தமிழர்களின் மனங்களை கோட்டாபய வெல்வார்:இலங்கை அரசாங்கம் அறிக்கை.


"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சமரசப் பேச்சை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்து முன்னெடுப்பார். இந்தப் பேச்சுகள் மூலம் தமிழ் மக்களின் மனதை ஜனாதிபதி வெல்வார் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதது:- "சம்பந்தன் சிறந்த மூத்த அரசியல்வாதி. அவர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு ஆரம்பித்துள்ள பேச்சை உள்நாட்டில் உள்ளவர்களும், வெளிநாட்டுத் தூதுவர்களும் வரவேற்றுள்ளனர்.

அரசியல் தீர்வு உள்ளிட்ட 5 விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியும் கூட்டமைப்பினரும் திறந்த மனதுடன் பேச்சை ஆரம்பித்துள்ளனர்.

இது ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் எதிரணியினருக்குப் பேரிடியாக அமைந்துள்ளது. கூட்டமைப்பினருடனான சமரசப் பேச்சை ஜனாதிபதி தொடர்ந்து முன்னெடுப்பார்.

இந்தப் பேச்சுகள் மூலம் தமிழ் மக்களின் மனதை ஜனாதிபதி வெல்வார். சஜித் அணியினர் என்னதான் திட்டங்கள் வகுத்தாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. அடுத்த தடவையும் கோட்டாபய ராஜபக்சவே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார்" - என்றார்.

என் கருத்து:

சிங்களர்களின் மனதை வெல்ல தவறிய ராஜபக்சே தமிழர்களின் மனதை எப்படி வெல்லப் போகிறார் என்று தெரியவில்லை. வீட்டுக்கு ஒரு தமிழர் இறந்த 2009 ஆம் ஆண்டு ஈழப்போரை அடுத்து நடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜபக்சே சுமார் 30 சதவிகித தமிழர்களின் வாக்குகளைப் பெற்று அதிபரானார். பின்னர் அவர் எங்களுக்கு தமிழர்களின் வாக்குகள் தேவை இல்லை என்றார். அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர்28 சதவிகித தமிழர்களின் வாக்குகளை மட்டுமே பெற்று தோற்றார் .அவர் பழையபடி 30 சதவிகித வாக்கு தமிழர்களின் வாக்குகளை பெற்று இருந்தால், அந்த தேர்தலில் மீண்டும் அதிபராகி இருப்பார். ஆனால் அந்த தேர்தலில் மைத்திரி அதிபரானார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு