மதுரை மாநகராட்சி விரிவாக்கம், ரயில்வே கோரிக்கைகள்.

 கோவை அளவுக்கு 640 சதுர கீ மி அளவுக்கு மதுரை மாநகர எல்லையை விரிவுபடுத்தினால் மக்கள் தொகையில் 24 லட்சம் வந்து விடும். தமிழக அளவில் மீண்டும் 2ஆம் இடம் வந்து விடும் நமது மதுரை.24 லட்சம் மக்கள் தொகை உள்ள நகரத்தை மத்திய அரசால் புறக்கணிக்க முடியாது. சர்வதேச அங்கிகாரம் தானக வந்துவிடும். தற்போது மதுரை 147 சதுர கீ மி.தான் இதில் வேதனை என்ன வேண்றால் மதுரை யை விட மக்கள் தொகையில் பின்தங்கி உள்ள .திருச்சி திருப்பூர் .திருநெல்வேலி போன்ற நகரங்களின் மாநகர பரப்பளவு மதுரையை விட அதிகமாக உள்ளது.தமிழக அளவில் 6 வது இடத்தில் மதுரை உள்ளது.

 ரயில்வே தேவைகளிலும் மதுரை இன்னும் கண்டு கொள்ளப்படாத நிலையிலேயே உள்ளது.

1. மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் வேலை நிமித்தம் அதிகம் குடி பெயர்ந்த பகுதி சென்னைக்கு அடுத்து கோவை மற்றும் பெங்களூர்.

ஆனால் கோவைக்கு மீட்டர் கேஜில் இருந்து அகலப் பாதையாக மாற்றப்பட்ட பழனி வழிப் பாதையில் இன்று வரை முறையான ரயில் வசதி கொடுக்கப்பட வில்லை. ஓடும் ஒரே ரயிலும் மதுரை - பழனி வரை ஒரு எண்ணுடனும், பழனி முதல் கோவை வரை வேறு ஒரு எண்ணுடனும் ஓடி சாமானியர்களை குழப்பி வருகிறது. 

குறைந்த பட்சம் முன்பு மீட்டர் கேஜில் இயங்கிய ரயில்களையாவது மீண்டும் இயக்க வேண்டும்.

பெங்களூருக்கு பகல் நேர ரயில் வேண்டும் எனும் பல நாள் கோரிக்கை இன்று வரை நிறைவேற்றப் பட வில்லை. கேட்டால், சர்வதேச விமான நிலைய கோரிக்கைக்கு கிடைத்த பதிலைப் போல் இதற்கும் ஒரு பதில் சமீபத்தில் கிடைத்தது. இப்போது கிடையாது - ஏற்கனவே மூன்று ரயில்கள் இயங்குகின்றன என்று.

3. அதே போல் மதுரை - கூடல் நகரில் டெமு/மெமு பராமரிப்பு நிலையத்தை துவங்கி மதுரையை சுற்றி உள்ள சிறு நகரங்களுக்கு மெமு/டெமு சேவையைத் துவங்கினால் அந்நகர மக்களும் நாமும் பயன் பெறலாம் என்ற கோரிக்கையும் இன்று வரை எட்டாக் கனியாகவே உள்ளது. திருச்சி,சேலம் ஆகிய ரயில்வே கோட்டங்களில் உள்ள இந்த சேவை மதுரை கோட்டத்தில் மட்டும் இன்று வரை இல்லை.

4. மதுரை - போடி தடத்தில், வேலை முடிந்த தேனி வரை  இன்னும் ரயில் சேவை துவங்கப் படாமலே உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு