கன்னியாகுமரியை மீண்டும் தங்கள் கோட்டை என்று நிரூபித்த கம்யூனிஸ்ட்டுகள்.

கன்னியாகுமரியில் கம்யூனிஸ்டுகள் 2000 ஆண்டுவரை வலுவாக இருந்தார்கள் 1999 நாடாளுமன்றத் தேர்தலில் பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்ற பிறகு ,எப்போதும் காங்கிரஸ்காரர்கள் வாக்கு பிரிந்தால் பிஜேபி வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டியதால், மக்கள் வாக்கு பிரியாமல் இருக்க கம்யூனிஸ்டுகளுக்கு வாக்கு போடாமல் காங்கிரஸ் இருக்கும் கூட்டணிக்கே வாக்களித்து வந்தார்கள். இதனால் கிடைத்த வெற்றியை வைத்து காங்கிரஸ்காரர்கள், குமாரி எங்கள் கோட்டை என்று மார்தட்டி வந்தார்கள். 2009 வரை கம்யூனிஸ்டுகள் கன்னியாகுமரியை தங்கள் கோட்டையாக வைத்திருந்தார்கள் அதன்பின்னர்தான் அவர்கள் கோட்டையில் ஓட்டை விழுந்தது. 2004 கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில்கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெற்றிருந்தார்கள். மேலும் விளவங்கோடு, திருவட்டாறு தொகுதிகளிலும் கம்யூனிஸ்டுகள் அப்போது சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு இருந்தார்கள் .அதன் பின்னர் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் திமுக அணிக்கு போனபோது, திமுக காங்கிரஸ் அணயானது திமுக சார்பில் ஹெலன் டேவிட்சனை நிறுத்தியபோது வாக்கு பிரியக் கூடாது என்று பிரசாரம் செய்யப்பட்டது. மக்களும் வாக்கு பிரிந்து பொன்ரதாகிருஷ்ணன் வரக்கூடாது என்பதற்காக திமுகவுக்கு வாக்களித்தார்கள். அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எல்லாக் கட்சிகளும் தனித்தனியாக போட்டி போட்டபோது, வசந்தகுமார் சுமார் இரண்டரை லட்சம் வாக்குகள் வாங்கி இரண்டாவதாக வந்து குமரியை காங்கிரஸ் கோட்டையாக்கி காட்டினார் அதற்கு காரணம் குமாரியில் காங்கிரஸுக்கு இருந்த செல்வாக்கு மற்றும் வசந்தகுமாரின நற்பெயர், பணபலம் ஆகியவும் காரணம். அதன்பின்னர் கன்னியாகுமரி தங்கள் கோட்டை என்று காங்கிரஸ் இறுமாந்து இருந்த நேரத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு காங்கிரஸ், திமுக சரியான தொகுதிகளை ஒதுக்காத நேரத்தில் அவர்கள் தனியாக நின்று திமுக-காங்கிரசுக்கு இணையாக வென்றருக்கிறார்கள். மீண்டும் குமரியில் நாங்கள் வலுவாக தான் இருக்கிறோம் என்று நிரூபித்திருக்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு