மும்பை மெட்ரோ ரெயில் நல்ல முன்னுதாரணம்.
மும்பை மெட்ரோ ரெயில் நல்ல முன்னுதாரணம்:
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை முதலில் 14 ஆயிரம் கோடியில் செயல்படுத்தினார்கள், முடிக்கும்போது 20 ஆயிரம் கோடி வரை செலவானது. அதன் பிறகு ஒன்பது கிலோமீட்டர் 3,000 கோடி செலவில் வண்ணாரப்பேட்டை வரை செயல்படுத்தினார்கள் என்று நினைக்கிறேன். அதன் பிறகு தற்போது ஒரு லட்சம் ரூபாய்கள் செலவழித்து புதிய மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர முடிவு செய்திருந்தார்கள் ,சுமார் 114 கிலோ மீட்டர் அளவிற்கு .அதன் பின்னர் மத்திய அரசு பட்ஜெட் பிரச்சினை காரணமாக 85000 கோடியாக சுருக்கி அனுமதி வழங்கி இருக்கிறார்கள் .அந்த பணி கூட தேர்தல் காரணமாக இழுத்தடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது என்றாலும், சில இடங்களில் பணிகள் துவங்கி இருக்கின்றன. ஆனால் மும்பை மெட்ரோ வானது ஒரேயடியாக 80 ஆயிரம் கோடி ரூபாய் என்றெல்லாம் கேட்கும்போது, மத்திய அரசிடமிருந்து கண்டிப்பாக அனுமதி கிடைக்காது. அது மட்டுமல்ல அது தாமதம் ஏற்படும் என்பதை உணர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஒரு ரயில் பாதையை துவங்கி வருகிறார்கள் .ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கோடி செலவில் 10 முதல் 15 கிலோமட்டர் வரை ரயில் பாதைகளை துவங்கி வருகிறார்கள் .தற்போது அவர்கள் 10 ரயில் தடங்கள் வரை துவங்கிவிட்டார்கள்.சென்னையில் தற்போது 4 மெட்ரோ ரயில் தடங்களை உள்ளன என்று நினைக்கிறேன். மேலும் இதுபோன்று ஏற்கனவே போட்ட மெட்ரோ ரயில் ஸ்டேஷன்களில் இருந்து மற்ற இடங்களுக்கு சென்னை மெட்ரோ ரயிலை நீட்டிக்க வேண்டும். குறிப்பாக வட சென்னையில் இருந்து அரக்கோணம் மற்றும் தென் சென்னையில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் வரை மெட்ரோ ரயிலை நீட்டிக்க வேண்டும் என்பதே என் கோரிக்கை. ஒரேயடியாக அதிக செலவில் நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்வதைக் காட்டிலும், ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரம் 20 ஆயிரம் கோடி செலவில் செய்தாலே, அதே தொகையான 70 ஆயிரம்- 80 ஆயிரம் கோடி ரூபாய் நான்கு ஆண்டுகளில் வந்து விடும் .
மேலும் கோயம்புத்தூர், மதுரை, திருச்சி போன்ற நகரங்களுக்கு இந்திய அரசானது துவக்கத்தில் 6000-10000 கோடி செலவில் ஒப்புதல் வழங்குவதற்கு தயங்காது. எனவே அதற்கான திட்டங்களை தமிழக அரசு தொடர்ந்த முன்னெடுக்க வேண்டும் .தமிழக அரசு குறிப்பாக திமுக சென்னைக்கு வெளியே பெரிய திட்டங்களை கொண்டு வர பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்றே நினைக்கிறேன் .அதுவே அவர்களுக்கு 2001ஆம் ஆண்டு தேர்தலில் படுதோல்வியை கொடுத்தது. 2001ஆம் ஆண்டு தேர்தலில் மொத்தம் திமுக கூட்டணி சுமார் முப்பத்தி ஆறு இடங்களை பிடித்தார்கள், அதில் 11 அவர்கள் சென்னையில் வென்றார்கள் .அதாவது சென்னையில் 14 தொகுதிகளில் 11இல் வென்றார்கள் .தமிழ்நாட்டில் 222 இல் வெறும் 24 தொகுதிகளில் வென்றார்கள். இதிலிருந்து தெரிவது என்ன என்றால், தமிழகம் முழுவதற்கும் திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே ,திமுக மட்டுமல்ல எந்த கட்சியும் வெற்றி பெற முடியும் .அதிமுக ஆட்சி கூட எந்த திட்டங்களையும் அவர்கள் செய்வதில்லை. திமுக சென்னைக்கு வெளியே செய்த பெரிய திட்டம் கோயம்புத்தூர் தகவல் தொழில்நுட்ப பூங்கா திட்டம் ,அதே போன்று இன்னும் பல திட்டங்களை சென்னைக்கு வெளியே தமிழ்நாடு முழுவதும் பரவலாக முன்னெடுக்கவேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக