வங்கி அதிகாரிகள் தமிழ் படிக்க பயிற்சி:இந்தியன் வங்கி நடவடிக்கை.
தமிழ் வாழ்க என்று அரசு அலுவலங்கள் நம்முடைய தமிழ்ப்பற்றை வெளிப்படுத்துவதாக இருந்தாலும், தமிழ் நாடு பொருளாதார வளர்ச்சி அடையும்போது, தமிழ் உலகம் எங்கும் பரவுவதற்கு வழிவகுக்கும். குறிப்பாக ஆங்கிலம் இன்று உலகம் முழுவதும் படிக்க படுவதற்கு காரணம், உலகின
முதல் நிலை பொருளாதார வல்லரசாக அமெரிக்கா இருப்பது மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக உள்ளது போன்றன. தற்போது சைனா வேகமாக வளர்ந்து வருவதால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பள்ளிகளில் கூட சீன மொழியை கற்பித்துக் கொடுக்க தொடங்கி இருப்பதாக பத்திரிகைகளில் படித்தேன். தற்போது தமிழ்நாட்டில் வேலை கிடைத்த, வட இந்தியர்களுக்கு தமிழ் நாட்டில் பயிற்சி கொடுக்க அவர்கள் முன்வந்திருக்கிறார்கள். இதற்கு முன்பு என்னுடைய நண்பன் ஒருவன் சொன்|ன கதை நினைவுக்கு வருகிறது. அப்போது நான் இந்தி தேவையில்லை என்றும், அவன் தமிழர்களுக்கு இந்தி தேவை என்றும் சொன்னான் .அப்போது அதற்கு அவர் சொன்ன ஒரு காரணம், வட இந்தியாவில் ஒரு வேலை கிடைத்த ஒரு தமிழன், அங்கே உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் அவனிடம் பேசும் போது இந்தி தெரியாததால் அவனை திட்டியதாகவும், அதனால் அவன் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினார். தமிழ்நாட்டில் வங்கிகளில் வேலை பார்க்கும் தமிழ் தெரியாத இந்திக்காரர்கள் யாராவது தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேலையை விட்டு விலகினார்கள் அல்லது மாறுதல் வாங்கி போனார்களா என்பது எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் இந்தியன் வங்கி தற்போது இந்த முயற்சி எடுத்து இருப்பது பாராட்டுக்குரியது. தமிழ்நாட்டிலுள்ள பிஎச்இஎல் போன்ற நிறுவனங்கள் கூட ஹிந்தியை வளர்ப்பதற்கு முயற்சி எடுக்கும்போது, இந்தியன் வங்கியானது கள நிலவரத்தை உணர்ந்து, தமிழ்நாட்டில் வேலை பார்க்க வேண்டுமென்றால் தமிழ் தெரிய வேண்டும் என்பதை உணர்ந்து, வங்கி வங்கி ஊழியர்களுக்கு தமிழ் பயிற்சி கொடுக்க முன்வந்திருக்கிறார்கள் பொருளாதார உயர்வு தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழர்களின் வளர்ச்சிக்கும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் ,வழி வகுக்கும் என்பதற்கு இது நல்ல ஒரு எடுத்துக்காட்டு. செய்தி இதோ:
தமிழ் தெரியாத ஊழியர்களுக்கு, தமிழ் கற்றுக் கொடுக்கும் வகையில், 'கம்யூனிகேட்டிவ் தமிழ்' என்ற பயிலரங்கை, இந்தியன் வங்கி துவக்கி உள்ளது.
தமிழகத்தில் உள்ள இந்தியன் வங்கியுடன், சமீபத்தில் அலகாபாத் வங்கி இணைக்கப்பட்டது. இதனால், நாட்டின் பிறபகுதிகளில் இருந்து, தமிழகத்திற்கு நிறைய அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது தமிழகத்தில், 600க்கும் மேற்பட்ட, தமிழ் தெரியாத அதிகாரிகள் பணியில் உள்ளனர்.
அவர்களுக்கு, தமிழ் கற்றுக் கொடுக்கும் விதமாக, சென்னை பல்கலையுடன் இணைந்து, 'கம்யூனிகேட்டிவ் தமிழ்' என்ற பயிலரங்கு திட்டத்தை, இந்தியன் வங்கி துவக்கிஉள்ளது. தமிழ் தெரியாத அதிகாரிகள் தமிழ் கற்றுக் கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு உரிய சேவை வழங்க, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக