பரப்பளவில் பெரியதாக இருப்பதால் கோபிசெட்டிபாளையம் தனி மாவட்ட கோரிக்கை நியாயமானது:பாகம்-1
கோபி தனிமாவட்டமாக உருவாவதை அமைச்சர் தடுக்கிறார் - ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றச்சாட்டு
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை தாங்கி, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியினரை பாராட்டி பேசினார்.
முன்னதாக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸசுவரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊரக உள்ளாட்சி தேர்தலில் கொ.ம.தே.க. சார்பில் 4 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், 10 ஊராட்சி ஒன்றியக்குழு கவுன்சிலர்கள், 24 ஊராட்சி மன்ற தலைவர்கள், 200 ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியும், தி.மு.க. கூட்டணியும் சமஅளவில் வெற்றியை பெற்றுள்ளன.
கோர்ட்டு உத்தரவின்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என நம்புகிறேன். இந்த தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி அனைத்து இடங்களிலும் அமோக வெற்றி பெறும்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப்-2ஏ, குரூப்-4 தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது டி.என்.பி.எஸ்.சி. மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது. எனவே முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோபிசெட்டிபாளையத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். பொள்ளாச்சி, எடப்பாடி, கும்பகோணம் ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் கோபிசெட்டிபாளையம் தனி மாவட்டமாக உருவாவதை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தடுக்கிறார். அவர் தடுப்பது மட்டுமின்றி கிண்டல் செய்து பேசுகிறார்.
சட்டசபையில் கவர்னர் உரை கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் உள்ளது. ஆனால் தொழில் வளர்ச்சியில் முதலாவது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 14-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. தொழிற்சாலைகளை மூடியதால் உபரி மின்சாரம் கிடைக்கிறது. இதனால்தான் மின்மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது என்று அமைச்சர் தங்கமணி சொல்கிறார். இவ்வாறு ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
இதுவும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அதாவது இடைப்பாடி முதலமைச்சராக இருந்த போது அளிக்கப்பட்ட பேட்டி. அமைச்சர் ஒருவரே தன்னுடைய சொந்த மாவட்டத்தை இரண்டாக பிரிப்பதற்கு இடையூறாக இருப்பதாக கொங்கு மக்கள் தேசிய கட்சி குற்றம் சாட்டுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, உண்மையாக இருப்பதற்கான வாய்ப்பும் அதிகம். காரணம் வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டது, 15 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டது .11 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட சேலம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்படும் என்று தகவல் வெளியானது. ஆனால் கடைசிவரை பிரிக்கப்படவில்லை. எடப்பாடி முதலமைச்சராக இருப்பதால் அவர் தன்னுடைய சொந்த மாவட்டத்தை பிரிக்கவில்லை என்றெல்லாம் கூறப்பட்டது .எடப்பாடி சேலம் மாவட்ட
அதிமுக மாவட்டச் செயலாளராக இருந்தாலும், அவர் முழு சேலம் மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளராக இருக்க மாட்டார் என்று நம்புகிறேன். கன்னியாகுமரி போன்ற சிறிய மாவட்டங்களை குமாரி மேற்கு, கிழக்கு என்று பிரிக்கப்பட்டு இருக்கும் போது, கண்டிப்பாக சேலம் கூட ஜெயலலிதாவால் இரண்டு மாவட்டங்களாக அதிமுக கட்சிக்காக பிரிக்கப்பட்டிருக்கும்.
அப்படியிருந்தும் எடப்பாடி சேலம் மாவட்டத்தை பிரிப்பதற்கு முயற்சி செய்யவில்லை . சேலம் மாவட்டத்தை பிரித்தால் யாரிடம் இருந்தும் எதிர்ப்பு வராது. சேலத்தை விட சிறிய மாவட்டமான நாகப்பட்டினம் பிரிக்கப்பட்டபோது ஒரு சிலர் கிண்டல் அடித்தார்கள் என்றாலும், நாகப்பட்டினத்தை பிரித்து மயிலாடுதுறையை உருவாக்கியது நல்லது. காரணம் நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் பிரிக்கப்பட்டபோது நாகப்பட்டினம் அதன் வடபகுதி மற்றும் தென் பகுதிக்கு இடையே தொடர்பு அறுபட்டு இடையில் பாண்டிச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்தால் இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்தது. தொடர்பற்டிருந்த நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது தவறு இல்லை.
பிரிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தின் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் முறையே தற்போது 9 லட்சம், 6 லட்சம் என்ற மக்கள் தொகையை கொண்டுள்ளன. ஆனால் 34 லட்சம் மக்கள் தொகை கொண்ட சேலத்தை விரைவாக பிரிப்பது அவசியம். ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலின்போது மேட்டூரை தலைமையிடமாகக் கொண்டு சேலம் மாவட்டத்தை பிரிப்போம் என்று 2014ஆம் ஆண்டு வாக்குறுதி கொடுக்கப்பட்டதாக அறிந்தேன். ஆனால் எடப்பாடி முதலமைச்சர் ஆன போது நிறைய பேர் எடப்பாடி நகரை தலைமையிடமாக கொண்டு பிரிக்க வேண்டும் என்று கூறினார்கள். அப்படி எடப்பாடி அல்லது மேட்டூரை தலைமையிடமாகக் கொண்டு சேலம் மாவட்டம் பிரிக்கப்பட்டு இருந்தாலும் சேலம் சுமார் 20 லட்சம் மக்கள் தொகையையும் ,எடப்பாடி அல்லது மேட்டூர் சுமார் 14 லட்சம் மக்கள் தொகையைக கொண்டிருக்கும்.
சேலம் மாவட்டத்தின் மக்கள்தொகை 2011 தான் 34 லட்சம் தற்போது சுமார் 40 லட்சம் வரை இருக்கலாம் .இதன் மூலம் அரசு அலுவலகங்கள் மருத்துவமனைகள் போன்றவற்றில் கூட்ட நெருக்கடி குறையும். மக்களும் அதிக தூரம் சென்று மாவட்டத் தலைநகரங்கள் அடைய வேண்டியதில்லை, பாதி தொலைவில் மாவட்ட தலைநகரங்களை அடையலாம். பெரும்பாலும் மாநிலத் தலைநகரான சென்னை தவிர்த்து மாவட்ட தலைநகரங்கள் வளர்ந்து வருகின்றன. எனவே புதிய மாவட்ட தலைநகரங்கள் உருவாக்குவது, தொழில் வளர்ச்சி இன்றி வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கு வேலை தேடி சென்று கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கோபிசெட்டிபாளையம் மாவட்டக் கோரிக்கையை தற்போது எழுப்பப்பட்டு வருகிறது அதற்கு மிக முக்கிய காரணம் ஈரோடு மாவட்டத்தின் பரப்பளவு சுமார் 5500 சதுர கிலோ மீட்டருக்கு மேல் இருப்பது கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் சுமார் ஆயிரத்து 900 சதுர கிலோமீட்டர்கள் இருக்கின்றன. 2000 சதுர கிலோ மீட்டருக்கு உள்ள மாவட்டங்களிலேயே, கடைக் கோடியிலிருந்து மாவட்ட தலைநகரங்களில் சென்றடைய 65 முதல் 70 கிலோமீட்டர் வரை தூரம் உள்ளது. 5500 சதுர கிலோமீட்டர் உள்ள ஈரோடு போன்ற மாவட்டங்களில் தலைநகரை சென்றடைய மக்கள் 200 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் பணவிரயம், கால விரயம் ஏற்படுகிறது. ஈரோட்டில் மக்கள் தொகை 2011ஆம் ஆண்டு சுமார் 22 லட்சம், தற்போதைய நிலையில் சுமார் 27 லட்சம் வரை இருக்கலாம்.
அப்படி ஈரோடை இரண்டாக பிரித்தாலும் ஈரோடு மற்றும் கோபி முறையை சுமார் 2500 ,3000 சதுர கிலோமீட்டர் கொண்டதாக இருக்கும். மக்கள் தொகை சுமார் 15 ,12 லட்சம் கொண்டதாக இருக்கும் .சுமார் ஐந்து மற்றும் ஏழு லட்சம் கொண்ட அரியலூர், பெரம்பலூர் விட மக்கள் தொகை அதிகம் கொண்ட மாவட்டங்கள் ஆகவே இவை இருக்கும். மேலும் சென்னை போன்ற பெரிய தொழிற்சாலைகள் இல்லாத ஈரோடு போன்ற மாவட்டங்களில் புதிதாக மாவட்ட தலைநகரங்கள் உருவாகும்போது, மேற்கொள்ளப்படும் கட்டுமான நடவடிக்கைகளினால் வேலைவாய்ப்பும் பெருகும். வருங்காலத்தில் மருத்துவ கல்லூரிகள் போன்றவை வருவதற்கான வாய்ப்பு உள்ளது ,இதனால் மக்களுக்கு மருத்துவ வசதிகள் அதிக அளவில் கிடைக்கும். அரசு அலுவலகங்கள் மருத்துவமனைகளில் ஏற்படும் இட நெருக்கடி குறையும்எனவே
கோபிசெட்டிபாளையம் மாவட்டம் கோரிக்கை நியாயமானதே.
கருத்துகள்
கருத்துரையிடுக