இலங்கையில் கடும் பஞ்சம்; தனுஷ்கோடிக்கு அகதிகள் வருகை
விடுதலைப்புலிகள் ஆட்சி காலத்தில் அகதிகள் இந்தியா வருவதற்கு சிங்கள ராணுவம் பல தடைகளை விதித்தார்கள்.கடல் கண்ணி வெடிகளை கூட போட்டார்கள், ஆனால் தற்போது விடுதலைப்புலிகள் இல்லாத நிலையில் இலங்கையிலிருந்து விலையேற்றம், பஞ்சம் காரணமாக மக்கள் தமிழ்நாடு வரத் துவங்கியுள்ளனர். இதுபற்றிய ஒரு செய்தி:
இலங்கையில் உணவு பொருட்கள் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதுடன், பஞ்சம் தலை விரித்தாடுவதால், ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு வந்த அகதிகள் வரத்துவங்கி உள்ளனர்.
அவர்களின் கண்ணீர் கதை:
கடும் பொருளாதார வீழ்ச்சியால், இலங்கையில் உணவு, அத்தியாவசிய பொருட்கள் விலை பன்மடங்கு உயர்ந்தது. மக்கள் வருவாய் இன்றி உணவுக்காக பரிதவிக்கின்றனர். இலங்கை யாழ்ப்பாணம், மன்னாரைச் சேர்ந்த கச்சேந்திரன், 24, மனைவி மரியகிலாரி, 20, நான்கு மாத குழந்தை நிசாஜ் மற்றும் தியுரி, 28, எஸ்தர், 11, மோசஸ், 5 ஆகிய ஆறு பேரும், இலங்கை பேச்சாளையில் இருந்து படகில் புறப்பட்டனர்.

அவர்கள் தனுஷ்கோடியில் இருந்து 7 கி.மீ., துாரம் உள்ள 6ம் மணல் திட்டையில், படகோட்டிகள் இறக்கி விட்டு சென்றனர். மண்டபம் இந்திய கடலோர காவல் படையின், 'கோவர்கிராப்ட்' கப்பல் வீரர்கள் அவர்களை மீட்டு மண்டபத்திற்கு அழைத்து வந்தனர்.
கச்சேந்திரன் கூறுகையில், ''இலங்கையில் ஒரு நாள் கூலியாக 500 முதல் 800 ரூபாய் வரை கிடைக்கும். அரை கிலோ பால் பவுடர் 900 ரூபாய், 1 கிலோ அரிசி 230 ரூபாய், சமையல் காஸ் சிலிண்டர் 4,200 ரூபாய் விற்கிறது. ''உணவுப்பொருட்களை வாங்க முடியாமல் பசியில் வாடினோம். வேறுவழியின்றி அகதியாக வந்தோம். இன்னும் பலர் அகதியாக இந்தியா வரவுள்ளனர்,'' என்றார்.
கஜேந்திரன் 2011 முதல் ஈரோடு, அரசலுார் அகதிகள் முகாமில் தங்கியிருந்தவர், 2020ல் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கஜேந்திரன் 2011 முதல் ஈரோடு, அரசலுார் அகதிகள் முகாமில் தங்கியிருந்தவர், 2020ல் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்துரையிடுக