புதிய பேருந்து நிலையம் கட்ட ரூ.38.9 கோடி..அரசு அனுமதி கிடைத்ததும் பணி துவங்கும்.
காஞ்சிபுரம் மாநகராட்சி நகரில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில், நகருக்கு வெளியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க, 38.9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை அருகில், 12 ஏக்கர் பரப்பளவு இடம் தேர்வு செய்து, மாநகராட்சி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.காஞ்சிபுரம் நகர் பகுதியில், போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க, கடந்த ஆட்சி காலத்தில், காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் கிராமத்தில், இடம் தேர்வு செய்யப்பட்டது.அந்த இடத்தில் விவசாயம் செய்து வந்தோர் சிலர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். முட்டுக்கட்டை போட மாவட்ட நிர்வாகம், 10.5 ஏக்கரில் நிலம் கையகப்படுத்த முடிவு செய்தது. புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான நிதியை, அப்போதைய அரசு அறிவித்திருந்தது.கீழ்கதிர்பூர் இடத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு, சில அரசியல் கட்சியினர் முட்டுக்கட்டை போட்டதாகவும் புகார் எழுந்தது. மேலும் கட்டுமான பணிகள் நடப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரு ஆண்டுகளாக, அந்த பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த சித்தேரிமேடு சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை அருகில், தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை, மாவட்ட நிர்வாகம் பேசி முடிவு செய்துள்ளது.புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான அனுமதி கோரி, அரசுக்கு, மாநகராட்சி சார்பில் அந்த இடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எதிர்பார்ப்புமொத்தம், 12 ஏக்கரில் பேருந்து நிலையம் மற்றும் மூன்று ஏக்கரில் பல்நோக்கு 'பார்க்கிங்' வசதி கட்ட மொத்தம், 15 ஏக்கர் நிலம், அறக்கட்டளையிடம் கேட்டு அனுமதி வாங்கியுள்ளதாக, நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்நிலையில், காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம் கட்ட அரசாணை வெளியிட்டு 38.09 கோடி நிதியையும் அரசு அறிவித்துள்ளது.காஞ்சிபுரத்தில் உள்ள பேருந்து நிலையம், நகருக்கு வெளியில் அமைந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் என, மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு, தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கோரி அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.

அரசு அனுமதி கிடைத்தவுடன் கட்டுமான பணி துவங்கும்.பி.நாராயணன், மாநகராட்சி ஆணையர், காஞ்சிபுரம்.தேர்வு இடம் மாநகராட்சியில் இணையுமா?அரசு, தற்போது தேர்வு செய்துள்ள இடத்தை நான்கு ஆண்டுகளுக்கு முன் அ.தி.மு.க., ஆட்சியில் தேர்வு செய்தனர். அப்போது, காஞ்சிபுரம் நகராட்சியாக இருந்ததால், பேருந்து நிலையம் அந்த இடத்தில் அமைந்தால் அதன் வருவாய் ஊராட்சிக்கு சென்று விடும். நகராட்சிக்கு பயன் இல்லை என, அத்திட்டம் கைவிடப்பட்டது.
தற்போது அதே இடத்தில், பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால், அனைத்து பேருந்துகளும் நின்று செல்லும். மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். அதற்கான நடவடிக்கை எடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு 39 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது .இதன் மூலம் நடைபெறும் கட்டுமான தொழில் மூலமாக, ஆயிரக்கணக்கானவர்கள் வேலை பெறுவார்கள். மேலும் காஞ்சிபுரம் நகர் வளர்ச்சி அடையும் ,காஞ்சிபுரம் ஆனது சென்னை பெருநகர பகுதியுடன் வைக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.
காஞ்சிபுரத்தைத் தனி பெரு நகரமாக உருவாக்குவது நல்லது. திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யாறு போன்றவற்றை காஞ்சிபுரத்தில் இணைத்து காஞ்சிபுரம் பெருநகர வளர்ச்சி குழுமம் அமைப்பதே நல்லது . தற்போது சென்னை புறநகர் ரயில் பாதை காஞ்சிபுரம் வரை இயக்கப்படுகிறது, எனவே காஞ்சிபுரம் வருங்காலத்தில் சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மற்றுமொரு காரணம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள மாபெரும் தொழிற்சாலைகள் மற்றும் நிதி நிறுவனங்கள் போன்றவை வரும் காலத்தில் காஞ்சிபுரத்தை ஒட்டி வருவதற்கான வாய்ப்பு உள்ளதால், காஞ்சிபுரம் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக அல்லது சென்னைக்கு மிக அருகில் இருப்பதால் தமிழ்நாட்டின் பொருளாதார தலைநகரமாக வருவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் இருந்து இரவு நேரங்களில் சென்னை மற்றும் திருச்சி ,மதுரை போன்ற நகர்களுக்கு வரும் பேருந்துகளில் இடநெருக்கடி இருப்பதை பயணிகள் நன்கு அறிவர் .எனவே வருங்காலத்தில் காஞ்சிபுரத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து காஞ்சிபுரத்திற்கு பின்னிரவு பேருந்துகளை இயக்கினால் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களை மதுரை, திருச்சி வழியாக காஞ்சிபுரத்துடன் இணைக்கலாம். சென்னைக்கு பேருந்து கிடைக்காதவர்கள் கூட காஞ்சிபுரம் வந்து சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. காஞ்சிபுரம் கோயம்பேடு போன்ற பெரிய பேருந்து நிலையம் கட்டுவதற்கும் தகுதியான இடம் என்பதையே கருத்து.
கருத்துகள்
கருத்துரையிடுக