வடசென்னையை தனி மாநகராட்சி மாற்றம் தனி மாவட்டமாக வேண்டும்
வடசென்னை தனி மாவட்ட கோரிக்கை வைத்து இருப்பதாக அறிந்தேன் வடசென்னை கிட்டத்தட்ட புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது. சென்னையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய, ஆரம்ப கட்டத்தில் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வந்தாலும், தற்போது உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் போன்றவற்றில் வடசென்னை பின்தங்கியே உள்ளது. வடசென்னை நாடாளுமன்ற தொகுதி யானது சுமார் 20 லட்சம் பேருக்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்டது. சுமார் மூன்று லட்சம் பேரை கொண்ட நகர்களை மாநகராட்சி அறிவிக்கும் போது, சுமார் 20 லட்சம் பேர் கொண்ட வட சென்னை மாநகராட்சி அறிவிப்பது தவறு இல்லை. மேலும் தற்போது தமிழக அரசு 5 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்ற அளவுகோல் வைத்து இருப்பதாக சொல்கிறார்கள், அப்படி பார்த்தால் வடசென்னை அல்லது ஆறு தொகுதிகள் கொண்டதாக உள்ளது. எனவே வட சென்னை மாவட்டம் மற்றும் மாநகராட்சி அறிவிப்பதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. இதன் மூலம் வட சென்னை மக்களுக்கு தனி மாநகராட்சி மேயர் ,தனியாக ஒரு ஆட்சியர் என்று தங்களது கோரிக்கையை தங்கள் பகுதியிலேயே அவர்களால் நிறைவேற்றிக்கொள்ள முடியும். சென்னை மாவட்டத்தில் வட சென்னை மற்றும் தென் சென்னை இருக்கும் போது ஆட்சியாளர்கள் மற்றும் மாநகராட்சி தலைவர்கள் வடசென்னையை தவிர்த்து தெற்கு மற்றும் மத்திய சென்னையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள் .ஆனால் வட சென்னை மாநகராட்சித் தலைவர், தனி மாவட்ட ஆட்சியர் வந்தால் அவர்கள் தங்கள் ஆட்சியர் மற்றும் தங்கள் மாநகராட்சி தலைவர்களை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை வைக்கலாம் மேலும் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மாநகர தலைவரும் வடசென்னை முன்னேற்றம் சார்ந்து சிந்திப்பார்கள்,செயல் படுவார்கள் என்பதால் வடசென்னையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக