மைக்கேல் பட்டி மூல பெயர் பிரச்சனை
மைக்கேல் பட்டி பெயர் தற்போது பிரச்சனையாகி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள இடங்களின பெயர்கள் வரலாற்றில் மாறி வருவது இயற்கை. குறிப்பாக திருமறைக்காடு என்று இருந்த நகரின் பெயர் தற்போது வேதாரணியம் என்று மாறியுள்ளது. இது தமிழ் நாட்டில் சமஸ்கிருத வழிபாடு அதிகரித்தபோது ஏற்பட்டிருக்கலாம். அதை மக்களும் ஏற்றுக் கொண்டார்கள் அதேபோல் இன்றளவும் முகவை மாவட்டம் என்று மக்களால் அழைக்கப் பட்டாலும் அந்த மாவட்டத்திற்கு ராமநாதபுரம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் .ராமாயணத்தில் ராமநாதபுரம் என்ற ஒரு ஊரே இல்லை. அதேபோல் ராமேஸ்வரத்தின் பழைய பெயர் செவ்விருக்கை நாடு அதை தற்போது ராமேஸ்வரம் ஆக மாற்றி இருக்கிறார்கள். அதேபோல் தனுஷ்கோடியின் பழைய பெயர் கம்பராமாயணத்தில் தொல்முதுகோடி. அதை தற்போது தனுஷ்கோடி என்று மாற்றியிருக்கிறார்கள் .சில ஊர்களின் பெயர்கள் மக்களாகவே மாற்றிக்கொள்வது உண்டு. சில ஊர்களின் பெயர்கள் ஆதிக்க சக்திகளால் மாற்றப்படுவது உண்டு.
அதேபோல் தற்போது தகடூர் என்ற தமிழ் பெயரானது புரி என்ற வடமொழி பெயர் சேர்த்து தர்மபுரி என்று அழைக்கப்படுகிறது. என்னைக்கேட்டால் தர்மபுரி- தகடூர், வேதாரணியம் -திருமறைக்காடு ராமநாதபுரம் -முகவை ,ராமேஸ்வரம்- செவ்விருக்கை நாடு, தனுஷ்கோடி- தொல்முதுகோடி என்று பெயர் மாற்றப்பட வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கை. மேலும் பெயர் மாற்றம் செய்ய போது அந்தந்த ஊர் மக்களின் கருத்தைக் கேட்டு அவர்கள் சம்மதித்தால் மட்டுமே பெயரை மாற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக மைக்கேல்பட்டி மீண்டும் பழைய பெயரையே அந்த ஊர் மக்கள் விரும்பினால் மாற்றலாம் ,அவர்களின் எண்ணத்தை மீறி மாற்றக் கூடாது என்பதே என்னுடைய கருத்து.
கருத்துகள்
கருத்துரையிடுக