், நடை மேடை பகுதியில் மட்டும் கூரை நிறுவப்பட்டது. ரயில் தண்டவாளம் உள்ள பகுதியில் கூரை அமைக்கப்படவில்லை. இதனால், மழை காலங்களில் தண்டவாளங்களில் மழைநீர் விழுந்து வெளியேறும் நிலை உள்ளது. மழையால் தண்டவாளங்கள் துருப்பிடிக்கும் நிலையும், நடை மேடைகள், பக்கவாட்டு பாதுகாப்பு தடுப்பு சுவர்கள் பராமரிப்புக்கு கூடுதல் செலவாகும் நிலையும் உள்ளது.இந்நிலையங்கள் மற்றும், பாதை துவங்கப்பட்டு ஆறரை ஆண்டுகள் ஆனதால், தேவையான மேம்பாடு பணிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த, ஏழு நிலையங்களின் நடை மேடைகளிலும் எஞ்சியுள்ள பகுதிகளில், முழுவதுமாக நவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள பாலிகார்ப்பனேட் வண்ண கூரை நிறுவப்படுகிறது. இத்துடன், ஆலந்துார் மற்றும் சி.எம்.பி.டி., மேம்பால மெட்ரோ நிலையங்களில், வெளிச்ச வசதிக்காக, பக்கவாட்டு சுற்றுசுவரில் தேவையான இடத்தில், கண்ணாடி சுவர் நிறுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையங்களில், 2.5 கோடி செலவில் மேம்பாடு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதே போன்று சென்னை புறநகர் ரயில் பாதைகளிலும் தண்டவாளங்களுக்கு மேற்கூரை அமைக்க வேண்டும் .சென்னை மும்பை போன்ற நகரங்களில் ,நான் பார்த்திருக்கிறேன் சிறிய மழை வந்தாலே தண்டவாளங்களில் தண்ணீர் புகுந்து ரயில்கள் இயக்கப்பட முடியாமல் போகிறது. இவற்றை தடுப்பதற்காக சென்னை புறநகர் ரயில்வேக்கும் இதுபோன்ற வசதிகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் .மேலும் மெட்ரோ ரயில் உள்ளது போன்ற ரயில்வே வசதிகளை அந்த அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவிற்காவது சென்னை புறநகர் பகுதிகளுக்கும் அமைத்துக் கொடுக்க வேண்டும். குறிப்பாக குளிரூட்டப்பட்ட ரயில் நிலையங்கள் அமைத்து கொடுத்தால், சென்னை போன்ற வெப்பமான நகரங்களில் பயணிகள் மிகுந்த பயன் அடைவார்கள். சென்னை புறநகர் ரயில்களுக்கான கட்டுமானங்கள் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளதால், புதிதாக அதிக செலவில் கட்டப்பட வேண்டியது இல்லை என்பதாலும், நல்ல தரமான ரயில்வே நிலையங்களை குறைந்த செலவிலேயே குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்க முடியும். இதற்காக தேவைப்பட்டால் கட்டணங்களை சிறிது கூட்டிக் கொள்ளலாம் அல்லது விளம்பர வருமானங்கள் போன்றவர்களின் மூலம் அந்த செலவுகளை சமன் செய்யலாம் சமன் செய்யலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக