இலங்கைக்கு ரூ.3750 கோடி இந்தியா கடனுதவி

இலங்கை நாடானது கிட்டத்தட்ட திவாலாகும் நிலையில் உள்ளது. இந்தியா 3,750 கோடி ரூபாய் கடன் வழங்க முன்வந்துள்ளது. இதுபோக பெட்ரோல் வாங்குவதற்கு  வாங்குவதற்கு கடன் என்று சுமார் 6 ஆயிரம் கோடிக்கு - 10,000 கோடி வரை கடன் வழங்குவதாக படித்ததாக ஞாபகம்.  இவ்வளவு கடன் வாங்கிவிட்டு 2 -3 கோடி ரூபாய் வரும் இந்திய மீனவர்கள் ளின் படகுகளை ஏலம் போட போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.  இந்தியாவும் தற்போது இலங்கை நெருக்கடியில் இருப்பதை புரிந்து கொண்டு கடன் வழங்குவதற்கு முன்பு தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடவடிக்கை ,கைது நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் மற்றும் அவர்களின் படகுகளை ஒப்படைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைக்க வேண்டும் .அவற்றை நிறைவேற்றி விட்டு, அவற்றை தமிழ்நாட்டில் கூறி வாக்கு கேட்டால் பிஜேபிக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கும். ஏற்கனவே பிஜேபியினர் நாங்கள் வந்த பிறகு எந்த மீனவரும் தமிழ்நாட்டில் சுடப்படவில்லை என்று கூறுகிறார்கள் .மீனவர்களின் படகுகளை மீட்டு கொடுத்து ,இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்டுக் கொடுத்து, நாங்கள்தான் மீட்டுக் கொடுத்தோம் என்று சொல்லி தமிழ்நாட்டில் வாக்கு கேட்கலாம், ஈழத்தில் அரசியல் கைதிகள் பலர் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணையின்றி மற்ற விசாரணை கைதிகளாக நிறைய ஆண்டுகளாக சிறையில் உள்ளார்கள் .அவர்களை விடுவிப்போம் என்று சில கட்சிகள் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ராஜபட்சே போன்றவர்களின் கட்சிகள் வாக்குறுதி அளித்தாலும் வெற்றி பெற்று வந்த பின்னர் விடுதலை செய்வதில்லை. இந்திய அரசு அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி விட்டு, தமிழ்நாட்டில் அதையும் சொல்லி பிரசாரம் செய்தால் பிஜேபி தமிழ்நாட்டில் வாக்குகளை கூடுதலாக பெற முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு