உள்ளாட்சி தேர்தல் : முடிவுகள்:நாம் தமிழரின் செயல்பாடு ஒரு பார்வை.

நாம் தமிழர் கட்சி ஆனது அதிகமுறை தனித்து போட்டியிட்டு வரும் கட்சியாகும் .அந்தக் கட்சியானது 2016ஆம் ஆண்டு தேர்தலில் இருந்தே தனித்துப் போட்டியிட்டு வருகிறது .வேறு எந்த கட்சியும் அவ்வளவு ஆண்டுகள் தனித்து போட்டியிட்டது இல்லை. தற்போது கமல் மற்றும் தினகரன் முறையே இரண்டாயிரத்தி பத்தொன்பதாம்(2019) ஆண்டு தேர்தலில் இருந்து தனித்து போட்டியிட்டு வருகிறார்கள் .கமல் கட்சி ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து வந்திருக்கிறது. சட்டமன்ற தேர்தலை பார்த்தால் நாம் தமிழர் கட்சியை மாற்று கட்சிக்கான வரிசையில் முன்னிலையில் உள்ளது.  2021 ஆம் ஆண்டு தேர்தலில் சுமார் 7 சதவீத வாக்குகளை வாங்கி நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி என்று நிரூபித்தது. ஆனால் அந்த கட்சியின் மிகப்பெரிய பலவீனம் எந்த ஒரு இடத்திலும் வலுவாக இல்லாதது. தமிழக அளவில் 7 சதவீத வாக்குகள் என்றால் எல்லா இடங்களிலும் சுமார் 5 லிருந்து 10% வரை வாக்குகளை வாங்குவது, பேரூராட்சி, ஊராட்சி நகராட்சி வார்டுகளில் அதிகபட்சம் 100 லிருந்து 2000 வங்கிகளை வாங்கினாலே வெற்றிபெற முடியும். அப்படிப் பார்த்தால் நாம் தமிழர் கட்சி ஆனது கடந்த சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சி அதிக இடங்களை பெற்ற தொகுதிகளை தேர்ந்தெடுத்து, அந்த தொகுதிகளில் அதிக இடங்களைப் பெற்ற ஊராட்சி, நகராட்சி ,மாநகராட்சிகளில் கவனம் செலுத்தி, வாக்காளர்களை இரண்டு,
 மூன்று முறை சென்று சந்தித்து இருந்தால் வெற்றி பெற்று இருப்பார்கள். ஆனால் அவர்கள் வெற்றிக்கான சூத்திரத்தை இதுவரை அறிந்து கொள்ளவே இல்லை. அதன் காரணமாகத்தான் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்து இருக்கிறார்கள். இதற்கு முன்பு அவர்கள் நடைபெற்ற ஊராட்சி தேர்தலில், ராஜாக்கமங்கலம் ஊராட்சியில் மட்டும் ஒரு வார்டு உறுப்பினரை பெற்றிருந்தார்கள். தற்போது பேரூராட்சிகளில் ஆறு உறுப்பினர்களை பெற்றிருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி தேமுதிக மற்றும் தினகரன் நாம் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. அவர்கள் சீமானை விட குறைவான வாக்கு சதவீதத்தை கொண்டிருந்தாலும், அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அவர்களின் கட்டமைப்பு வலுவாக இருக்கிறது .திமுக ,அதிமுக, பாஜக போன்ற ஆளும் கட்சிகளைத் தாண்டி அவர்கள் பெற்ற வெற்றியானது, அவர்களின் கட்சி கட்டமைப்பு சில இடங்களில் திமுக ,அதிமுகவை விட வலுவாக இருப்பதையே காட்டுகிறது. சீமான் கூட வரும் காலங்களில் 7 சதவிகித வெற்றி பெற முயல வேண்டும் .அதாவது வரப்போகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 2024ஆம் ஆண்டு இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து தற்போதே வேலையைத் தொடங்கி வெற்றி பெற வேண்டும் .மேலும் வரப்போகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சுமார் பதினைந்து முதல் இருபது தொகுதிகளை தேர்ந்தெடுத்து, தற்போதே குறிவைத்து வேலைகளைத் தொடங்கி வெற்றி பெற வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு