விஜய் கட்சி வருத்தப்படாத வாலிபர் சங்கமா?
விஜய் ரசிகர் மன்றத்தினர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது மிகுந்த விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் நேரடியாக கட்சியைப் பதிவு செய்யாமல் அவர்கள் மறைமுகமாக போட்டியிடுவது. மேலும் அவர்கள் சுயேச்சையாக வென்று வருபவர்கள் தங்கள் கட்சியில் சேர்த்துக்கண்டு அந்தக் கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது என்று பொய்யான தகவல்களை வழங்குவதாகவும் விமர்சனம் வைக்கப்படுகிறது. அது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியவில்லை .மேலும் சிலர் விஜய் உயரத்திற்கு ,அதாவது அவர் சினிமாவில் இருக்கும் உயரத்திற்கு இப்படி போட்டி போடலாமா என்று கேட்கிறார்கள் .ஆனால் அவர்கள் ஒன்றை கவனிக்கவில்லை .விஜய் சினிமாவில் இருக்கும் உயரம் சுமார் 100 விழுக்காடு என்றால் அவருக்கு தனியாக அரசியல் என்றால் கிடைக்கும் வாக்கு விழுக்காடு சுமார் 4 முதல் 5 சதவீதம் மட்டுமே . விஜயன் சினிமா அனுபவம் சுமார் 21 ஆண்டுகள் அவர் அரசியல் அனுபவம் ஒரு ஆண்டு கூட இல்லை . அவர் நேரடியாக தேர்தலில் நின்றால் அது அவருடைய திரை பிம்பத்தையும் தகர்த்துவிடும். விஜய்க்கு இவ்வளவுதானா வாக்கு வங்கி என்று ஏளனம் செய்வார்கள். அதனால்தான் எம்ஜிஆர் நேரடியாக அரசியலில் இறங்காமல் திமுகவில் இறங்கினார். இன்று திமுக, அதிமுக போன்ற கட்சிகள் வளர்ந்து விட்டதாலும், மேலும் சீமான் ,விஜய் நாம் தமிழர் கட்சிக்கு வந்தாலும் எப்படியும் பிரிந்து சென்று அவர் தனிக்கட்சி தொடங்குவார் என்பது தெரிந்ததால் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே வேறு வழி இல்லாமல் விஜய் ரசிகர்களை போட்டி போட சொல்லி விட்டேன் ஆதரவு தெரிவிக்கிறார். இது அவரது கட்சியின் ரசிகர்கள் மற்றும் விஜய்க்கு அரசியல் அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் என்பதில் தவறில்லை. மற்றவர்கள் அவரை வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று கிண்டல் செய்தாலும் இது கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு ஒரு நல்ல அரசியல் அனுபவத்தை கொடுக்கும். அது அவர்களின் வருங்காலத்தில் சட்டமன்ற உறுப்பினர் போன்ற தேர்தலில் போட்டியிட உதவியாக இருக்கும். விச்சை 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கட்சியை பதிவு செய்துவிட்டு, சென்னை ,மதுரை கோவை, சேலம், திருநெல்வேலி போன்ற முக்கிய நகரங்களில் பிரச்சாரம் செய்ய வேண்டும். அது கட்சியின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதே என்னுடைய கருத்து.
கருத்துகள்
கருத்துரையிடுக