கூவம் ஆற்றை தூய்மை படுத்துவது எப்படி?
கூவம் நதியானது சென்னையின் சாபக்கேடாக மாறி வருகிறது. கூவம் நதியை தூய்மைப்படுத்த ஆயிரக்கணக்கான கோடிகள் செலவிடப் போவதாக அறிவிப்பு வந்தன. ஆனால் முழுவதுமாக செயல்பட்டதா? ஓரளவு செலவு செய்யப்பட்டதா? என்பது தெரியவில்லை. ஆனால் கூவம் நதி இதுவரை தூய்மைப்படுத்த படவில்லை. 2015ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கின் போது கூவம் நதி தானாகவே தூய்மையானது .மதன் போன்ற எழுத்தாளர்கள் கூட கூவம் நதியை தூய்மை ஆகிய தீர வேண்டும் ,அது நடந்தே தீரவேண்டும். இங்கிலாந்தின் தேம்ஸ் நதியானது முன்பு இதைவிட மோசமான நிலையில் இருந்தது. பின்னர் அது தூய்மைப்பட்டுத என்ற படகு விட்டு கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகினார். ஆனால் தமிழ்நாட்டின் நிலைமையைப் பார்த்தால் இன்னும் ஒரு இருபது முப்பது ஆண்டுகளுக்கு அதற்கான வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது .கூவம் நதியை தூய்மைப்படுத்த வேண்டியது மிக அவசியம். அதற்கு முன் கவனிக்க வேண்டிய ஒன்று, கழிவுகள் கலப்பதை தடுப்பது .ஏற்கனவே நான் கூவம் நதி பற்றிய தகவல்களைத் தேடிப் படித்து வருகிறேன் .அப்போது ஒருவர் கூவம் நதிக்கரைகளில் நடை பயணம் செய்து , அவர் கொடுத்த தகவல்களின் படி கூவம் நதியில் தொழிற்சாலைகள் யாரும் கழிவுகளைக் கலக்கவில்லை, பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கழிவுகளைக் கலக்குகிறார்கள் என்றும் கூறினார் .கூவம் நதி திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயம் செய்வதற்கு பயன்படுத்தப்படுவதாகவும், அது சென்னை மாநகரின் எல்லை நெருங்கும்பது மாசடைந்து போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
எனவே தமிழக அரசாங்கமானது கூவம் நதியை ஒட்டி கழிவு நீரோடை அமைப்பது மற்றும் கூவம் நதியில் பொதுமக்கள் கழிவுகள் கலப்பதை தடுப்பது ஆகிய செயல்களில் ஈடுபட வேண்டும். அதன் பின்னர் பெருமழை வரும்போதும் கூவம் ஆறு தானாகவே தூய்மையாகி விடும் என்பதே என்னுடைய கருத்து.கூவம் ஆற்றின் தூய்மைக்கேடு பற்றிய செய்தி இதோ: ஆவடியில், சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தினசரி வெளியேறும் 3.6 கோடி லிட்டர் தண்ணீர் கருமை நிறத்தில் கூவம் ஆற்றில் கலப்பதால், மேலும் மாசடையும் அவலம் ஏற்பட்டுள்ளது.ஆவடி மாநகராட்சி எல்லை வரை கூவம் ஆறு தெளிந்த நீராக வருகிறது. ஆவடி மாநகராட்சியை கடந்து செல்லும் போது, சாக்கடை போல கருமை நிறமாக மாறி மாசடைந்து, சென்னை மாநகருக்குள் செல்கிறது. 'கூவம் ஆற்றை துாய்மைப்படுத்த, முந்தைய ஆட்சி காலங்களில் பல முறை திட்டமிடப்பட்டும் கூட, இன்னும் நிறைவேறாக கனவாக உள்ளது. இந்நிலையில், ஆவடி மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தன போக்கால், கூவம் ஆறு மேலும் மாசடையும் நிலை ஏற்பட்டு உள்ளது.
ஆவடி, பருத்திப்பட்டு பகுதியில் 36 எம்.எல்.டி., சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர், கூவம் ஆற்றில் ராட்சத குழாய் வாயிலாக கலக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீர், இங்கிருந்து தொழிற் சாலைகளுக்கு விற்பனை செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில், கழிவு நீரின் தன்மை போதிய அளவு குறையாததால், அது பயன்படுத்த முடியாத நிலையில், மீண்டும் ஆற்றில் விடப்படுகிறது.
தற்போது தேர்தல் பணியில் ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக இருப்பதால், சுத்திகரிப்பு பணியில் கோட்டை விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், ஆவடி பகுதியில் ஒட்டு மொத்த கழிவு நீரும் கூவம் ஆற்றில் கலக்கிறது. ஒவ்வொரு நாளும் 3 கோடியே 60 லட்சம் லிட்டர், கருமை நிறத்தில் சாக்கடையாக மீண்டும் கூவம் ஆற்றில் கலக்கிறது. இதை அதிகாரிகள் கண்காணித்து, கட்டுப்படுத்தாவிட்டால், கூவம் ஆற்றின் நிலை மேலும் மோசமாகும் என சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
தற்போது தேர்தல் பணியில் ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக இருப்பதால், சுத்திகரிப்பு பணியில் கோட்டை விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், ஆவடி பகுதியில் ஒட்டு மொத்த கழிவு நீரும் கூவம் ஆற்றில் கலக்கிறது. ஒவ்வொரு நாளும் 3 கோடியே 60 லட்சம் லிட்டர், கருமை நிறத்தில் சாக்கடையாக மீண்டும் கூவம் ஆற்றில் கலக்கிறது. இதை அதிகாரிகள் கண்காணித்து, கட்டுப்படுத்தாவிட்டால், கூவம் ஆற்றின் நிலை மேலும் மோசமாகும் என சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக