விடுதலைப் புலிகளின் தலைவரால் செய்ய முடியாத அழிவுகளை ராஜபக்சவினர் செய்வர்! பகிரங்கமாக இலங்கை முன்னாள் அமைச்சர்.
நாட்டின் ஜனநாயக தன்மைகளை முழுமையாக அழித்துவிட்டு மியன்மாரை போன்றதொரு இராணுவ ஆட்சியை கையில் எடுக்கும் சதிகள் மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் இன்றைய கடன் நெருக்கடிக்கு ஒட்டுமொத்தமாக ராஜபக்சஷவினரே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
ராஜபக்சவினரின் ஆட்சி இனிமேலும் தொடருமானால் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், சஹரான் அல்லது ரோஹன விஜயவீரவினால் கூட இதுவரை செய்ய முடியாத அளவிற்கு அழிவுகள் இடம்பெறும்.
இந்த நாட்டின் மொத்த கடன்களில் 86 வீத கடன்கள் ராஜபக்சவினரால் பெறப்பட்டுள்ளது. ஏனையவர்கள் ஆட்சியிலும் மொத்தமாக 14 வீத கடன்களே பெறப்பட்டுள்ளன.
நாட்டின் இன்றைய கடன் நெருக்கடிக்கு ஒட்டுமொத்தமாக ராஜபக்சவினரே பொறுப்புக்கூற வேண்டும்.
ஆகவே ராஜபக்சவினரை விரட்டியடிக்க சகல எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவும், ஆளுந்தரப்பு கூட்டணிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாராகவே உள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராணுவத்தில் பணியாற்றியவர் ஆன கோத்தபாய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தபிறகு இலங்கையானது பொருளாதார ரீதியாக திணறி வருகிறது முதலில் நிதி உதவி அளித்து வந்த சீனா, தற்போது இலங்கையை சிக்கலில் ஆர்த்தி தங்கள் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது நிலையில் இந்தியாவானது சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை இலங்கைக்கு கடனுதவி அளித்து இது குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்கும் ஆயிரக்கணக்கான கோடி இந்திய கடன் வாங்கியுள்ளது. இப்படி இலங்கை அரசாங்கத்தை தூக்கி நிறுத்தும் பணிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்தியா இதை வாய்ப்பாக பயன்படுத்தி கச்சத்தீவு பிரச்சனை மற்றும் தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனை போன்றவற்றை சேர்க்க வேண்டும் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யக்கூடாது, மேலும் ஆயிரக்கணக்கான கோடி தொகையை இலங்கைக்கு வழங்குவதற்கு பதிலாக கச்சத்தீவு கடல் பகுதியில் குத்தகைக்கு எடுத்து தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்க உதவுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம். தற்போதைய நெருக்கடியில் இலங்கைக்கு வேறு வழி இல்லை .சுமார் 100 கோடி அளவுக்கு தேராத கச்சதீவு பகுதியை, 10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுப்பதற்குப் பதிலாக சில ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வாங்கி, இருநாட்டு மீனவர்களும் மீன் பிடிக்கலாம் என்று இந்தியா கூறினால் அவர்களும் ஏற்றுக் கொள்வார்கள. இந்திய அரசாங்கமானது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக