கோவையை தலைமையிடமாகக் கொண்டு ரயில்வே கோட்டம் அமைக்க கோரிக்கை.
கோவை ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு, இதுவரை 180 அமைப்புகள் ஆதரவு அளித்து கடிதம் கொடுத்துள்ளன. இதுதொடர்பாக மூன்று எம்.பி.,க்கள் பங்கேற்கும் முக்கிய கூட்டம் இன்று கோவையில் நடக்கிறது.
கடந்த 2007 நவ.,1ல், சேலம் ரயில்வே கோட்டம் துவக்கப்பட்டது. அந்த கோட்டம் துவக்கப்பட்டு, 14 ஆண்டுகள் கடந்தும் கோவையின் ரயில்வே தேவைகள் நிறைவேற்றப்படவே இல்லை. மாறாக, இங்கு வரும் வருவாயைக் கொண்டு சேலம் சந்திப்பு, கோட்டத் தலைமையிடம் போன்றவை பிரமாண்டமாக மேம்படுத்தப்பட்டுள்ளன என்று குற்றம் சாட்டுகிறார்கள்

கோவையில் கட்டமைப்பு வசதிகளும் இல்லை; போதிய ரயில்களும் இயக்கப்படுவதில்லை. இதனால், கோவையை தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் துவக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. தொழில் மற்றும் வர்த்தக சபை எடுத்துள்ள இந்த முயற்சிக்கு, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 180 தொழில், வர்த்தக மற்றும் சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளனன.
அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் ஆதரவைத் தர முன் வந்துள்ளன. குறிப்பாக, மத்தியில் ஆளும்கட்சியாகவுள்ள பா.ஜ.,வை கோவை தெற்கு எம்.எல்.ஏ.,வும், தேசிய மகளிரணி செயலாளருமான வானதி சீனிவாசன் இந்த கோரிக்கை குறித்து, ரயில்வே அமைச்சரை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.
இதன் அடுத்த கட்டமாக, இன்று முக்கியக் கூட்டம் நடக்கவுள்ளது. கோவை சேம்பர் டவரில் இன்று மாலை 4:00 மணிக்கு நடக்கவுள்ள கூட்டத்தில், கோவை எம்.பி.,நடராஜன் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் ஆதரவைத் தெரிவிக்கவுள்ளனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்க, நீலகிரி எம்.பி., ராசா, பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொழில் வர்த்தக சபை கோவை கிளைத் தலைவர் பாலசுப்ரமணியன் கூறுகையில், ''கோவையை தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டுமென்பதே, இக் கூட்டத்தின் பிரதான கோரிக்கை. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன்களை, பாலக்காடு கோட்டத்திலிருந்து பிரித்து, கோவை கோட்டத்தில் இணைக்க வேண்டும்; கோவை மாநகருக்கு 'சர்க்குலர்' ரயில், கோவையிலிருந்து ராமேஸ்வரம், திருச்செந்துாருக்கு ரயில் சேவைகள் போன்ற கோரிக்கைகளும் விவாதிக்கப்பட உள்ளன,'' என்றார்.
இந்த கூட்டத்துக்குப் பின், புதிய ரயில்வே கோட்டம் தொடர்பான போராட்டம் வலுப்பெறும் என்று கூறுகிறார்கள்.

ஏற்கனவே பாலக்காட்டில் இருந்து சேலம் ரயில்வே கோட்டம் பிரிக்கப்பட வேண்டும் என்று கூறியபோது, கோவை போன்ற பெரு நகரங்களில் இருக்கும்போது பாலக்காட்டில் எப்படி ரயில்வே கோட்டம் வைத்தார்கள் என்று நினைத்தேன். இது மலையாளிகளின் மூளையை குறிப்பாக வளர்ச்சிப் பணிகளில் அவர்களுக்குள்ள அக்கறையைக் காட்டுகிறது.ரயில்வே கோட்டத்தை பாலக்காட்டில் இருந்து கோயம்புத்தூருக்கு மாற்றாமல் சேலத்திற்கு மாற்றியது நல்லது. பாலக்காட்டுக்கு அருகில் கோயம்புத்தூர் இருப்பதால் பாலக்காட்டில் இருந்து கோயம்புத்தூருக்கு மாற்ற வேண்டியதில்லை என்று கூறியிருப்பார்கள். தற்போது சேலத்துக்கு மாற்றியிருக்கிறார்கள் சேலத்துக்கு மாற்றிய பிறகு, சேலம் தலைமை இடமாக இருப்பதால் சேலத்திலே வளர்ச்சிப்பணிகள் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .சேலம் கோட்டம் திமுக ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டாலும், கொடுக்கிற கடவுள் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுப்பது போல அதன் பின்னர் வந்த அதிமுக ஆட்சி அதாவது எடப்பாடி ஆட்சியில் தமிழ் நாட்டிலேயே பெரிய பாலங்கள் சேலத்தில் கட்டப்பட்டன, அது போதாது என்று தனி இரயில்வே கோட்டம் கிடைத்ததால், சேலத்தில் வளர்ச்சிப் பணிகள் பெரிய அளவில் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கோவையை பிரித்து தனி இரயில்வே கோட்டம் கேட்கிறார்கள். அவர்களின் கோரிக்கை நியாயமானதே, கோவை பிரித்து தனி இரயில்வே கோட்டம் அமைப்பது கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். கோவை, ஈரோடு, திருப்பூர் ,பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகள் கொண்ட ரயில்வே பகுதிகளை கோவை கோட்டத்தின் கீழ் கொண்டு வரலாம். ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தை திருவனந்தபுரத்தில் இருந்து பிரித்து மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும் அல்லது நாகர்கோவில் திருநெல்வேலியை அடிப்படையாகக் கொண்டு தனி கோட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. அதற்கு காரணம் திருவனந்தபுரம் கோட்டத்தில் கன்னியாகுமரி மட்டுமே தமிழ்நாட்டில் இருப்பதால் கன்னியாகுமரி தொடர்ந்து கேரள மாநிலத்தவரால் புறக்கணிக்கப்படுகிறது என்பதே. அதையும் சரி செய்ய வேண்டும் நாகர்கோவில் அல்லது திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு தனி இரயில்வே கோட்டம் அமைப்பதே சிறந்தது.

கருத்துகள்
கருத்துரையிடுக