பரப்பளவில் பெரியதாக இருப்பதால் கோபிசெட்டிபாளையம் தனி மாவட்ட கோரிக்கை நியாயமானது-முழு பதிவு.

ஈரோடு மாவட்ட சட்டமன்ற தொகுதி வரைபடம்.

ஈரோடு மாவட்டம் வட்டங்கள் (தாலுகா) வரைபடம்

கோபிசெட்டிபாளையம் மாவட்டம் எப்படி பிரிக்கப்பட வேண்டும்

ஈரோடு மாவட்ட சட்ட மன்ற வரைபடத்தை வைத்து பார்த்தால், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர், அந்தியூர் ஆகிய தொகுதிகள் அருகருகே உள்ளன. மேலும் இந்த தொகுதிகளை பரப்பளவில் மிகப் பெரியதாகவும் உள்ளன.  பவானிசாகர் தொகுதியின் கடைக் கோடியிலிருந்து தலைநகரான ஈரோட்டை சென்றடைய சுமார் 200 கிலோ மீட்டரர் பயணிக்க வேண்டும்  என்பது இந்த வரைபடத்தை பார்க்கும்போது தெளிவாகிறது. கோபிசெட்டிபாளையம் தனி மாவட்டமாக உருவாக்கப்படும் போது பவானிசாகர் தொகுதியின் கடைக் கோடியிலிருந்து கோபிசெட்டிபாளையத்தை சுமார் 80 கிலோ மீட்டர்கள் தொலைவில் சென்றடையலாம.
மேலும் ஈரோடு மாவட்டம் ஆனது சுமார் 5500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது இதில் ஈரோடு நகரமானது ஈரோடு மேற்கு ஈரோடு கிழக்கு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது, அது பரப்பளவில் மிக குறைந்த தொகதிகளாக உள்ளது.
ஈரோடு மாவட்ட தலைநகரமன பின்னர் ஈரோட்டில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக ஈரோட்டில்
மக்கள்தொகையும் வளர்ந்துள்ளது, ஆனால் கோபிசெட்டிபாளையம், பவானிசாகர், அந்தியூர் போன்றவை வளர்ச்சி அடையவில்லை மற்றும் அவை காடுகள் அடர்ந்த பகுதி அமைந்துள்ளது. எனவே தனி மாவட்டம் உருவாக்கப்படும்போது வனப்பகுதியில் உள்ள மக்கள் கூட மிக நீண்ட தொலைவு பயணம் செய்யாமல் அருகில் உள்ள தலைநகரமான கோபிசெட்டிபாளையத்தில் எளிதில் வரமுடியும். குறிப்பாக மலைவாழ் மக்கள் சரியான சாலை வசதிகள் அடிப்படை வசதிகள் போன்றவை இல்லாமல் இருக்கிறார்கள், அவர்கள் மாவட்ட தலைநகரம் அடைவதற்கு நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் பயணம் செய்வது கோபிசெட்டிபாளையம் தலைநகராக்கப்பட்டால் தவிர்க்கப்படும். கோபிசெட்டிபாளையம் ஏற்கனவே நாடாளுமன்ற தொகுதியாக இருந்தது. பின்னர் ஈரோடு மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பிறகு வளர்ச்சி அடைந்ததால் தற்போது ஈரோடு நாடாளுமன்ற தொகுதியாக உள்ளது. கோபிசெட்டிபாளையம் தனி மாவட்டம் அமைக்கப்பட்டால் அதன் மக்கள் தொகையானது சுமார் 12 லட்சமாக இருந்தாலும், அதன் பரப்பளவு சுமார் 3500 சதுர கிலோமீட்டர் இருக்கும் .இது மதுரை மாவட்டத்தின் பரப்பளவுக்கு இணையானது.
அப்படிப்பார்த்தால் பரப்பளவின் அடிப்படையில் கோபிசெட்டிபாளையம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டே ஆகவேண்டும்.

கோபி தனி மாவட்டம் தொடர்பான கோரிக்கை மற்றும் பிரச்சினைகள் முழுவதும்.

 கோபி தனிமாவட்டமாக உருவாவதை அமைச்சர் தடுக்கிறார் - ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றச்சாட்டு

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை தாங்கி, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியினரை பாராட்டி பேசினார்.

முன்னதாக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸசுவரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கொ.ம.தே.க. சார்பில் 4 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், 10 ஊராட்சி ஒன்றியக்குழு கவுன்சிலர்கள், 24 ஊராட்சி மன்ற தலைவர்கள், 200 ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியும், தி.மு.க. கூட்டணியும் சமஅளவில் வெற்றியை பெற்றுள்ளன. 

கோர்ட்டு உத்தரவின்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என நம்புகிறேன். இந்த தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி அனைத்து இடங்களிலும் அமோக வெற்றி பெறும்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப்-2ஏ, குரூப்-4 தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது டி.என்.பி.எஸ்.சி. மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது. எனவே முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோபிசெட்டிபாளையத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். பொள்ளாச்சி, எடப்பாடி, கும்பகோணம் ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் கோபிசெட்டிபாளையம் தனி மாவட்டமாக உருவாவதை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தடுக்கிறார். அவர் தடுப்பது மட்டுமின்றி கிண்டல் செய்து பேசுகிறார்.

சட்டசபையில் கவர்னர் உரை கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் உள்ளது. ஆனால் தொழில் வளர்ச்சியில் முதலாவது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 14-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. தொழிற்சாலைகளை மூடியதால் உபரி மின்சாரம் கிடைக்கிறது. இதனால்தான் மின்மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது என்று அமைச்சர் தங்கமணி சொல்கிறார். இவ்வாறு ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.

இதுவும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அதாவது இடைப்பாடி முதலமைச்சராக இருந்த போது அளிக்கப்பட்ட பேட்டி. அமைச்சர் ஒருவரே தன்னுடைய சொந்த மாவட்டத்தை இரண்டாக பிரிப்பதற்கு இடையூறாக இருப்பதாக கொங்கு மக்கள் தேசிய கட்சி குற்றம் சாட்டுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, உண்மையாக இருப்பதற்கான வாய்ப்பும் அதிகம். காரணம் வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டது, 15 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டது .11 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட சேலம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்படும் என்று தகவல் வெளியானது. ஆனால் கடைசிவரை பிரிக்கப்படவில்லை. எடப்பாடி முதலமைச்சராக இருப்பதால் அவர் தன்னுடைய சொந்த மாவட்டத்தை பிரிக்கவில்லை என்றெல்லாம் கூறப்பட்டது .எடப்பாடி சேலம் மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளராக இருந்தாலும், அவர் முழு சேலம் மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளராக இருக்க மாட்டார் என்று நம்புகிறேன். கன்னியாகுமரி போன்ற சிறிய மாவட்டங்களை குமாரி மேற்கு, கிழக்கு என்று பிரிக்கப்பட்டு இருக்கும் போது, கண்டிப்பாக சேலம் கூட ஜெயலலிதாவால் இரண்டு மாவட்டங்களாக அதிமுக கட்சிக்காக பிரிக்கப்பட்டிருக்கும்.
அப்படியிருந்தும் எடப்பாடி சேலம் மாவட்டத்தை பிரிப்பதற்கு முயற்சி செய்யவில்லை . சேலம் மாவட்டத்தை பிரித்தால்  யாரிடம் இருந்தும் எதிர்ப்பு வராது. சேலத்தை விட சிறிய மாவட்டமான நாகப்பட்டினம் பிரிக்கப்பட்டபோது ஒரு சிலர் கிண்டல் அடித்தார்கள் என்றாலும், நாகப்பட்டினத்தை பிரித்து மயிலாடுதுறையை உருவாக்கியது நல்லது. காரணம் நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் பிரிக்கப்பட்டபோது நாகப்பட்டினம் அதன் வடபகுதி மற்றும் தென் பகுதிக்கு இடையே தொடர்பு அறுபட்டு இடையில் பாண்டிச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்தால் இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்தது. தொடர்பற்டிருந்த நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது தவறு இல்லை.

பிரிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தின் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் முறையே தற்போது 9 லட்சம், 6 லட்சம் என்ற மக்கள் தொகையை கொண்டுள்ளன. ஆனால் 34 லட்சம் மக்கள் தொகை கொண்ட சேலத்தை விரைவாக பிரிப்பது அவசியம்.  ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலின்போது மேட்டூரை தலைமையிடமாகக் கொண்டு சேலம் மாவட்டத்தை பிரிப்போம் என்று 2014ஆம் ஆண்டு வாக்குறுதி கொடுக்கப்பட்டதாக அறிந்தேன். ஆனால் எடப்பாடி முதலமைச்சர் ஆன போது நிறைய பேர் எடப்பாடி நகரை தலைமையிடமாக கொண்டு பிரிக்க வேண்டும் என்று கூறினார்கள். அப்படி எடப்பாடி அல்லது மேட்டூரை தலைமையிடமாகக் கொண்டு சேலம் மாவட்டம் பிரிக்கப்பட்டு இருந்தாலும் சேலம் சுமார் 20 லட்சம் மக்கள் தொகையையும் ,எடப்பாடி அல்லது மேட்டூர் சுமார் 14 லட்சம் மக்கள் தொகையைக கொண்டிருக்கும்.
சேலம் மாவட்டத்தின் மக்கள்தொகை 2011 தான் 34 லட்சம் தற்போது சுமார் 40 லட்சம் வரை இருக்கலாம் .இதன் மூலம் அரசு அலுவலகங்கள் மருத்துவமனைகள் போன்றவற்றில் கூட்ட நெருக்கடி குறையும். மக்களும் அதிக தூரம் சென்று மாவட்டத் தலைநகரங்கள் அடைய வேண்டியதில்லை, பாதி தொலைவில் மாவட்ட தலைநகரங்களை அடையலாம். பெரும்பாலும் மாநிலத் தலைநகரான சென்னை தவிர்த்து மாவட்ட தலைநகரங்கள் வளர்ந்து வருகின்றன. எனவே புதிய மாவட்ட தலைநகரங்கள் உருவாக்குவது, தொழில் வளர்ச்சி இன்றி வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கு வேலை தேடி சென்று கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கோபிசெட்டிபாளையம் மாவட்டக் கோரிக்கையை தற்போது எழுப்பப்பட்டு வருகிறது அதற்கு மிக முக்கிய காரணம் ஈரோடு மாவட்டத்தின் பரப்பளவு சுமார் 5500 சதுர கிலோ மீட்டருக்கு மேல் இருப்பது கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் சுமார் ஆயிரத்து 900 சதுர கிலோமீட்டர்கள் இருக்கின்றன. 2000 சதுர கிலோ மீட்டருக்கு உள்ள மாவட்டங்களிலேயே, கடைக் கோடியிலிருந்து மாவட்ட தலைநகரங்களில் சென்றடைய 65 முதல் 70 கிலோமீட்டர் வரை தூரம் உள்ளது. 5500 சதுர கிலோமீட்டர் உள்ள ஈரோடு போன்ற மாவட்டங்களில் தலைநகரை சென்றடைய மக்கள் 200 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் பணவிரயம், கால விரயம் ஏற்படுகிறது. ஈரோட்டில் மக்கள் தொகை 2011ஆம் ஆண்டு சுமார் 22 லட்சம், தற்போதைய நிலையில் சுமார் 27 லட்சம் வரை இருக்கலாம். அப்படி ஈரோடை இரண்டாக பிரித்தாளலும் ஈரோடு மற்றும் கோபி  முறையை சுமார் 2500 ,3000 சதுர கிலோமீட்டர் கொண்டதாக இருக்கும். மக்கள் தொகை சுமார் 13 ,14 லட்சம் கொண்டதாக இருக்கும் .சுமார் ஐந்து மற்றும் ஏழு லட்சம் கொண்ட அரியலூர், பெரம்பலூர்  விட மக்கள் தொகை அதிகம் கொண்ட மாவட்டங்கள் ஆகவே இவை இருக்கும். மேலும் சென்னை போன்ற பெரிய தொழிற்சாலைகள் இல்லாத ஈரோடு போன்ற மாவட்டங்களில் புதிதாக மாவட்ட தலைநகரங்கள் உருவாகும்போது, மேற்கொள்ளப்படும் கட்டுமான நடவடிக்கைகளினால் வேலைவாய்ப்பும் பெருகும். வருங்காலத்தில் மருத்துவ கல்லூரிகள் போன்றவை வருவதற்கான வாய்ப்பு உள்ளது ,இதனால் மக்களுக்கு மருத்துவ வசதிகள் அதிக அளவில் கிடைக்கும். அரசு அலுவலகங்கள் மருத்துவமனைகளில் ஏற்படும் இட நெருக்கடி குறையும்எனவே
கோபிசெட்டிபாளையம் மாவட்டம் கோரிக்கை நியாயமானதே.

ஆகஸ்ட் 2019
கோபிசெட்டிபாளையம்: ''கோபியை தலைநகரமாக கொண்டு, ஒரு மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்பதில் எனக்கும் அக்கறை உண்டு,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், கோபி சட்டசபை தொகுதியில், மகளிர் திட்டத்தின் கீழ், 56.26 லட்சம் ரூபாய் மதிப்பில், 225 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாணவர்கள் கையில் மட்டும், லேப்டாப் இருந்தால் போதாதது என்பதால், போதிக்கும் ஆசிரியர்கள், 80 ஆயிரம் பேருக்கும், லேப்டாப் வழங்கி வருகிறோம். தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில், குளறுபடி இருப்பது தெரியவந்தால், அதுகுறித்து எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்வித்துறையை பொருத்த வரையில், ஒருவர் கூட குற்றமோ அல்லது குறை கூறாத வகையில் நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். இதுவரையில் எந்த பிரச்னையுமில்லை. கோபியை தலைமையிடமாக கொண்டு, தனி மாவட்டம் உருவாக்குவது குறித்து, சிலர் கருத்து தெரிவித்துன்றனர். கோபியை தலைநகரமாக கொண்டு, ஒரு மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்பதில் எனக்கும் அக்கறை உண்டு. இந்த மண்ணிலே பிறந்து, இந்த மண்ணிலே கொண்டு வரவேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்காதா. அதற்கான இடத்தை தேடி கொண்டு இருக்கிறோம். இடம் கிடைத்த பின் தான் பரிந்துரை செய்யப்படும். அதற்கான முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் கொண்டு வர, குறைந்தது, 50 ஏக்கர் நிலம் தேவைப்படும். பின், அலுவலகம் சார்ந்த கட்டடம் மற்றும் குடியிருப்புகள் கட்ட, 50 ஏக்கர் தேவைப்படும். எனவே போதிய இடவசதி கிடைத்த பின் தான் முடிவு செய்யப்படும். எல்லா மாவட்டத்தையும் பிரிக்கும் நோக்கம் இந்த அரசுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கோபியை மாவட்டமாக்கும் அக்கறை உண்டு: அமைச்சர் செங்கோட்டையன் .

செங்கோட்டையின் அவர்கள் மீது ஈரோடு மாவட்டத்தை பிரித்து கோபிச்செட்டி பாளையம் உருவாக்க தடையாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் ,அவர் நான் தடையாக இல்லை என்று கூறுகிறார் .மேலும் ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரிப்பதற்கான திட்டம் உண்டு என்றும் கூறுகிறார். என்னை பொறுத்தவரை மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்று இருக்கவேண்டும், அப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் சுமார் 78 மாவட்டங்கள் இருக்க வேண்டும் .தெலுங்கானாவில் தற்போது 32 மாவட்டங்கள் வரை உள்ளன அதில் பெரும்பாலானவை தற்போது புதிதாக உருவாக்கப்பட்டவை .தெலுங்கானாவில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 17 .ஆனால் அங்கே 32 மாவட்டங்கள் உள்ளன .அப்படி பார்த்தால் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை விட சுமார் இரு மடங்கு மாவட்டங்கள் உள்ளன . தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39,மாவட்டங்களின் எண்ணிக்கை 38 மட்டுமே. தெலுங்கானாவின் மாவட்டங்களின் விகிதத்துடன் ஒப்பிட்டால் ,தமிழ்நாட்டின் மாவட்டங்களின்   எண்ணிக்கை குறைந்தபட்சம் 75வது இருக்க வேண்டும். சுமார் 15 க்கும் மேற்பட்ட புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு தெலுங்கானா முதலமைச்சர் அவர்கள் கூறிய காரணம் மாவட்ட தலைநகரங்கள் தான் வருவாய் தரும் நகரங்களாக உள்ளன என்பதே. இது பற்றி பின்னர் பார்ப்போம். செங்கோட்டையன் அவர்கள் கோபிச்செட்டி பாளையம் மாவட்ட தலைநகரம் அமைப்பதற்கு நூறு ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக கூறுகிறார் .மாவட்ட தலைநகரம் அறிவிப்பை வெளியிட்டால், நிலம் தானாகவே கிடைக்கும் என்பதே என்னுடைய கருத்து. மாவட்ட தலைநகரம் கோபிசெட்டிபாளையத்தில் நடு நகரில் இருக்க வேண்டியதில்லை,புற நகர்ப்பகுதியில் மாவட்ட தலைநகரம் அமைந்தால்,பின்னர் அதுவே பின்பு முக்கிய நகர பகுதியாக உருவெடுக்கும் என்பதே கடந்த கால எடுத்துக்காட்டுகள் .சுமார் 3,000 சதுர கிலோ மீட்டர்  பரப்பளவு கொண்டதாக இருக்கப்போகும் கோபிச்சட்டிபாளையத்தில் 100 ஏக்கர் நிலம்
பெரிய சிக்கலை ஏற்படுத்தப் போவதில்லை .எனவே கோபிசெட்டிபாளையம் தனி மாவட்டம் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் .தற்போது ஆட்சி மாறிவிட்டது ,தற்போதைய திமுக அரசு கோபிச்செட்டி பாளையம் உருவாக்கினால் அந்த பெருமை தற்போதைய திமுக  அரசைச் சாரும். இதன் மூலம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு