பரப்பளவில் பெரியதாக இருப்பதால் கோபிசெட்டிபாளையம் தனி மாவட்ட கோரிக்கை நியாயமானது:பாகம்-2

கோபியை தலைநகரமாக கொண்டு, ஒரு மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்பதில் எனக்கும் அக்கறை உண்டு.
ஆகஸ்ட் 2019
''கோபியை தலைநகரமாக கொண்டு, ஒரு மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்பதில் எனக்கும் அக்கறை உண்டு,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், கோபி சட்டசபை தொகுதியில், மகளிர் திட்டத்தின் கீழ், 56.26 லட்சம் ரூபாய் மதிப்பில், 225 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாணவர்கள் கையில் மட்டும், லேப்டாப் இருந்தால் போதாதது என்பதால், போதிக்கும் ஆசிரியர்கள், 80 ஆயிரம் பேருக்கும், லேப்டாப் வழங்கி வருகிறோம். தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில், குளறுபடி இருப்பது தெரியவந்தால், அதுகுறித்து எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்வித்துறையை பொருத்த வரையில், ஒருவர் கூட குற்றமோ அல்லது குறை கூறாத வகையில் நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். இதுவரையில் எந்த பிரச்னையுமில்லை. கோபியை தலைமையிடமாக கொண்டு, தனி மாவட்டம் உருவாக்குவது குறித்து, சிலர் கருத்து தெரிவித்துன்றனர். கோபியை தலைநகரமாக கொண்டு, ஒரு மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்பதில் எனக்கும் அக்கறை உண்டு. இந்த மண்ணிலே பிறந்து, இந்த மண்ணிலே கொண்டு வரவேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்காதா. அதற்கான இடத்தை தேடி கொண்டு இருக்கிறோம். இடம் கிடைத்த பின் தான் பரிந்துரை செய்யப்படும். அதற்கான முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் கொண்டு வர, குறைந்தது, 50 ஏக்கர் நிலம் தேவைப்படும். பின், அலுவலகம் சார்ந்த கட்டடம் மற்றும் குடியிருப்புகள் கட்ட, 50 ஏக்கர் தேவைப்படும். எனவே போதிய இடவசதி கிடைத்த பின் தான் முடிவு செய்யப்படும். எல்லா மாவட்டத்தையும் பிரிக்கும் நோக்கம் இந்த அரசுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கோபியை மாவட்டமாக்கும் அக்கறை உண்டு: அமைச்சர் செங்கோட்டையன் .

செங்கோட்டையின் அவர்கள் மீது ஈரோடு மாவட்டத்தை பிரித்து கோபிச்செட்டி பாளையம் உருவாக்க தடையாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் ,அவர் நான் தடையாக இல்லை என்று கூறுகிறார் .மேலும் ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரிப்பதற்கான திட்டம் உண்டு என்றும் கூறுகிறார். என்னை பொறுத்தவரை மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்று இருக்கவேண்டும், அப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் சுமார் 78 மாவட்டங்கள் இருக்க வேண்டும் .தெலுங்கானாவில் தற்போது 32 மாவட்டங்கள் வரை உள்ளன அதில் பெரும்பாலானவை தற்போது புதிதாக உருவாக்கப்பட்டவை .தெலுங்கானாவில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 17 .ஆனால் அங்கே 32 மாவட்டங்கள் உள்ளன .அப்படி பார்த்தால் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை விட சுமார் இரு மடங்கு மாவட்டங்கள் உள்ளன . தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39,மாவட்டங்களின் எண்ணிக்கை 38 மட்டுமே. தெலுங்கானாவின் மாவட்டங்களின் விகிதத்துடன் ஒப்பிட்டால் ,தமிழ்நாட்டின் மாவட்டங்களின்   எண்ணிக்கை குறைந்தபட்சம் 75வது இருக்க வேண்டும். சுமார் 15 க்கும் மேற்பட்ட புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு தெலுங்கானா முதலமைச்சர் அவர்கள் கூறிய காரணம் மாவட்ட தலைநகரங்கள் தான் வருவாய் தரும் நகரங்களாக உள்ளன என்பதே. இது பற்றி பின்னர் பார்ப்போம். செங்கோட்டையன் அவர்கள் கோபிச்செட்டி பாளையம் மாவட்ட தலைநகரம் அமைப்பதற்கு நூறு ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக கூறுகிறார் .மாவட்ட தலைநகரம் அறிவிப்பை வெளியிட்டால், நிலம் தானாகவே கிடைக்கும் என்பதே என்னுடைய கருத்து. மாவட்ட தலைநகரம் கோபிசெட்டிபாளையத்தில் நடு நகரில் இருக்க வேண்டியதில்லை,புற நகர்ப்பகுதியில் மாவட்ட தலைநகரம் அமைந்தால்,பின்னர் அதுவே பின்பு முக்கிய நகர பகுதியாக உருவெடுக்கும் என்பதே கடந்த கால எடுத்துக்காட்டுகள் .சுமார் 3,000
சதுர கிலோ மீட்டர்  பரப்பளவு கொண்டதாக இருக்கப்போகும் கோபிச்சட்டிபாளையத்தில் 100 ஏக்கர் நிலம்
பெரிய சிக்கலை ஏற்படுத்தப் போவதில்லை .எனவே கோபிசெட்டிபாளையம் தனி மாவட்டம் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் .தற்போது ஆட்சி மாறிவிட்டது ,தற்போதைய திமுக அரசு கோபிச்செட்டி பாளையம் உருவாக்கினால் அந்த பெருமை தற்போதைய திமுக  அரசைச் சாரும். இதன் மூலம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு