நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதிர் பார்த்தபடியே வந்துள்ளது .மேற்கு மண்டலத்தில் கூட திமுக வெற்றி பெற்றிருக்கிறது .இதுகூட எதிர்பார்த்ததுதான் 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் படுதோல்வி கண்ட திமுக, பின்னர் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றது. அதன்பின் பொங்கலூர் பழனிச்சாமி அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இப்போதும் அதே கதை தான் நடந்தது, மக்கள் ஆளும் கட்சிக்கு வாக்களித்தால் உள்ளாட்சித் தேர்தலில் தேவையானவற்றை கேட்டுப் பெற முடியும் என்று திமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகள்தான் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்கின்றன. எனவே ஆளும் கட்சியில் இருப்பவர்கள் உள்ளாட்சி அமைப்புகளை பதவியில் இருந்தால் தான் தங்களது தேவையை விரைவாக நிறைவேற்ற முடியும் என்பதை மக்கள் உணர்ந்து வைத்திருக்கிறார்கள் .அதன் வெளிப்பாடுதான் திமுகவுக்கு கிடைத்த வெற்றி. சில தேர்தல் வரலாறு அறியாத மூடர்கள் திமுக மேற்கு மண்டலத்தை கைப்பற்றி விட்டதாக சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். அது 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது தான் தெரியவரும் .2024 இல் 2019-ல் இருந்ததுபோல் மோடி அரசுக்கு எதிரான எதிர்ப்புகள் இருந்தால் திமுக வெற்றி பெறும். இல்லை திமுக அரசுக்கு எதிராக எதிர்ப்புகள் இருந்தால் 1998,2009ல்(மேற்குமண்டலத்தில் மட்டும்) தோற்றது போல் தோல்வியடையும்.
கருத்துகள்
கருத்துரையிடுக