ராணிப்பேட்டை காவல்துறை தலமை அலுவலகம் 12.5 கோடி செலவில் கட்டுமான பணிகள்

ராணிப்பேட்டையில் புதிய எஸ்பி அலுவலக  கட்டுமான பணிகள் பன்னிரண்டரை கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு கட்டப்பட்டு வருகிறது. 2-3 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே மயிலாடுதுறை மாவட்டத்தில் 100 கோடி செலவில் புதிய ஆட்சியரகம் கட்டுகிறார்கள். எனவே ராணிப்பேட்டையிலும் இதுபோல் கட்டுவார்கள். மேலும் இதை தொடர்ந்து மேலும் பல அரசு அலுவலக கட்டிடங்கள் வரும், இதனால் ராணிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வளர்ச்சி அடையும் .புதிய மாவட்டங்கள் உருவாக்குவதால் அடைந்த நன்மைகள் இவை. ஏற்கனவே தெலுங்கானாவில் சுமார் 32 மாவட்டங்கள் உள்ளது, தெலுங்கானாவின் மொத்த மக்கள் தொகை சுமார் 3 கோடியே 90 லட்சம் 2011ஆம் ஆண்டு. அப்போது தமிழ்நாட்டின் மக்கள் தொகை சுமார் 7 கோடியே 20 லட்சம்,
தெலுங்கானாவில் மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் தமிழ்நாட்டில் குறைந்த அளவு 59 மாவட்டங்கள் இருக்கவேண்டும். ஆனால் வெறும் 38 மாவட்டங்கள் மட்டுமே உள்ளன சுமார் 21 மாவட்டங்கள் கூடுதலாக உருவாக்கப்பட வேண்டும். அப்படி  உருவாக்கப்பட்டால் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நூறு கோடியில் ஆட்சியாளர் அலுவலகம், மற்றும் சுமார் 13 கோடி காவல்துறை தலைமை அலுவலகம்  வேறு அரசு அலுவலகங்கள் என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுமார் 125 கோடி செலவில் அரசு அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும். சுமார் 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் வரை தமிழகம் முழுவதும் செலவிடப்படும் .இதனால் கட்டுமான துறை வளர்ச்சி அடைந்து, தமிழ்நாட்டில் படித்து முடித்து வேலை வாய்ப்பு தேடி வரும் இளைஞர்கள் மற்றும
தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் அதாவது சித்தாள் வரை பயன்பெறுவார்கள். தமிழ்நாட்டின் தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு துறை வளர்ச்சி மிக மெதுவாக இருக்கையில், புதிய மாவட்டங்கள் பிரித்தால் புதிய அலுவலகங்கள் கட்டப்பட்டு ஆகவேண்டும் என்பதால் கட்டுமானத் துறை  வளர்ச்சி அடையும். ராணிப்பேட்டை: புதிய எஸ்.பி., அலுவலக கட்டுமான பணிகள் பற்றிய செய்திகள்:

ராணிப்பேட்டை மாவட்டத்தில், 12 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பில் எஸ்.பி., அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகளை நேற்று இரவு டி.ஜி.பி., சைலேந்திர பாபு ஆய்வு செய்தார். அப்போது கட்டுமான ஒப்பந்ததாரர் ஆனந்தகுமாரிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

புதிய எஸ்.பி., அலுவலகம் 5.11 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுகிறது. 10 ஆயிரம் ச.அடியில் கட்டடம் கட்டப்படுகிறது. கடந்தாண்டு ஜூலையில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு வரும் ஜூன் மாதத்தில் முடிக்கப்படும். மேலும் 3 மாதம் கட்டுமான பணிகளுக்கு அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு