திருப்பூர் மாநகராட்சி தேர்தல் முடிவுகள், மாநகராட்சிகளின் அதிகாரம் ஒரு பார்வை.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் திமுக ஆதரவு அலை அடித்து ,திமுக வெற்றி பெற்றதாக கூறப்படும் நிலையில் திருப்பூர் மாநகராட்சியில் திமுக தனி மெஜாரிட்டி பெறவில்லை ,வெறும் இருபத்தி மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. திமுகவின் கூட்டணி கட்சிகள் 14 ஆக மொத்தம் 37 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அதிமுக ஓரளவு நன்றாகவே தங்கள் திறமையை திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் மொத்தம் 19 இடங்களில் பெற்றிருக்கிறார்கள் சுயேச்சைகள் 4 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் 37 வார்டுகளைப் பெற்றுள்ளன. தி.மு.க., 23; இ.கம்யூ., 6; ம.தி.மு.க., -3; காங்., 2; மா.கம்யூ., - இ.யூ.மு.லீக் மற்றும் ம.ம.க., ஆகியன தலா ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது.

ஆளும் கட்சியான தி.மு.க., கூட்டணி தலைமை மற்றும் அதிக வார்டுகளில் வெற்றி பெற்ற நிலையில் மேயர் பதவியை தி.மு.க., கவுன் சிலர் ஒருவரே பெறுவார்ர். 

மாநகராட்சியை பொறுத்தவரை, மாமன்ற குழு, நான்கு மண்டல குழுக்கள் பிரதானமானவை. நிர்வாக வசதிக்காக, மேலும் ஏழு குழுக்கள் உள்ளன.மேயர், கமிஷனர் மற்றும் கவுன்சிலர் ஒருவரை உறுப்பினராக கொண்ட, நியமன குழு; நிதி மற்றும் வரிசீராய்வு குழு, கணக்கு குழு, பணிகள் குழு, நகரமைப்பு குழு, சுகாதாரக்குழு, கல்வி குழு என, ஏழு குழுக்கள் மாநகராட்சியில் அமைக்கப்படும்.

இவற்றில், குழு தலைவர் மற்றும் ஆறு கவுன்சிலர்கள் உறுப்பினராக இருப்பர். இக்குழுக்கள், பெயர் அளவுக்கு செயல்படும் என்றாலும், துணை மேயர், மண்டல தலைவர் பதவிகளுக்கு அடுத்ததாக, கவுரவ பதவியாக, குழு தலைவர் என்ற பதவி கருதப்படுகிறது. குறிப்பாக, மாநகராட்சியின் பட்ஜெட்டை அறிக்கையை தாக்கல் செய்யும் அதிகாரம் கொண்டது, நிதிக்குழு.
கூட்டணிகளுக்கு, குழு தலைவர் பதவிகளை திமுக வழங்கலாம் . மேயர் பதவிக்கே, பெரும் போட்டி நிலவுவதால், மேயர் பதவிக்கு ஆர்வம் காட்டுவோரில் சிலருக்கு துணை மேயர், மண்டல தலைவர் பதவிகளை வழங்கபடலாம் . மண்டல தலைவர் பதவியும், முக்கியமான பதவி என்பதால், போட்டியாளரை அதன் மூலம் சமாதானம் செய்யலாம் .மேயர் மற்றும் கமிஷனர், தலா, 10 லட்சம் ரூபாய் வரையிலான பணிகளை, தீர்மானம் இல்லாமலேயே நிறைவேற்ற அதிகாரம் உண்டு; பிறகு, மாமன்றத்தில் ஒப்புதல் பெற்றுக்கொள்ளலாம்.


இதேபோல், மண்டல தலைவர்கள், தங்கள் மண்டலத்தில் உள்ள, 15 வார்டுகளில், தலா, ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பணிகளை, முன் அனுமதி பெறாமலேயே மேற்கொள்ளலாம். பிறகு, மண்டல கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றிக்கொள்ளவும், அதிகாரம் உள்ளது.கூட்டணி கட்சிகளின் ஆதரவும் மிக அவசியம் என்ற நிலையில், கூட்டணி கட்சி கவுன்சிலர்களுக்கு, குழு தலைவர் பதவிகளை வாரி வழங்கி, சமாதானம் செய்யலாம்.பல கட்சிகள் உடன் இருப்பதால், அனைவரையும் சமாதானம் செய்து, பதவிகளை பங்கிடுவது, தி.மு.க., வுக்கு பெரும் சவாலாகவே மாறியுள்ளது.

 உற்று நோக்கினால் மேயர் முதல்வர் போலவும், துணை மேயர் துணை முதலமைச்சர் போலவும் ,மாநகராட்சி ஆணையர் தலைமைச் செயலாளர்  போலவும், மண்டல உறுப்பினர்கள் அமைச்சர்கள் போலவும்
அதிகாரம் கொண்டிருப்பது நமக்கு புலனாகிறது. குழுத் தலைவர்கள் சட்டமன்ற நிலைக்குழு போன்று அதிகாரம் கொண்டிருப்பதும் நமக்கு தெரிகிறது. இங்கு மாநகர ஆணையாளர் மற்றும் மேயர் பத்து லட்சம் வரை திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று தெரிகிறது. ஆனால் தலைமைச் செயலாளர்கள் இப்படி ஏதாவது நிதி ஒதுக்கிய திட்டங்களை செயல்படுத்த முடியுமா இல்லையா என்பது தெரியவில்லை.

அடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியானது கிட்டத்தட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் போன்றே உள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் யார்? அ.தி.மு.க., ஆலோசனை
மாநகராட்சியை கைப்பற்றும் கட்சியை தவிர, பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சியின்குழு தலைவர் பதவி என்பது, எதிர்க்கட்சி தலைவர் போன்றது.கடந்த, 2006-11ல் இருந்தது போல், அ.தி.மு.க., கூட்டணி, 19 வார்டுகளின், பிரதான எதிர்க்கட்சியாக, மாமன்றத்தில் பங்கேற்க இருக்கிறது. அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, மாமன்ற குழு தலைவர் மட்டுமல்ல, செயலாளரும் நியமிக்கப்படுவார்.

தேர்தல் கூட்டணி முடிந்து, மாமன்றம் இயங்க துவங்கியதும், அ.தி.மு.க., - 18 கவுன்சிலர், த.மா.கா., -1 என்ற நிலையிலேயே, செயல்பட உள்ளனர். மாநகராட்சி மேயர், துணைமேயர் தேர்வாகி, மாமன்ற கூட்டம் துவங்கும் என்பதால், அதற்குள், அ.தி.மு.க., குழு தலைவர் மற்றும் செயலாளர் நியமனம் செய்ய வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு