கன்னியாகுமரியில் பிஜேபி பெற்ற வெற்றிக்கு காரணம்
பாஜக நாங்கள்தான் தமிழ்நட்டின் மூன்றாவது பெரிய கட்சி, மூன்றாவதாக அதிக வாக்குகளைப் பெற்று இருக்கிறோம் என்று மார் தட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் பெற்ற வெற்றியில் பெரும்பாலான நகரமன்ற ஒரு மற்றும் மாநகர் மன்ற உறுப்பினர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பெற்றிருக்கிறார்கள் ,ராமதாஸும் இதை சுட்டிக்காட்டியிருக்கிறார். பிஜேபி கன்னியாகுமரி போன்ற ஒரு சில மாவட்டங்களில் தான் வெற்றி பெற்றி ருக்கிறது. நாங்கள் பரவலாக வெற்றி பெற்றிருக்கிறோம்,நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி எனறு ராமதாஸ் கூறுகிறார் .தேர்தல் ஆணையம் இதுவரை ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற வாக்கு சதவீதத்தை வெளியிடவில்லை, அவற்றை வெளியிட வேண்டும் அப்போதுதான் உண்மையாகவே மூன்றாவது காட்சி யார் என்பது தெரியவரும். மூன்றாவது கட்சிக்கான போட்டியில் கூட்டணி வைத்த கட்சிகள் வராது. நாம் தமிழர், தேமுதிக, பிஜேபி, மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகளே உள்ளன .இவர்களில் யார் அதிக வாக்கு சதவீதம் பெற்று இருக்கிறார்களோ? அவர்களே மூன்றாவது பெரிய கட்சி. தேர்தல் ஆணையம் விரைந்து வாக்கு சதவீதம் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் .மேலும் கன்னியாகுமரியில் பிஜேபி ஓரளவுக்கு இடங்களை பெற காரணம் காங்கிரஸ் ,திமுக ,கம்யூனிஸ்ட் போன்றவை தனித்தனியே போட்டியிட்டதும், அதனால்தான் வாக்கு பிரிந்து பாஜகவினர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இவ்வளவு வாக்குகள் பிரிந்ததற்கு பாஜகவால் சுமார் 40 சதவிகித உறுப்பினர்களை பெற்றிருக்க வேண்டும், ஆனால் அவர்கள் மிகக்கறைந்த உறுப்பினர்களை பெற்றிருக்கிறார்கள் கன்னியாகுமரியில் கூட சுமார் 15 சதவீத உறுப்பினர்களை பெற்றிருக்கிறார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக