நாடு முழுவதற்குமான ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த முடியுமா?பாகம்-1
நாடு ஒரே தேர்தல் என்ற வார்த்தையை தற்போது எடப்பாடி அதிகம் பயன்படுத்தி வருகிறார். அவருக்கு எப்படியாவது 2024 முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருப்பதை இது காட்டுகிறது. அவரால் உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த முடியவில்லை, உள்ளாட்சி தேர்தலை ஊரக உள்ளாட்சி தேர்தல் ,புதிய மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்று தனித்தனியாக நடத்துவதற்கு காரணமாக இருந்தவர் எடப்பாடி அவர்களே. பிரதமர் மோடி அவர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி கூறும் போது அவர் சொன்ன காரணம் அடிக்கடி தேர்தல் நடைபெறுவதால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன என்று. நாடாளுமன்ற நடவடிக்கைகள் தேர்தலால் எப்படி பாதிக்கப்படுகின்றன என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை பிரதமர் மோடி அவர்கள் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதால் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாமல் பாதிக்கப்படுகிறதோ? என்னவோ? அப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டமாக நடத்தப்படும் போது சட்டமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படும். முதலமைச்சர் சட்டமன்ற ஒத்திவைத்துவிட்டு பரப்புரைகளில் ஈடுபட வேண்டியிருக்கிறது இதை யாரும் கவனிக்கவில்லை.
தேர்தல் செலவு:
ஒரே தேர்தல் முறையை வலியுறுத்துவோர் கூறும் மற்றொரு காரணம் ஒரே தேர்தல் நடத்துவதால் கோடிக்கணக்கான ரூபாய் செலவு மிச்சமாகும் என்பது, மக்களவை மற்றும் சட்டமன்ற மற்றும் தேர்தல் இணைந்து நடைபெற்ற 1952 ,57 ,62, 67 தேர்தல்களில் போது நாடு பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை. தற்போது இது தனித்தனியாக நடைபெறும் நேரத்தில் தான் நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. ஜனா ஜனநாயகத்தை விரும்பாதவர்களே தேர்தல்கள் அவர்களை அடிக்கடி நடத்தப்படுவதை எதிர்ப்பார்கள். முன்பு இதே கருத்தை முதன் முதலில் தெரிவித்த தலைவர் பால்தாக்கரே. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய அப்போது சில பத்திரிகைகள் கூட முட்டாள்தனமாக அதை ஆதரித்து எழுதி இருந்தனர். ஆனால் தேர்தல் ஜனநாயகத்தை தழைக்க வைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் தனித்து நடத்துவதால் தேர்தல் பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர் களுக்கான செலவு மட்டுமே அதிகரிக்கும் என்பது என்னுடைய கருத்து. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் உள்ளாட்சி தேர்தல் களை இணைந்து நடத்துவதால் அரசு ஊழியர்கள் ,தேர்தல் பணியாளர்களுக்கு பணிச்சுமை மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உண்டு. இதன் எதிரொலிப்பு தேர்தலில் கூட இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஒரே நாடு ,ஒரே தேர்தல் முறையை ஆதரித்து பேசிய அண்ணாமலை கூட சமீப காலத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடத்திக்கொள்ள அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது என்று கூறியிருந்தார். அது அவர்கள அவர்களுக்கு பிடிக்காத ஆட்சிய மிரட்டுவதற்காக கூறினாலும் அதுவே உண்மை. ஒரே நாடு ஒரே தேர்தல் கூறும் பிஜேபி தான் 2024 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து நடத்தவில்லை. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்து ஆறு மாதம் கழித்து சட்டமன்ற தேர்தல் வந்தது. அப்போது அங்கே ஆளுங்கட்சியாக இருந்த பிஜேபி தான், அவர்கள் நினைத்திருந்தால் சட்டமன்றத்தை கலைத்து விட்டு வெறும் ஆறு மாதங்களுக்கு முன்பே நடத்தியிருக்கலாம் .ஆனால் அப்படி அவர்கள் செய்யவில்லை, இதிலிருந்து அவர்களை இதை வெறும் பேச்சாக வைத்திருப்பார்கள் என்பது தெரிகிறது. அவர்கள் விருப்பம் ஒரே நாடு ஒரே தேர்தல் என்றாலும், அவர்களால் முடியாது என்பதை அவர்கள் உணர்ந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. மகாராஷ்டிராவில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் ஆறு மாத இடைவெளியில் வருவதற்கு காரணம் 2004 ஆம் ஆண்டு பிஜேபி அரசு ஆறு ஆண்டுகளுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலை நடத்தியது தான் காரணம். அப்போது கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு இருந்தது ,அப்போது காங்கிரஸ் அரசாங்கத்திற்கு மேலும் ஆறு மாத காலம் எஞ்சியிருந்தது .இன்னும் ஆறு மாத காலம் ஆட்சியில் இருந்து இருக்கலாம் .ஆனால் ஒரேயடியாக தேர்தலை நடத்துவதாக அரசாங்கத்திற்கு ஆயிரம் கோடி மிஞ்சும் என்று சொல்லி, ஆறு மாதத்திற்கு முன்பாகவே நாடாளுமன்றத்தில் உடன் சேர்த்து சட்டமன்றத்திற்கு தேர்தலை நடத்தினார் முதலமைச்சர் கிருஷ்ணா. ஆனால் மகாராஷ்டிராவில் இருந்த பிஜேபி சிவசேனா கூட்டணி நாடாளுமன்ற தேர்தல் சேர்த்து சட்டமன்ற தேர்தலை நடத்தாமல் ஆயிரம் கோடி அரசாங்கத்திற்கு கூடுதலாக செலவானாலும் பரவாயில்லை 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து ஆறு மாதம் கழித்தே சட்டமன்ற தேர்தலை நடத்தினர் .பிஜேபி சிவசேனா கட்சியினர் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று வலியுறுத்தி வந்தாலும் அவர்கள் அவர்களின் 6 மாத கால ஆட்சியை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை, என்பதை இந்தச் செயல் காட்டுகிறது. அது மட்டுமல்ல 96 ஆம் ஆண்டு நாடாளுமன்ற ,சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் நடைபெற்றன வாஜ்பாய், தேவகவுடா, குஜ்ரால் என்று மூன்று பேர் 1996 முதல் 98 வரை பிரதமராக இருந்தார்கள். பெரும்பான்மை இழந்து அப்போது நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அப்போது நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்காக அவர்கள் என்ன செய்வார்கள் தமிழ்நாட்டில் இருக்கும் திமுக ஆட்சியை கலைத்துவிட்டு நாடாளுமன்றத் தேர்தல் இரண்டு ஆண்டுகளிலேயே தேர்தல் நடத்துவார்களா? 96 ஆம் ஆண்டு தான் ஜோதிபாசுவும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார், அப்படிப்பர்த்தால் தமிழ்நாடு மேற்கு வங்கம் மற்றும் நான்கு ஆண்டுகள், 6 மாதங்கள் முடித்திருந்த அனைத்து மாநில அரசுகளையும் கலைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தல் ஒன்றிணைத்து தேர்தலை நடத்துவார்களா? இல்லை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை மத்திய அரசாங்கம் இருக்கிறது, ஆனால் மாநிலத்தில் ஏதாவது ஒரு அரசாங்கம் இரண்டு ஆண்டுகளிலேயே பெரும்பான்மை இழந்து விட்டது என்றால் என்ன செய்வார்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி ஆட்சியை வைத்திருப்பார்களா? அல்லது நாடாளுமன்றம் உட்பட அனைத்து மாநில அரசுகளை கலைத்து விட்டு ஒரு மாநிலத்திற்கு எல்லா மாநிலங்களுக்கும் தேர்தலில் நடத்துவார்களா? கேள்விகளுக்கு அவர்களிடம் இடம் இல்லை ,அவர்கள் கூட சிந்தித்து பார்க்காமலே இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்கள் எனவே இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் இருக்க வாய்ப்பில்லை என்பதே என்னுடைய கருத்து.
கருத்துகள்
கருத்துரையிடுக